மனிதன் கற்காலம் முதல் இன்றுவரை

  • 11

பழைய கற்காலம்

பழைய கற்காலத்தில் மனிதர் கருவிகள் பயன்பாடு, ஓரளவு கண்டுபிடிப்பு படிமலர்ச்சி இரண்டின் இணைநிகழ்வின் அடிப்படையிலேயே அமைந்தது. பண்டைய மாந்தர் கிடைத்ததை உண்டு வாழ்ந்த, ஏற்கெனவே இருகால் நடை வாய்த்திருந்த முன் மாந்தவினத்தில் இருந்து தோன்றியவரே. அப்போது மனித மூளை இன்றைய மனித் மூளையைப் போல மூன்றில் ஒருபங்காக அமைந்திருந்த்து. மிக முந்திய மாந்தர் வரலாறு முழுவதும் கருவிப் பயன்பாடு ஓரளவு மாறாமலே இருந்தது.

சுமார் கி.மு 50,000 ஆண்டளவில் புதிய கருவிப் பயன்பாடும் புதிய நடத்தைத் தொகுதியும் மாந்தரினத்தில் முகிழ்த்தன. தொல்லியலாளர்கள் இதை மொழியின் தோற்றத்தோடு இணைக்கின்றனர்.

கற்கருவிகள்

அசூலியத் தொழில்நுட்பக் கட்டத்தின் கைக்கோடரிகள், அழுத்தமுறைப் பிளப்பால் உருவாக்கிய கூர்முனை, பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே முன்மாந்தவினம் முதனிலைக் கற்கருவிகளைப் பயன் படுத்தத் தொடங்கிவிட்டது. மிக முந்திய கருவிகள் பிளவுண்ட பாறைத்துண்டுகள் போலவே அமைந்தன, 75,000 ஆண்டுகளுக்கு முன்பு உருவாகிய அழுத்தமுறைப் பிளப்பு கூரிய முனை வாய்ந்த திறமை கூடிய கோடரிகளை உருவாக்க வழிவகுத்தது.

தீயின் கையாளல் தொடக்கநிலை மாந்தரின் தீக்கட்டுபாடு

தீயின் கண்டுபிடிப்பும் பயன்பாடும் பல அரிய பணிகளுக்கான ஆற்றலாக மட்டுமன்றி, மாந்தரினத் தொழில்நுட்ப படி மலர்ச்சியில் மாபெரும் திருப்புமுனையாகவும் அமைந்தது. தீக் கண்டுபிடிப்பின் நாள் அரியப்படவில்லை. இது ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்திருக்கலாமென, மனிதகுலத் தொட்டிலாகக் கருதப்படும் தொன்மாந்தர் வாழ்ந்த இடங்களின் அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த எரிந்த விலங்கு எலும்புச் சான்றுகளில் இருந்து அறியப்பட்டுள்ளது.

நிமிர்நடை மாந்தன் வாழ்ந்த ஐந்நூறாயிரம் முதல் நானூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தீயைக் கட்டுபடுத்தியதாக தொல்லியல் அறிஞர்களின் பொதுக் கருத்தேற்பு அமைந்துள்ளது. மரம், கரி எரித்து உருவாக்கிய தீ மனிதர் உணவு சமைக்க உதவியது. இதனால் செரிமானத் திறனும் ஊட்டச்சத்துகளும் கூடியதோடு பலவகை உணவுகளை உண்ண வாய்ப்பளித்தது.

உடையும் உறையுளும்

பழைய கற்கால ஊழியில் நிகழ்ந்த அடுத்த தொழில்நுட்ப முன்னேற்றங்களாக உடையும் உறையுளும் அமைகின்றன. இவற்றை உருவாக்கிய சரியான நாளைக் குறிப்பிட முடியவில்லை. ஆனால், இவை மாந்தர் முன்னேற்றத்துக்கு மிகவும் இன்றியமையாதனவாகும். பழைய கற்காலம் முன்னேற முன்னேற வாழிடங்கள் நுட்பமாகவும் விரிவாகவும் அமையலாயின.

கி.மு 3.8 இலட்சம் ஆண்டுகள் அளவிலேயே தற்கலிக மரக்குடில்களை கட்டியுள்ளனர். விலங்குகளின் மென்முடிகளிலும் வேட்டை விலங்குகளின் தோலிலும் செய்த உடைகள் மாந்தனுக்கு கடுங்குளிரிலும் வாழும் வாய்ப்புகளை உருவாக்கித் தந்தன; உலகின் பலபகுதிகளுக்கு மாந்தர் புலம்பெயர தொடங்கினர்.

2 இலட்சம் ஆண்டுகள் அளவில் மாந்தர் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறி ஐரோப்பாசியா போன்ற பிற கண்டங்களுக்குச் செல்லத் தொடங்கினர்.

புதிய கற்கால கைவினைப் பொருட்கள் கங்கணங்கள்

கைவலயங்கள், கோடரித்தலைகள், உளிகள், மெருகூட்டும் கருவிகள் மாந்தத் தொழில்நுட்ப எழுச்சி உண்மையாக புதிய கற்காலத்தில் தான் களம் கண்டது. மெருகூட்டிய கற்கோடரி உருவாக்கம் மாபெரும் முன்னேற்றமாகும். இது காடழித்து வேளாண் நிலத்தை விரிவாக்கியது. இந்த மெருகூட்டிய கற்கோடரி புதிய கற்காலத்தில் பேரளவில் செய்யப்பட்டாலும் இது இடைக்காலத்தில் அயர்லாந்து போன்ற தொல்லியற் களங்களில் தோன்றியதாகும். வேளாண்மை பெருந்திரளான மக்கள் தொகைக்கு உணவூட்டி, ஓய்வு வாழ்க்கையையும் உருவாக்கியது. மக்கள் நாடோடி வாழ்க்கையைப் போல தோளில் தூக்கிச் செல்ல வேண்டிய தேவை மறைந்தது.

இளஞ்சிறார்களின் எண்ணிக்கை பெருகியது. வேட்டை-திரட்டல் பொருளியல் குழந்தைகள் வேட்டையிலோ உணவு திரட்டலிலோ ஈடுபட முடியாது. ஆனால், வேளாண் கட்டத்தில் பயிரிடுவதில் அவர்கள் எளிதாக உழைக்க முடிந்தது.

மக்கள் தொகை கூடி, உழைப்பில் ஈடுபடுவோர் எண்ணிக்கை கூடியதால். உழைப்பில் வேலைப்பிரிவினை உருவாகியது. புதிய கற்காலத்தில் இருந்து தொடக்கநிலை புதிய கற்கால உரூக் போன்ற ஊர்களும் பிறகு நகரங்களும் ஏற்பட்டு, சுமேர் போன்ற முதல் நாகரிகங்கள் தோன்றியதற்கான காரணங்கள் இதுவரை அறியப்படவில்லை; என்றாலும் சமூகக் கட்டமைப்பில் படிநிலை ஒழுங்கும் சிறப்பு வகை உழைப்பும் வணிகமும் அருகில் நிலவிய பண்பாடுகள் உடனான போரும், நீர்பாசனம் போன்ற சுற்றுச்சூழலை வெற்றி கொள்ள தேவையான கூட்டுழைப்பும் ஆகிய அனைத்துமே முதன்மைப் பங்காற்றியுள்ளன எனலாம்.

பொன்மக் (உலோகக்) கருவிகள்

உலைகளிலும் துருத்திகளிலும் ஏற்பட்ட தொடர் மேம்பாடு, பொன்னையும் செம்பையும் வெள்ளியையும் காரீயத்தையும் தாயகத்தில் தூய வடிவில் தனிமமாகவே கிடைத்த பொன்மங்களையும் உருக்கி வடிக்க வேண்டிய திறமையை உருவாக்கியது. கல், எலும்பு, மரத்தால் ஆன கருவிகளை விட செம்புக் கருகளின் மேம்பாட்டை தொடக்கநிலை மாந்தர் உணரலாயினர். இவ்வாறு தாயகத்திலேயே செம்பு புதிய கற்காலத் தொடக்கத்தில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பயன்படலானது. தூய செம்பு பேரளவில் கிடைக்கவில்லை. ஆனால், செம்புக் கனிமங்கள் எங்கும் கிடைத்தன். அவற்ரை மரம், கரி கொண்டு எரித்து எளிதாக தூய செம்பு பெறமுடிந்தது. படிபடியாக, பொன்மங்களுடனான பணிகள் விரைவில் வெண்கலம், பித்தளை போன்ற பொன்மக் கலவைகளை உருவாக்க, கிமு 4000 ஆண்டளவில், வழிவகுத்தது. எஃகு போன்ற இரும்புக்கலவைகளின் பயன்பாடு கிமு 1800 ஆண்டளவில் இயன்றது.

ஆற்றலும் போக்குவரத்தும்

மனிதர்கள் பிற ஆற்றல்களைத் தங்களது பயன்பாட்டிற்கு ஏற்ப மாற்றக் கற்கத் தொடங்கியிருந்தனர், காற்றின் ஆற்றலை அறிந்து பாய்மரக் கப்பலை செலுத்த தொடங்கியிருந்தனர். நைல் நதியில் பாய்மரக் கப்பல் சென்றதற்கான சான்று கி.மு 8-ஆம் நூற்றாண்டு சார்ந்த கல்வெட்டில் காணலாம். வரலாற்றுக்கு முந்திய காலத்தில் எகுபதியர்கள் ஒவ்வோராண்டும் நைல்நதியில் ஏற்படும் வெள்ளப் பெருக்கைத் தங்கள் நிலங்களின் நீர்பாசனத்துக்குப் பயன்படுத்த முயன்றனர். நாளடைவில் ஆற்றில் இருந்து நீர்க் கால்வாய்களைக் கட்டியும் நீர்பிடிப்புப் படுக்கைகளில் தேக்கியும் பாசனம் செய்ய அறிந்தனர். பண்டைய சுமேரியர்களும் மெசபட்டோமியாவில் டைக்ரிசு, யூப்ரட்டீசு ஆறுகளில் இருந்து நீரைக் கால்வாய்களும் காயல்களும் பயன்படுத்தி பாசனத்துக்கு அறுவடை செய்துள்ளனர்.

சக்கரம் ஒருங்கே தனித்தனியாக மெசபட்டோமியாவிலும் (இன்றைய ஈராக்) வடக்கு காகாசசிலும் (மேக்கோப் பண்பாட்டில்) நடுவண் ஐரோப்பாவிலும் கிமு 4000 அளவில் கண்டுபிடிக்கப்பட்டதாக தொல்லியலாளர்கள் கூறுகின்றனர். சக்கரம் வரைந்து மிகப் பழைய கைவினைப் பொருள்கள் கிமு 3500 ஆம் ஆண்டளவில் இருந்து கிடைக்கின்றன. என்றாலும் இந்த வரைபடங்கள் கிடைப்பதற்கு முன் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக சக்கரங்கள் பயன்பாட்டில் இருந்திருக்கலாம். அண்மையில் மிகப் பழைய மரச்சக்கரம் சுலோவேனியாவின் இலியூப்ளினியா சதுப்பு நிலங்களில் கிடைத்துள்ளது.

சக்கரத்தின் வடிவமைப்பும் பயன்பாடும் வணிகத்தையும் போரையும் புரட்சிகரமாக மாற்றியது. விரைவில் சக்கரம் பூட்டிய வண்டிகள், ஊர்திகள் (தேர்கள்) வடிவமைக்கப்பட்டன. சக்கர வண்டிகளில் பளுவான பொருட்களை வேண்டிய இடங்களுக்குக் கொண்டு செல்ல முடிந்தது. பண்டைய சுமேரியர்கள் குயவர் சக்கரத்தைப் பயன்படுத்தியுள்ளனர். எனவே, சக்கரத்தை அவர்கள் முதலில் புதிதாக புனைந்திருக்கலாம். அதற்கும் பழைய சக்கர இடிபாட்டு பானையோடுகளும் அதே இடத்தில் கிடைத்துள்ளன.

முதல் இரண்டு சக்கர வண்டிகள் திரவாயிசில் கிடைத்தன. இவை முதலில் மொசபட்டோமியவிலும் ஈரானிலும் கிமு 3000 ஆண்டளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மிகவும் பழைய கற்சாலை கிமு 4000 ஆண்டளவில் ஊர் எனும் நகர அரசு தெருக்களில் போடப்பட்டுள்ளமை அறியப்பட்டுள்ளது. அதே கால கட்டத்தில் இங்கிலாந்தில் கிளாசுட்டன்பரி சதுப்பு நிலங்களுக்குச் செல்லும் சாலைகள் அமைந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது முதல் நெடுந்தொலைவு சாலை கிமு 3500 ஆண்டளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பாரசீக வளைகுடாவில் இருந்து நடுத்தரைக்கடல் வரை அமைந்ததாகும். இதில் பாவுதளம் அமையாமல் ஓரளவே பேணப்பட்டுள்ளது. கிரேக்கத் தீவின் கிரீட் நகரத்தில் கிமு 2000 ஆண்டளவில், மினோவர்கள் (மினோவர் நாகரிகம்) அந்தத் தீவின் தெற்கில் அமைந்த கோர்த்தின் அரண்மனைக்கும் வடக்கில் அமைந்த நோசோசு அரண்மனைக்கும் (மலைகளின் ஊடாக) செல்லும் 50 கிமீ நீளச் சாலையை அமைத்துள்ளனர். முந்திய சாலைகளைப் போல் அல்லாமல் இந்த மினோவர் சாலை பாவுதளம் கொண்டதாகும்.

தொழில்புரட்சி

இடைக்காலத்திலும் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன, உரோமப் பேரரசுவின் வீழ்ச்சிக்குப் பிறகு பட்டு, குதிரைச் சேணம் போன்றவையும் பின்பு தனி எந்திரங்களான நெம்புகோல், திருகாணி மற்றும் கப்பி போன்றவை வடிவமைக்கப்பட்டன பின்பு சிக்கலான அமைப்புகளான ஒற்றைச் சில்லு வண்டி, காற்றாலை, கடிகாரம் போன்றவை யும் வடிவமைக்கப்படலாயின. 14 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டு வரையிலான மறுமலர்ச்சி காலத்தில் அச்சு இயந்திரம் போன்ற பல புதிய கண்டுபிடிப்புகள் உருவாகின.

தானூர்தி மக்களின் போக்குவரத்தில் புரட்சி செய்தது. 18ஆம் நூற்றாண்டு இங்கிலாந்தில் தொடங்கிய தொழிற்புரட்சி, வேளாண்மை, உற்பத்தி, சுரங்க, உலோகவியல், போக்குவரத்து ஆகியவற்றில் நீராவி ஆற்றலின் கண்டுபிடிப்பால் உந்தப்பட்ட பெரும்பாலான தொழில்நுட்ப வடிவமைப்புகளின் காலமாகும்.

இரண்டாம் தொழிற்துறைப் புரட்சியில் மின் ஆற்றல் பயன்பாட்டால் மின்னோடி, ஒளி விளக்கு போன்ற எண்ணற்ற புதுமைகளை உருவாகின. வளரும் தொழில்நுட்பம் வானளாவிய கட்டிடங்கள், பரந்த நகர்ப்புறப் பகுதிகள் உருவாக வழிவகுத்தது, இங்கு வசிக்கும் மக்கள் தங்கள் போக்குவரத்துக்கும் உணவு பகிர்வுக்கும் விசைப்பொறிகள் சார்ந்திருக்கின்றனர்.

தொலைவரி, தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றின் கண்டுபிடிப்புடன் தொடர்பாடல் மிகவும் பெரிதும் மேம்படுத்தப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கமும் விமானப் போக்குவரத்து, தானூர்திக் கண்டுபிடிப்புகளால் போக்குவரத்தில் ஒரு புரட்சியைக் கண்டன.

அணுசக்தி

1991 இல் நடைபெற்ற குவைத்போரில் பங்குபெற்ற எப்-15 மற்றும் எப்-16 போர் விமானங்கள். இயற்பியலில் அணுக்கரு பிளவின் கண்டுபிடிப்பானது அணு ஆயுதங்கள் மற்றும் அணு சக்தி ஆகிய இரண்டிற்கும் வழிவகுத்தது.

தொழிநுட்பம்

திரிதடையம் (Transistor) ஆகியவற்றின் சிறியதாக்கபட்ட பின்பு கணினி கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்பம் பின்னர் இணைய உருவாக்கத்திற்கு இட்டுச்சென்றது, இது தற்போதைய தகவல் காலத்தினை அறிமுகப்படுத்தியது. மனிதர்கள் செயற்கைகோள்கள் கொண்டு விண்வெளியை ஆராய முடிந்தது (பின்னர் தொலைத்தொடர்புக்கு பயன்படுத்தப்பட்டது) மற்றும் சந்திரனுக்கான மனிதப் பயணங்கள் அனைத்து வழிகளிலும் மேற்கொள்ளப்பட்டன. மருத்துவத்தில், இந்த சகாப்தம் புதிய் கண்டுபிடிப்புகளை கண்டறிந்தது அவை, திறந்த இதய அறுவை சிகிச்சை, ஸ்டெம் செல் சிகிச்சை மற்றும் புதிய மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் ஆகும்.

Mohamed Ali Mohamed Rejees
Source.:

பழைய கற்காலம் பழைய கற்காலத்தில் மனிதர் கருவிகள் பயன்பாடு, ஓரளவு கண்டுபிடிப்பு படிமலர்ச்சி இரண்டின் இணைநிகழ்வின் அடிப்படையிலேயே அமைந்தது. பண்டைய மாந்தர் கிடைத்ததை உண்டு வாழ்ந்த, ஏற்கெனவே இருகால் நடை வாய்த்திருந்த முன் மாந்தவினத்தில்…

பழைய கற்காலம் பழைய கற்காலத்தில் மனிதர் கருவிகள் பயன்பாடு, ஓரளவு கண்டுபிடிப்பு படிமலர்ச்சி இரண்டின் இணைநிகழ்வின் அடிப்படையிலேயே அமைந்தது. பண்டைய மாந்தர் கிடைத்ததை உண்டு வாழ்ந்த, ஏற்கெனவே இருகால் நடை வாய்த்திருந்த முன் மாந்தவினத்தில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *