பண்பாடுகளுக்கான பாதை.

0 Comments

பண்பாடும் மனிதமும் விருத்தியான வாழ்வுக்கான வளங்கள். ஜப்பானின் விருத்தி பண்பாடுகளினதும் மனிதத்தினதும் அடையாளம்.

ஜப்பானிய பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளில்,

“பண்பாடுகளுக்கான பாதை”

என்ற பாடம் கற்பிக்கப்படுகின்றது. மாணவர்கள் அதனூடாக பிறருடன் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதை கற்றுக் கொள்கின்றனர். அதனால் இன்று உலகில் மரியாதை பண்பாடுகளைப் பேணி நடப்பதில் ஜப்பான் முதலிடங்களில் உள்ள நாடுகளில் ஒன்றாகும்.

தமது புதிய பணியாளர்களின் காலணிகளை நிறுவனங்களின் அதிபர்கள் மக்களின் முன்னிலையில் துடைத்து விடுவது ஜப்பானில் பரவியிருக்கும் மற்றுமொரு கலாச்சாரமாகும். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற விடயத்தை உடைத்து அதிபர்களுக்கும் பணியாளர்களுக்குமிடையில் வித்தியாசம் எதுவுமில்லை என்ற சிந்தனையை விதைப்பதே இதன் நோக்கமாகும்.

ஜப்பானில் ஆசிரியர் மாணவர்களிடம் கீழ்வரும் வாசகத்தை அடிக்கடி கூறுவார்:

“உன் வெற்றி ஜப்பானின் வெற்றி. உன் தோல்வி ஜப்பானின் தோல்வி”

விஷேட தேவையுடையவர்களை பரிகசித்தல், கேவலம் செய்தல் போன்ற குற்றச் செயல்கள் செய்ததாக நிரூபிக்கப்பட்டால் 5 வருடங்கள் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படும். அதனால்தான் இன்று உலகில் ஊனமுற்றோர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது.

ஜப்பான் பொது இடங்களில் பணமோ பொருளோ தொலைந்தது பற்றிய குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படாத உலகின் ஒரேயொரு நாடு. ஜப்பானியர்கள் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் விடயத்தில் மிகக் கவனமாக இருந்து வருகின்றனர்.

சுத்தம் செய்யும் தொழில் மிகவும் கௌரவத்துக்குரிய தொழிலாக பார்க்கப்படுகின்றது. அத் தொழிலில் ஈடுபடுவோருக்கு கனிசமான அளவு சம்பளம் வழங்கப்படுகின்றது.

இன்னொரு மிக முக்கியமான விடயம்: இஸ்லாம் போதிக்கும் நல்ல விடயங்களை கடைப்பிடிக்கும் நாடுகள் பற்றிய ஆய்வொன்று அமெரிக்காவில் 2014 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. அதில் ஆரம்ப இடங்களை ஜப்பான், அயர்லாந்து, சுவீடன் போன்ற இஸ்லாமிய நாடுகள் அல்லாத நாடுகளே பெற்றுக் கொண்டன என்பது மிகவும் ஆச்சரியமான விடயம்.

பண்பாடுகள்தான் வாழ்வு அதுதான் வெற்றியின் ரகசியம். அது இல்லையேல் கல்வியுமில்லை பட்டங்களுமில்லை.

பாஹிர் சுபைர்

Leave a Reply

%d bloggers like this: