அவள் ஒரு அநாதை!

  • 11

அன்பிருந்தும் அம்மா இல்லை
அக்கறையிருந்தம் அப்பா இல்லை

பாசமிருந்தும் சகோதரங்கள் இல்லை
அறிவிருந்தும் ஆசான் இல்லை
நல்ல குணமிருந்தும் நட்பு இல்லை
பண்பிருந்தும் பக்கத்தில் யாருமில்லை

வெற்றியில் பங்குகொள்ள
தோல்வியில் தோள்தர
சொந்தமொன்றில்லை

கண் எட்டும் தூரம் வரை
உலாவித்திரியும் மனித உருவங்கள்
அங்கே அவளுக்கென்று யாருமில்லை

விரிந்த கடல் பரந்த வானம்
வீசும் தென்றல் மணக்கும் மலர்கள்
கொட்டும் நீர்வீழ்ச்சிகள்
சலசலக்கும் ஆறுகள்

வளைந்த வானவில் வட்ட நிலா
இயற்கை அன்னையின் அன்பளிப்புகளே
அவள் அனந்தர சொத்துக்கள்
இவை இருந்தும் அன்பாக ஆறுதலாக
அரவணைக்க யாருமில்லை
அவள் ஒரு அநாதை!

Rushdha Faris
South Eastern University of Sri Lanka.

அன்பிருந்தும் அம்மா இல்லை அக்கறையிருந்தம் அப்பா இல்லை பாசமிருந்தும் சகோதரங்கள் இல்லை அறிவிருந்தும் ஆசான் இல்லை நல்ல குணமிருந்தும் நட்பு இல்லை பண்பிருந்தும் பக்கத்தில் யாருமில்லை வெற்றியில் பங்குகொள்ள தோல்வியில் தோள்தர சொந்தமொன்றில்லை கண்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *