ஒருத்தன்

வஞ்சி அவளின் ஆடி அசையும்
கொடியிடையில் கோலமிட
நினைத்தான் – ஒருத்தன்

ஒய்யாரமாக ஒடிந்து
செல்லும் அவள்
அழகை பருகிட
நினைத்தான் – ஒருத்தன்

பளிச்சென்ற அவள்
பால்முகத்தை ஏலமிட
நினைத்தான் – ஒருத்தன்

கள்ளமில்லா அவள்
உள்ளத்தை களவாட
நினைத்தான் – ஒருத்தன்

அந்தோ பரிதாபம்
கஞ்சி வடிக்க
காசு இல்லாத அவள்
வறுமையில் துணை நிற்க
ஒருத்தனும் இல்லை!

Rushdha Faris
South Eastern University of Sri Lanka.

Leave a Reply

%d bloggers like this: