எலிகளுடனும் கரப்பான் பூச்சிகளுடனுமே நான் தூங்கினேன் – கதறியழும் தாய்

  • 10

அது ஒரு முதியோர் இல்லம். அங்கு ஏழு வருடங்களாக கவலையோடும் கண்ணீரோடும் ஒரு தாய் இருக்கின்றாள். உள்ளத்தை உருக்கும் தன் வலிகளை பகிர்ந்து கொள்கிறார்.

நான் நீரிழிவு நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தேன். என் வலது கால் முழங்காலுடன் கழட்டப்பட வேண்டுமென்று வைத்தியர்கள் அறிவுரை வழங்கினார்கள். சில நாட்களின் பின் என் மகனுடன் வைத்தியசாலையிலிருந்து வீட்டுக்குச் சென்றேன். மகனுடனும் மருமகளுடனும் மகனின் வீட்டிலேயே சில காலம் தங்கியிருந்தேன். போகப்போக அவர்களின் நடவடிக்கைகளில் மாற்றத்தைக் கண்டேன். அவர்கள் இருவருக்கும் நான் பாரமாக இருப்பதாக உணர்ந்தேன். மருமகள் பாரமாகவே என்னைக் கருதினாள். என்னுடன் வெறுப்பாகவே நடந்து கொண்டாள். அதற்கு மகன் கூட ஒன்றும் பேசவில்லை. கடைசியாக சமையலறைக்கு அருகிலிருந்த ஸ்டோர் அறைக்குள் தள்ளப்பட்டேன். அங்கே வேலைக்காரியுடன் தங்கினேன்.

இடையில் அழுதவர் தொடர்கின்றார்:

“இறைவன் மீது சத்தியமாக எலிகளுடனும் கரப்பான் பூச்சிகளுடனுமே நான் தூங்கினேன். என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என் மகனிடம் என் கஷ்டம் பற்றிக் கூறினேன். எவ்வித சலனமுமின்றி இது நல்ல இடம்தானே என்று கூறிவிட்டான். என் பரிதாபகரமான நிலையை அவதானித்த பக்கத்து வீட்டுப் பெண் தன் வீட்டுக்கு என்னைக் கூட்டிச் சென்று தனியானதொரு அறையில் என்னை தங்கவைத்தாள்.

அங்கு சில வாரங்கள் தங்கினேன். ஆனால் நான் அங்கு தங்குவதனால் தன் கௌரவத்துக்கும் மரியாதைக்கும் இழுக்கு ஏற்படுவதை விரும்பாத என் மகன் பக்கத்து வீட்டாருக்கு எச்சரிக்கை மேல் எச்சரிக்கை விடுக்க ஆரம்பித்தான். கடைசியில் அங்கிருந்தும் நான் வெளியேறினான். என்னை அழைத்துச் செல்வதற்காக வந்த மகன்,

“சிறப்பானதொரு இடத்துக்கு உங்களை கூட்டிச் செல்கிறேன்”

என்றான்.

மீண்டும் அழ ஆரம்பித்தவர் சுதாகரித்துக் கொண்டு:

“இந்த முதியோர் இல்லத்துக்குத்தான் என்னை கூட்டி வந்தான். சுமார் ஏழு வருடங்களாக இங்கு தங்கியிருக்கின்றேன். ஒரு தடவையாவது என்னை வந்து பார்க்கவுமில்லை என்னோடு தொலைபேசி மூலமாக பேசவுமில்லை. நான் அவனை எப்படியெல்லாம் வளர்த்தேன் தெரியுமா? என்று சொல்லி விட்டு அழ ஆரம்பித்தார். என்னாலும் என் கண்ணீரை அடக்க முடியவில்லை.

ஷேக் மிஷ்அல் அல் உதைபி அவர்களின் ‘தாயே என்னை மன்னித்து விடுங்கள்’ என்ற இறுவட்டிலிருந்து.

பெற்றோர் குறிப்பாக தாய் உண்மையில் பேரருள்தான் உணர்ந்தவர்களுக்கு மட்டுமே.

சகோதரர்களே! உங்கள் இன்பத்துக்காக அவர்களை துன்பத்தினுள் தள்ளி விடாதீர்கள். அவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடாவிடினும் காலுக்கு கீழ் போட்டு மிதித்து விடாதீர்கள். அவர்களின் உள்ளமும் உணர்வும் எரிமலை போன்றவை. வெடித்து விட்டால் நீங்கள் தாங்க மாட்டீர்கள். அவர்களின் கண்ணீருக்கு அல்லாஹ்விடம் அவ்வளவு வலிமையுண்டு.

அடிப்பதும் ஏசுவதும் விரட்டுவதும் சத்தத்தை உயர்த்துவதும் மட்டும்தான் பெற்றோருக்கு செய்யும் அநியாயம் என்று நினைத்து விடாதீர்கள்.

உங்கள் நடத்தையால் அவர்கள் உங்களுக்கு பயப்படுவதும் கூட நீங்கள் செய்யும் ஒரு வகை நோவினைதான். தன்னை வயிற்றில் சுமந்த தாயையும். தோள் மீது சுமந்த தந்தையையும் ஒதுக்குபவன் நிச்சயமாக மிக மிகக் கேவலமானவன்தான்.

நோயிலும் வயோதிபத்திலும் அல்லல்படும் அவர்களை அரவணையுங்கள்; நாளை உங்கள் பிள்ளைகள் உங்களை அரவணைப்பார்கள்.

பாஹிர் சுபைர்

அது ஒரு முதியோர் இல்லம். அங்கு ஏழு வருடங்களாக கவலையோடும் கண்ணீரோடும் ஒரு தாய் இருக்கின்றாள். உள்ளத்தை உருக்கும் தன் வலிகளை பகிர்ந்து கொள்கிறார். நான் நீரிழிவு நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தேன். என் வலது…

அது ஒரு முதியோர் இல்லம். அங்கு ஏழு வருடங்களாக கவலையோடும் கண்ணீரோடும் ஒரு தாய் இருக்கின்றாள். உள்ளத்தை உருக்கும் தன் வலிகளை பகிர்ந்து கொள்கிறார். நான் நீரிழிவு நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தேன். என் வலது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *