முதலைகளுடன் போராட்டம்

முதலைகளுடன் போராட்டம்

கடற்கொள்ளையர்களின் புதையல்
【The treasure of pirates】
【பாகம் 25】

சார்லட் இருக்கும் இடத்தை அடைய முன்னர் ஒரு ஏரியை கடக்க வேண்டி இருக்கிறது. தாத்தா இந்த காடுபற்றியும் அதில் உள்ள மர்ம விலங்குகள் பற்றியும் இன்னும் தெளிவாக விளக்கி கொண்டே வந்தார்.

“இதுதான் நீங்க சொன்ன ஏரியா தாத்தா!”

“ஆமா”

“அது சரி. நாம ஏன் சுத்தி போகக்கூடாது. ஆபத்து என்று தெரிஞ்சும் இந்த ஆற்றில் இறங்கித்தான் போகணும் என்னு அவசியம் ஒன்னுமில்லையே!” என்றாள் லில்லி.

“அவசியம் இருக்கு. நமக்கு நேரம் அதிகம் இல்ல. அதுக்குள்ள நாம மலையை அடையனும். ஏரியை சுத்தி போனா ஆபத்து குறைவு தான். ஆனா அதுக்கே மூணு நாள் ஆகிடும். நம்ம பயணமே வேஸ்ட் ஆகிடும்.” என்றார் தாத்தா.

“ஓஹ். அதுதான் விஷயமா?”

“சரி எல்லோருக்கும் நீச்சல் தெரியும் தானே?” என்று கேட்டார் தாத்தா.

“அதுல நாங்க கில்லாடிங்க.” என்ற ஐரிஸ் லில்லியையும் ஜிம்மையும் பார்த்து சிரித்தாள்.

அவர்கள் தான் கடல்லியே வாட்டர் போலோ விளையாடினவங்க ஆச்சே. இப்போ சொல்லவா வேணும்.

“சரி. அப்போ குதிச்சிடுங்க. யாரு முதல்ல அடுத்த கரையை அடையிறாங்களோ அவங்களுக்கு ஒரு சின்ன பரிசு காத்துகிட்டு இருக்கு.” என்று சொன்னதும் தான் தாமதம் நால்வரும் பக்கென்று ஓடிப்போய் குதித்தார்கள்.

தாத்தாவும் ஓடிப்போய் தண்ணீரில் குதித்தார். கிட்டத்தட்ட ஒரு நீச்சல் போட்டி போலவே இருந்தது. அரை மைல் நீளமான ஏரி அது. இப்படியே போய்க்கிட்டு இருக்கும் போது சட்டென “ஆஹ்” என்று ஒரு குரல். திரும்பி பார்த்தால் லில்லி.

“என்னாச்சு லில்லி. எதுக்காக கத்தினே?” என்று கேட்டாள்.

அப்போது திரும்பிய போதுதான் தெரிந்தது அவளை சுற்றி தண்ணீர் வடிவத்திலேயே இரண்டு முதலைகள் இருப்பது.

“ஓஹ்.மை காட். அசையாம அப்படியே இரு லில்லி.” என்றாள் ஐரிஸ்.

“எ. எ எனக்கு ரொம்ப பயமா இருக்கு ஐரிஸ். அதுங்க என்னை நோக்கி தான் வருது” என்று பயத்துடன் கூறினாள்.

“நீ கொஞ்சம் பொறுமையா இரு லில்லி. நான் அதுங்களை டைவெட் பண்ணுறேன்.” என்றான் யுவான்.

தாத்தாவின் கூரான அம்புகளை எடுத்து கொண்டு நீருக்குள் குழியோடி போய் லில்லியை அங்கிருந்து நகர்த்திவிட்டு அவன் நின்று கொண்டான். அதுவரை மெல்ல மெல்ல நீந்தி வந்த முதலைகள் அவன் அந்த இடத்துக்கு வந்ததும் வேகமாக தாக்க ஆரம்பித்தன. எல்லோரும் பயத்தின் விளிம்பில் நின்றனர். யுவான் வெற்றிகரமாக ஒரு முதலையின் கண்களை பார்த்து அம்பை குத்த அதுவும் ஓடிவிட்டது. ஆனால் இன்னொரு முதலை விடாமல் போராடியது. அது யுவானது காலை கவ்விப்பிடித்து கொண்டது. எவ்வளவு அடித்தும் குத்தியும் அவனது காலை விடாமல் தன் பற்களால் காயப்படுத்தியது.

“வேறு வழியில்லை.” என்ற தாத்தா அந்த இடத்துக்கு நீந்தி சென்று முதலையின் வயிற்றில் அம்பினால் குத்தினார். அவ்வளவு தான் மொத்த சக்தியையும் இழந்த நிலையில் முதலை வாயை தளர்த்தியது. ஏரி முழுக்க ரத்தமாக மாறியது. அதில் பாதி முதலையின் ரத்தம் மீதி யுவானது காலில் ஏற்பட்ட காயத்தால் வந்தது. அதன் பின்னர் இவர்களும் அந்த இடத்துக்கு நீந்தி யுவானை இழுத்து கொண்டு கரையை அடைந்தனர். அந்த முதலையும் வயிற்றில் குத்தப்பட்ட அம்போடு நீருக்குள் மறைந்து போனது. கரைக்கு கொண்டுவந்த யுவான் காயத்தால் கொஞ்சம் மயங்கி கிடந்தான்.

“ரொம்பவும் ப்ளீட் ஆகிட்டு இருக்கு. உடனே இதை ஸ்டாப் பண்ணனும்.” என்றாள் ஐரிஸ்.

“அவன் கொஞ்சம் கொஞ்சமாக கான்சென்ஸ் இழந்துட்டு போறான். இப்படியே போனா உயிருக்கே ஆபத்து.” என்றான் ஜிம்.

“கவலைப்படாதீங்க. என்கிட்ட ஒரு பிளான் இருக்கு.” என்ற தாத்தா. அவர் கொண்டுவந்த பையில் இருந்த ஜாடியை வெளியே எடுத்தார்.

“இது ஒரு மூலிகை களிம்பு. காயம் பட்ட இடத்தில் வைத்து கட்டி விட்டால் போதும். எல்லாம் சரியாகிடும்.” என்றார்.

அதன்பின்னர் உடனே யுவானது காலை துப்பரவு செய்து களிம்பை வைத்து கட்டிவிட்டனர். இருந்தும் கொஞ்ச நேரம் வரை அவன் மயக்கத்திலேயே இருந்தான்.

“இப்போ என்ன பண்ணுறது இவன் வேற மயக்கத்திலே இருக்கான்.” என்றாள் ஐரிஸ்.

அப்போது மயக்கத்தில் இருந்த யுவானுக்கு சில கனவு போன்ற இலூஷன் எல்லாம் தோன்றுகிறது. அதிலே அவன் கண்ணுக்கு ஐரிஸ் உடல் முழுவதும் ரத்தமாக இருப்பது போலவும் ஏதோ ஒரு புதையலையும் தாத்தா மரணத்தருவாயில் யுவான் மடியில் இருப்பது போலவும் அவனுக்கு தோன்றுகிறது.

அந்த அதிர்ச்சியிலேயே மயக்கத்தில் இருந்து எழுந்தான் யுவான். கால் வலியை இப்போது தான் உணர்ந்தான். அவன் எழுந்ததும் எல்லோருக்கும் மகிழ்ச்சி. அவனால் சரியாக நடக்க முடியவில்லை. அதனால் ஐரிசும் ஜிம்மும் சேர்ந்து தோளில் தூக்கி கொண்டு பயணத்தை ஆரம்பித்தனர். அவர்கள் இருவருக்கும் நன்றியை சொன்னான்.

“இதுக்கெல்லாம் எதுக்கு நன்றி.” என்று ஐரிசும் பதில் சொன்னாள்.

அவன் மனதில் ஆயிரம் கேள்விகள் வந்து போயின. எது நிஜம் எது கனவு என்ற குழப்பம் உருவானது. தான் பார்த்தது எல்லாம் என்ன? என்று மனம் யோசிக்க ஆரம்பித்தது.

மறுபுறம் சார்லட் அந்த சாமுரியம் உலோகத்தை பயன்படுத்தி ஆயுதங்களை செய்து கொண்டிருந்தாள்.

“சார்லட் போதுமான ஆயுதங்கள் எல்லாம் தயாராகிவிட்டதே. இப்போதே இதெல்லாம் எடுத்துக்கிட்டு மலைகிட்ட போகலாமே” என்றான் அந்த பையன்.

“அவங்களுக்கு தேவையான ஆயுதங்கள் தயாராகிவிட்டது. ஆனா எனக்கு தேவையான ஆயுதங்களை செய்ய இதுதான் சரியான நேரம்” என்றாள் அவள்.

“என்ன சொல்லுறே. உனக்கு எதுக்கு ஆயுதங்கள்?” என்று கேட்டதும் அவள் முகத்தில் ஒரு கோபம் படர்ந்தது.

“பழைய கணக்கு ஒன்னு பாக்கி இருக்கு.” அதுக்கு தான் என்று சொன்னாள்.

“ஏதோ சொல்லுறே. ஒன்னும் புரியல போ.” என்றான்.

அவனும் புரியாமல் அவளுடன் வேலையை ஆரம்பித்தான். இன்னொரு பக்கம் கேப்டன் குக் ஒரு பாறை மாதிரி இடத்தில் ஓய்வெடுத்து கொண்டிருந்தான். மாரியாவுக்கும் காலில் விலங்கெல்லாம் போட்டு தப்பிக்க வழியின்றி தான் கட்டி வைத்திருந்தான். அவர்கள் கொண்டு வந்த சரக்கு போத்தல்கள் தீர்ந்து விட்டதால் எல்லோரும் ஒருவித போதையுடன் இளைப்பாறிக்கொண்டிருந்தனர்.

அப்போது தான் அந்த செடி அவள் கண்ணுக்கு தென்பட்டது. அது ஒரு கள்ளிச்செடி அந்த வகை கள்ளியின் பாலானது இரும்பையே உருக்கிவிடும். அதனையும் அந்த விலங்கையும் மாறி மாறி பார்த்தாள் மாரியா.

தொடரும்.
A.L.F. Sanfara
The Treasure of Pirates சிறுகதை வியூகம் வெளியீட்டு மையம்