புதையலை எடுக்க ஒரேவழி உண்மையான வாரிசுகளுடன் செல்வதுதான்

  • 18

கடற்கொள்ளையர்களின் புதையல்
【The treasure of pirates】
【பாகம் 26】

அவள் கைவிலங்கானது மரத்தால் செய்யப்பட்டது. அதனை இந்த கள்ளியின் பால் எந்த அளவுக்கு பாதிக்கும் என்று அவளுக்கு தெரியாது. மாரியாவுக்கு ஒரு யோசனை தோன்றியது. எப்படியாவது அந்த செடியின் பாலை தன் கையில் படுத்தி கொண்டால் கை வெந்து அந்த வலியுடன் விலங்கின் துளை வழியாக கையை வெளியே எடுத்து விட முடியும் என்று நம்பினாள்.

அப்படியே மெல்ல மெல்ல நகர்ந்து செடி அருகே சென்றாள். காலால் முள் குத்த குத்த வலியை பொறுத்து கொண்டே செடியை ஒடித்தாள். அதுவும் உடைந்த இடம் வழியாக பால் வடிய அதில் கையை வைத்து தான் நினைத்ததை செய்தாள்.

அமிலத்தன்மை நிறைந்த அந்த கள்ளியின் பால் அவள் கையை பதம் பார்த்தது. அவ்வளவு வழியிலும் பல்லை கடித்து கொண்டு கேப்டன் குக் எழுந்து விடாமல் இருக்க பொறுத்து கொண்டாள்.

ஒருவழியா கை வெளியே வந்து விட்டது. இதுதான் சமயம் என்று மாரியா ஓட்டம் பிடித்தாள். தன் பொறுப்பில் இருந்த மாரியா தப்பியோடியது கூட தெரியாமல் கேப்டன் குக் தூங்கி கொண்டிருந்தான்.

மறுபுறம் நடக்கவே சிரமப்படும் யுவானை ஆளுக்காள் மாறி தோளில் தாங்கி கொண்டே சார்லட் இருக்கும் இடத்துக்கே வந்து சேர்ந்தனர் ஐரிசும் குழுவினரும்.

சார்லட்டும் அந்த பையனும் மலைக்கு செல்வதற்காக வேண்டிய ஆயுதங்களை எல்லாம் மூட்டையாக கட்டிக்கொண்டு தேவையான உணவுகளையும் எடுத்துக்கொண்டு புறப்பட தயாரானார்கள்.

அப்போதுதான் தூரத்தில் ஐவர் வருவது தெரிந்தது. அவர்களை தன்னிடம் உள்ள டெலஸ்கோப்பால் பார்த்தாள் சார்லட்..

இங்கே தூரத்தில் சார்லட்டை கண்டதும் தாத்தா கையால் சைகை செய்தார். அவரை அடையாளம் கண்டுகொண்ட சார்லட், கூட வருபவர்களை யாரென்று பார்த்தாள். ஆனால் அவர்கள் புதியவர்கள் என்பதால் அவளுக்கு தெரியவில்லை.

“ஏன் தாமதிக்குறீங்க போகலாமா?” என்று அந்த பையன் கேட்டதும்.

“இரு வேண்டப்பட்டவங்க வராங்க.. சந்திச்சிட்டு போகலாம்.” என்றாள்.

“என்னது வேண்டப்பட்டவங்களா? இங்க கொடுங்க” என்று பைனாக்குளரை வாங்கி பார்த்தவன்.

“ஐயையோ இந்த கிழவனா! சும்மாவே நம்மளை ஓட்டு ஓட்டுன்னு ஓட்டுவான். இப்போ கூட வேற ஆளுங்களை கூட்டிட்டு வரானே. இப்போ என்ன பண்ணப் போறானோ?” என்று புலம்ப சார்லட் அவனை முறைத்தாள்.

அவர்கள் வந்து சேரும் வரை காத்திருந்தார்கள். கொஞ்ச நேரத்தில் அவர்கள் எல்லோரும் சார்லட் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

“ஹே ஓல்ட் மேன். இவங்கல்லாம் யாரு தீவுக்கு புதுசா?” என்று கேட்டாள் சார்லட்.

