பெண்ணே எப்போதும் விழித்திரு

  • 17

அவள் பெயர் சாரா. என்றும் போல் அன்றும் தனது சக தோழிகளுடன் வட்ஸ்அப் இல் உரையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அவளது நெருங்கிய உறவுக்கார பெண் பேகம் இவளுக்கு ஸலாம் அனுப்பவே அவளும் பதிலுக்கு ஸலாம் அனுப்பி சுகதுக்கம் விசாரித்து கொண்டிருந்தாள்.

திடீரென அப்பெண் சாராவின் புகைப்படத்தை அனுப்ப சொல்லவே சற்று யோசித்தவள் முதலில் பேகமின் புகைப்படத்தை சாரா கேட்க, பேகமும் மறுக்காமல் அனுப்பவே நம்பிக்கையுடன் சாராவும் அவள் புகைப்படமொன்றை ஒன்றை அவளுக்கு அனுப்பினாள்.பேகமோ

“இது வேண்டாம் சார, Full photo தான் வேண்டும்”

என்று கேட்டு மன்றாட சாராவுக்கு என்னவோ போலானது. அதனால் அவள் அந்த கோரிக்கையை நிராகரித்து மெதுவாக சமாளித்தாள்.

அடுத்து சில வினாடியில் அறிமுகமற்ற இலக்கத்தில் இருந்து அவளுக்கு வட்ஸ்அப் குறுஞ்செய்தி வந்திருந்தது.

ஹாய்

யாரு?

நீங்க நிப்ராஸ் ஆ?

It’s Wrong Number

Oh Sorry அப்ப நீங்க யாரு?

அதான் wrong number என்டு சொல்டேனே அப்புறம் என்ன?

என்ற உரையாடலின் பின் அடுத்த கணம் சாராவின் புகைப்படத்துடன் ஒரு அந்நிய ஆணின் புகைப்படம் இணைக்கப்பட்டு அனுப்பப்பட்டிருந்தது.

அத்துடன் சாராவின் பெயர் உள்ளிட்ட சில தகவல்களும் வந்தன.

அவளுக்கோ பேரதிர்ச்சி. அவள் பேகமுக்கு அனுப்பிய அதே புகைப்படம். அது யாருடைய வேளையாக இருக்கும் என்று ஊகித்தவளாக பேகமுக்கு திட்டித் தீர்த்தாள்.

பிறகு அவன் இவளது புகைப்படத்தை காட்டி மிரட்ட அவளோ அசைந்து கொடுக்கவில்லை.

எங்காலடா ஒனக்கு ஏன்ட போடோ?

மரியாத போடோவ நா FB ல போடுறேன்.

ஓ அப்படியா? சரி போடு நானும் என்ன செய்றனு பாரு

என்று விட்டு சாரா அந்த இலக்கத்தை தடைசெய்து விடவே.

மறு நிமிடம் இன்னுமொரு வெளிநாட்டு இலக்கத்தில் இருந்து அவள் புகைப்படம் வந்தது. அது முகப்புத்தக பக்கத்தோடு வந்திருந்தது. இதுவும் அவனாகத் தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவன் யாரென்று அறிய, அவனது முகப்புத்தக முகவரியை சாரா கேட்டாள். அவனோ முகவரியை அனுப்பாமல் சுயவிபரப் புகைப்படம் (Profile Picture) இல்லாத முகப்புத்தக முகவரி ஒன்றின் புகைப்படத்தை அனுப்பினான்.

உடனே அவள் அந்த புகைப்படத்தை தனது சகோதரனுக்கும் தோழிகளுக்கும் இன்னும் தெரிந்தவர்கள் சிலருக்கும் அனுப்பி தகவல் திரட்டச் சொன்னாள். தேடியதில் அவள் மோசமான நடத்தையுடையவன் என தெரிய வந்தது. அவனோ அவளை மிரட்டிக் கொண்டே தான் இருந்தான். அவள் புகைப்படம் மட்டும் அன்றி அவள் தொலைபேசி இலக்கத்தையும் முகவரியையும் சேர்த்து முகப்புத்தகத்தில் பகிர்வதாக கூறினான்.

புகைப்படத்தை அழிக்க வேண்டும் என்றால் அவன் சொல்வதை இவள் கேட்க வேண்டுமாம். அவனுக்கு மட்டும் பார்க்க வேறு புகைப்படங்கள் கேட்டான். அவள் கொடுக்கவில்லை. அழைத்துப் பேசும் படி கேட்டான். அவள் பேசவில்லை. இத்தனைக்கும் நடுவில் அவனது மிரட்டலும் குறையவில்லை.

இதே மிரட்டலில் பேகமுக்கு மெசேஜ் அனுப்பினாள் சாரா.

“மரியாதயா ஏன்ட போடோவ அவனுக்கு delete பண்ண சொல்லுங்க. இல்லாட்டி ஒங்கட போடோவ நா போடவேன் FB ல.”

என்ற சாராவின் மிரட்டலில் திக்குமுக்காடிய பேகம் முதலில் மறுத்தாலும் கடைசியில் அவளது தவறை ஏற்றுக் கொண்டாள்.

அவனது மிரட்டலிலும் நட்பின் தன்னம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளால் தைரியமாக நின்றாள் சாரா. இறுதியாக அந்த புதிய இலக்கத்தையும் தடை செய்து விட்டு பொலிஸில் புகார் கொடுத்த பிறகு இறைவன் மீது பாரத்தை சாட்டி விட்டு அமைதியாக இருந்தாள்.

அவள் காத்திருப்புக்கு பலனாகவே பலரது மிரட்டலின் பிறகு அவன் அவனது தவறை ஒப்புக் கொண்டு அவளது புகைப்படத்தை ஆதாரத்துடன் நீக்கினான்.

இந்த விளையாட்டு இத்தோடு முற்றுப் பெறாமல் இருந்திருந்தால் சாராவின் நிலை என்னவாகியிருக்கும்?

சகோதரிகளே விடை பெற முன்!

உறவாக இருந்தே சாராவுக்கு இந்த நிலை என்றால் ஏனையோர்களைப் பற்றி எச்சரிக்கையாகத் தான் இருக்க வேண்டும். இப்படிப் பட்ட பெண்களும் நம்மில் இருக்கத் தான் செய்கிறார்கள். நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.

சகோதரிகளே! உங்கள் புகைப்படங்களை முடிந்த வரை உங்களுடனே வைத்திருங்கள். உங்களுக்கு நம்பிக்கையான உறவுகளை தவிர வேறு எவருக்கும் பாவம் பரிதாபம் பார்த்து, அவள் ஏதும் நினைப்பாளோ என்ற எண்ணத்தில் அனுப்ப வேண்டாம். அவள் நினைப்பதை நினைக்கட்டும் ஆனால் மானம் போனால் திரும்பி வராது.

இப்படி பட்ட மிரட்டல்களின் போது மிரண்டு போய் அவசரப்பட்டு மிரட்டுபவனின் கோரிக்கைக்கு மட்டும் தலையசைத்து விடாதீர்கள். நீங்கள் தவறு செய்யவில்லை எனில் தைரியமாக முகம் கொடுங்கள். மிரட்டலுக்கு பயப்படாமல் பிரச்சினையை சுமூகமாக தீர்க்க நம்பிக்கையான உங்கள் நெருங்கிய உறவுகளின் மூலம் உங்களை நீங்கள் பலப்படுத்திக் கொள்ளுங்கள். அளவுக்கு அதிக மிரட்டல் என்றால் பொலிஸாரிடம் புகார் கொடுங்கள். இறைவன் கை விட மாட்டான்.

இது சமூக விழிப்புணர்வுக்காக எழுதப்பட்ட ஒரு ஆக்கம்.

Noor Shahidha
SEUSL
Badulla

அவள் பெயர் சாரா. என்றும் போல் அன்றும் தனது சக தோழிகளுடன் வட்ஸ்அப் இல் உரையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அவளது நெருங்கிய உறவுக்கார பெண் பேகம் இவளுக்கு ஸலாம் அனுப்பவே அவளும் பதிலுக்கு ஸலாம்…

அவள் பெயர் சாரா. என்றும் போல் அன்றும் தனது சக தோழிகளுடன் வட்ஸ்அப் இல் உரையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அவளது நெருங்கிய உறவுக்கார பெண் பேகம் இவளுக்கு ஸலாம் அனுப்பவே அவளும் பதிலுக்கு ஸலாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *