பள்ளிப் பருவம்

  • 12

சிட்டுக் குருவி போல்
சிறகடித்த சில யுகங்கள்!
சிதறிய முத்துக்களாய்
சிறகிழந்த பல தருணங்கள்!
சிந்தையில் உள்ளது இன்னும்
சிதறாத சொத்துக்களாய்.

வாழ்க்கை எனும் பயணத்தில்
வார்த்தைகளால் வடிக்க முடியா
வரமான கால அது! – நம்
வரலாற்றில் பொதியா
வசந்த காலம்! – அதுவே நாம்
மீள முடியா பள்ளிப் காலம்.

சிரித்துப் பேசி மகிழ்ந்திடும் பல தருணம்!
குருவின் குமுறல்கள் சில தருணம்!
பரீட்சையில் பகை பல பேருக்கு.
அதை பார்த்தடிப்பதில் ருசி சில பேருக்கு.

ஜூனியரை அடக்கும் சில் வண்டுகள்!
சீனியரில் பயம் போல் பாசாங்குகள்!

பள்ளி வேலை செய்யும் நல்லுள்ளங்கள்.
அதை பார்த்து கேலி செய்யும் பல பாவிகள்.

இரண்டாம் பாடமே உண்டுவிடும் சில குருவிகள்
அதையும் கூட விட்டு விடாத பல கருமிகள்
மீளுமா என் பள்ளிப் பருவம்?
அது மீள முடியா வரம்

Shima Harees
Puttalam

சிட்டுக் குருவி போல் சிறகடித்த சில யுகங்கள்! சிதறிய முத்துக்களாய் சிறகிழந்த பல தருணங்கள்! சிந்தையில் உள்ளது இன்னும் சிதறாத சொத்துக்களாய். வாழ்க்கை எனும் பயணத்தில் வார்த்தைகளால் வடிக்க முடியா வரமான கால அது!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *