சிறுபான்மையின மாணவர்களிடமிருந்து சிங்கள மொழி தூரமாக்கப்படுகிறதா?

  • 27

எத்தனை அதிபர்கள் கவனித்திருப்பார்களோ,  தெரியவில்லை. எத்தனை ஆசிரியர்கள் கவனித்திருப்பார்களோ, தெரியவில்லை. எத்தனை சிறுபான்மையின கல்வியியலாளர்கள் கவனித்திருப்பார்களோ, தெரியவில்லை.

சிங்கள மொழியானது மாணவர்களிடம் இருந்து தூரமாகும் வகையிலேயே சாதாரண தரத்திற்கான பாடத்தெரிவுகள் அமைந்திருக்கின்றன.

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்ற சிங்களப் பாடத்துடன், வணிக (commerce) பாடமே pool Subjects ஆக இருக்கிறது. சிங்களம் அல்லது வணிகம். இரண்டில் ஒன்றையே தெரிவு செய்ய வேண்டும்.

உயர்தரத்தில் Commerce செய்ய வேண்டும் என்று ஆசைப்படும் மாணவர்களும்,

“சிங்களம் தெரியாத மொழி – Commerce தமிழ் மொழியில் கற்பிப்பதால் இலகுவாக சித்தியடையலாம்”

என Comfort Zone இல் இருக்க நினைக்கும் மாணவர்களும் Commerce ஐயே தெரிவு செய்வார்கள்.

Commerce செய்தால் சிங்களம் இல்லை. சிங்களம் படித்தால், Commerce இல்லை. சிங்களமா? Commerce ஆ? என்றால், Commerce தான் என முடிவெடுப்பார்கள்.

அவர்களின் தெரிவு நியாயமானது தான்.

“சிங்களத்தைப் பிறகும் படிக்கலாம், இப்போ Commerce செய்” என்று தான் அறிவுரைகள் வழங்கப்படும்.

இதனால் மாணவர்கள் தம்மையறியாமலேயே சிங்களத்தை விட்டு தூரமாக்கப்படுகின்றனர்.

அரசாங்க சேவையில் ஈடுபட்டுக் கொண்டே, சிங்கள‌மொழியில் சித்தியடையும் நோக்கில் மீண்டும் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் பல தமிழ் பேசும் சகோதரர்களைக் காண்கிறேன். இவர்கள் அனைவரும் சாதாரண தரத்தில் Commerce எடுத்தவர்களே.

Commerce மற்றும் சிங்களம் ஆகிய இரு பாடங்களையும் தெரிவு செய்யும் வகையில் பாடத்திட்டங்களை அமைக்க கல்வியமைச்சைத் தூண்ட வேண்டியது, அதிபர்களதும் கல்வியியலாளர்களினதும், அரசாங்க சேவையில் உயர் பதவிகளில் இருப்பவர்களினதும் கட்டாயக் கடமையாகும்.

சிங்கள மொழியானது கட்டாயப் பாடமாக்கப்படுவதும் சிறந்ததே. இல்லையெனில், சிங்களக் காற்றே படாத ஒரு சமூகம் எதிர்காலத்தில் உருவாகலாம்.

Ifham Aslam
Visiting Lecturer (OUSL)
B.Sc, M.Sc(R)

எத்தனை அதிபர்கள் கவனித்திருப்பார்களோ,  தெரியவில்லை. எத்தனை ஆசிரியர்கள் கவனித்திருப்பார்களோ, தெரியவில்லை. எத்தனை சிறுபான்மையின கல்வியியலாளர்கள் கவனித்திருப்பார்களோ, தெரியவில்லை. சிங்கள மொழியானது மாணவர்களிடம் இருந்து தூரமாகும் வகையிலேயே சாதாரண தரத்திற்கான பாடத்தெரிவுகள் அமைந்திருக்கின்றன. சாதாரண தரப்…

எத்தனை அதிபர்கள் கவனித்திருப்பார்களோ,  தெரியவில்லை. எத்தனை ஆசிரியர்கள் கவனித்திருப்பார்களோ, தெரியவில்லை. எத்தனை சிறுபான்மையின கல்வியியலாளர்கள் கவனித்திருப்பார்களோ, தெரியவில்லை. சிங்கள மொழியானது மாணவர்களிடம் இருந்து தூரமாகும் வகையிலேயே சாதாரண தரத்திற்கான பாடத்தெரிவுகள் அமைந்திருக்கின்றன. சாதாரண தரப்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *