பிலீஸ் இந்தக் கவிதையை வாசிக்காதீங்க

பிலீஸ் இந்தக் கவிதையை வாசிக்காதீங்க

ஆண்டு கால ஆசை
ஆரும் வாசிக்காத கவிதை
எழுத ஆசை
எழுதத்ததான் முடியவில்லை

அமைதியாக எழுதினால்
ஆரவாரமாய் வாசித்தனர் பலர்
ஆர்வமாய் எழுதினால்
ஆர்பாட்டம் செய்தனர் சிலர்
அதற்காக எழுதிய கவியை
அழித்திட விரும்பவில்லை

ஆசையை தலைப்பாகயிட்டு
ஆர்வத்துடன் எழுதினேன்
ஆரும் வாசிக்கமாட்டார்களென்று
புரிந்தோர் வாசிக்கவில்லை
புரியாதோர் வாசிப்பதை
நிறுத்தவில்லை

ஆரும் வாசிக்காத கவிதை
என்னும் ஆசையில் தவறில்லை
அதை நிறைவேற்ற விடாது
போட்டியிட்டு வாசிக்கும்
உம்மிள் தவறென
விவாதித்து பலனுமில்லை

ஆனால் வேண்டாம் என்பதை
ஆர்வத்துடன் செய்வது
ஆர்வக்கோளாறு என்றால்
புரிவதுமில்லை

Ibnuasad
ஆசிரிய பக்கம் கவிதை