“நீ சொல்றது சரிதான் இவங்க தீவுக்கு மட்டும் புதுசு இல்ல. எனக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க கூட.” என்றார்.

அவர்கள் அவளிடம் தங்களை அறிமுகப்படுத்தி கொண்ட பின்னர்.

“சரி நீங்க எங்க கிளம்பிட்டீங்க மூட்டை முடிச்சல்லாம் கட்டிக்கிட்டு” என ஜிம் கேட்டான்.

அதற்கு சார்லட் கூட இருக்கும் சிறுவன்.

“அதோ தெரியுற மலைக்கு போறோம். அங்க நடக்குற நிகழ்வுக்கு ஆயுதங்கள் சப்ளை பண்ண” என்றான்.

“என்னது ஆயுதங்களா? ஆயுதங்கள் இங்க பயன்படுத்த முடியுதா?” என்று யுவான் கேட்டான்.

“சாதாரணமாக ஆயுதங்களை இங்க பயன்படுத்த முடியாதுதான். ஆனா இந்த சார்லட் உருவாக்கின ஆயுதங்களை இங்க மட்டுமில்ல நீங்க விண்வெளியிலேயும் பயன்படுத்த முடியும்.”

“வாவ்! அவங்க பேச்சே எவ்வளவு கெத்தா இருக்கு பாரேன்.” என்று ஜிம் லில்லிகிட்ட சொல்ல அவளோ முறைத்தாள்.

“உனக்கு பொறாமை.” என்று முணுமுணுத்து கொண்டே ஜிம்.

“ஆஹ்ஹ் அப்போ ரொம்ப ஸ்பெஷல் என சொல்லுங்க. உங்க ஆயுதங்களை நாங்க பார்க்கலாமா?” என்றொரு கேள்வி கேட்டான்.

சற்று தயங்கிய சார்லட் மூட்டை முடிச்சில்லாம் பிரிச்சு அவர்களிடம் அந்த ஆயுதங்களை காட்டினாள். அதனை பார்த்து வியந்த இவர்கள் அனைவரும் மூர்ச்சை ஆகாத குறை.

“உண்மையிலேயே அற்புதம். எப்படி உங்களால இதை பண்ண முடிஞ்சது?” என ஐரிஸ் அவளிடம் கேட்டாள்.

அவர்கள் உலோகம் கண்டுபிடித்தது முதல் இப்போது வரை நடந்தவற்றை ஒன்று விடாமல் சொல்லிமுடித்தான் பையன் பெருமையுடன்.

அப்போது தான் சார்லட் இடுப்பில் சொருகி இருந்த அந்த ஆயுதம் யுவான் கண்ணுக்கு பட்டது. அவன் அதனை நோட்டமிடுகிறான் என்று தெரிந்ததும் துணியை இழுத்து சரி செய்தாள் சார்லட்.

“க்கும். சரி சரி நேரமாகிட்டே இருக்கு நாம இங்கிருந்து கிளம்பியாகனும்” என்றாள். இவர்களை கேள்வியோடு நோக்கி,

“நாங்களும் அங்கதான் போகப்போறோம். எங்க அப்பா அம்மாவை காப்பாற்ற அவர்கள் தான் எங்களுக்கு உதவ முடியும்.” என்றாள் ஐரிஸ்.

“அப்போ வாங்க இருட்டுறதுக்குள்ள இங்கிருந்து போகலாம்.” என்றவள் முன்னே நடக்க மற்றவர்கள் பின்னே நடந்து வந்தனர்.

கொஞ்ச நேரத்தில் எல்லாம் முழிப்படைந்த கேப்டன் குக் நடந்ததை அறிந்து கொதித்தான்.

“டேய் மடச்சாம்பிராணிங்களா? எந்திரிங்க டா. இங்க இருந்து நம்ம கைதி தப்பி ஓடிட்டா எழுந்து முதலில் அவளை பிடிங்க”

என்றதும் எல்லோரும் ஒருவாறாக எழும்பி மாரியாவை தேட ஆரம்பித்தனர்.

“என்னை டோரடோ தீவுக்கு அழைச்சிட்டு போறதா சொல்லி. இங்க வந்து மாட்டிவிட்டுட்டு தப்பிச்சி வேற போறியா நீ உன்னை பிடிச்சதும் என்ன பண்ணுறேன். பார்.” என்று கத்தினான்.

காட்டு வழியாக நடந்து மலைக்கு சென்று கொண்டிருந்த நமது குழுவின் வயதான தலைவர் யுவானை ரகசியமாக அழைத்து ஏதோ சொல்ல முற்பட்டார்.

அதை சார்லட் ஓரக்கண்ணால் கண்டுகொண்டாள். மறுபுறம் நமது ஐரிசும் நண்பர்களும் கடைசியில் நம்மளை இப்படி நிலைக்கி ஆளாகிட்டானே அந்த கடவுள் என்று புலம்பி கொண்டே வந்தனர்.

“இந்த தீவு பத்தி உங்களுக்கு வேறன்ன எல்லாம் தெரியும் தாத்தா?” என்று கேட்டான் யுவான்.

“இது ஒரு சொர்க்கம் என்னு சொல்லலாம். நம்ம முன்னோர்கள் கொள்ளையிட்டு கொள்ளையிட்டு இங்கதான் சேமிச்சு வெச்சாங்க. இங்க பலநூறு வருடங்கள் தாண்டிய புதையல் எல்லாம் இருக்கு. அதோ அந்த மலையில் தான் எங்கோ அது மறைத்து வைக்க பட்டிருக்கு. எத்தனையோ கெட்ட எண்ணங்கள் கொண்டவர்கள் இந்த புதையலை அடைய முயற்சி பண்ணி அவங்க உயிரையே விட்டிருக்காங்க. ஏன்னா உண்மையிலேயே கடல் தேவதை அதெல்லாம் பாதுகாத்து கிட்டு இருக்கு.” என்றார்.

“அந்த இடம் எதுன்னு உங்களுக்கு தெரியாதா தாத்தா?” என்று கேட்டான் ஜிம். அப்போது சார்லட் பேசினாள்.

“அவருக்கு மட்டுமில்ல யாருக்கும் தெரியாது. உண்மையான வாரிசுகளின் உடல் தான் அங்க போறதுக்கான ஒரே வழி” என்றாள்.

“உண்மையான வாரிசுகளா? அப்படின்னா?” என ஐரிஸ் கேள்வி கேட்க அதுபற்றி கூறினாள் சார்லட்.

மாரியா அங்கிருந்து ஓட்டமாய் ஒரு இடத்திற்கு வந்து சேர்ந்தாள். களைப்பினால் ஏற்பட்ட மூச்சு சத்தத்தை அவளால் அடக்க முடியவில்லை. அதே சமயம் அருகில் அந்த கொடூர காட்டுவாசிகள் நடப்பது போலவும் அவளுக்கு தோன்றியது.

சுமார் ஆறேழு பேர் கொண்ட குழு அது. வெயிலில் வியர்வை சொட்ட சொட்ட பார்வையும் சரியாக தோன்றவில்லை. ஆனால் அதிலும் குறிப்பாக ஒரு பெண் இவளை போலவே தோற்றம் கொண்டவள் அவர்களுடன் நடந்துவருவது தெரிந்தது. உற்றுப்பார்த்தாள் மாரியா.

“அ ஐரிஸ் அது நம்ம பொண்ணு ஐரிஸ் ஆச்சே”

ஆயிரம் குழப்பங்களுடன் பயமும் தொற்றிக்கொள்ள அவளை அழைக்க வாயை திறந்தாள். அவ்வளவு தான் அதற்குள் யாரோ வந்து அவளை அடித்து மயக்கி அலாக்காக தூக்கிக்கொண்டு சென்றனர்.

தொடரும்
A.L.F. Sanfara

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirates】 【பாகம் 26】 அவள் கைவிலங்கானது மரத்தால் செய்யப்பட்டது. அதனை இந்த கள்ளியின் பால் எந்த அளவுக்கு பாதிக்கும் என்று அவளுக்கு தெரியாது. மாரியாவுக்கு ஒரு யோசனை…

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirates】 【பாகம் 26】 அவள் கைவிலங்கானது மரத்தால் செய்யப்பட்டது. அதனை இந்த கள்ளியின் பால் எந்த அளவுக்கு பாதிக்கும் என்று அவளுக்கு தெரியாது. மாரியாவுக்கு ஒரு யோசனை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *