காணிப் பிரச்சினைகளால் கல்லாகும் உள்ளங்களும் காணாமல் போகும் உறவுகளும்.

  • 11

[edsanimate_start entry_animation_type= “zoomInUp” entry_delay= “1” entry_duration= “2” entry_timing= “linear” exit_animation_type= “” exit_delay= “” exit_duration= “” exit_timing= “” animation_repeat= “1” keep= “yes” animate_on= “load” scroll_offset= “” custom_css_class= “”]

இன்றைய காலத்தில் போலிஸ், நீதி மன்றம், மத்தியஸ்த சபை, உலமா சபை, பள்ளிவாயல்கள் போன்ற இடங்களில் மிகக் கூடுதலாக நிலுவையில் உள்ள விசாரணைகள் காணிப் பிரச்சினை தொடர்பானவையாகும்.

உறவுகள் முறிந்து சிதறிப்போவதற்கு மூலக் காரணியாக விஸ்வரூபம் எடுத்திருப்பதும் காணிப் பிரச்சினையேயாகும்.

தனது தாய், தந்தை, சகோதர சகோதரிகள், பேரப் பிள்ளைகள் போன்ற இரத்த உறவுகளுடனும் பக்கத்து வீட்டாருடனும் பல வருடங்களாக பகையுடன் இருப்பதற்கு ஒரு மனிதனைத் தூண்டிவிடுவதும் காணியின் மீதான அவனது மோகமேயாகும்.

குடும்பத்தை, இரத்த உறவுகளைத் துண்டித்து, பக்கத்து வீட்டாருடன் பகைத்துக் கொண்டு பெற்றுக்கொள்ளும் அந்தக் காணி தேவைதானா? அதில் உள்ளம் சற்றேனும் திருப்தி அடைகின்றதா? அதில் அல்லாஹ்வின் பரகத் கிடைக்குமா?

நபிகளாரின் கூற்றைக் கவனியுங்கள்:  “தம் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதையும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதையும் விரும்புகிறவர் தம் உறவைப் பேணி வாழட்டும்” ( புகாரி)

ஆனால் இன்று அற்ப காணிக்காய் குடும்பத்தினுள் நடைபெறும் சீரழிவுகளைப் பாருங்கள்.

குடும்பத்தினுள் ஏற்படும் பகைகளுக்கும், சமூகத்தில் நிகழும் குற்றச் செயல்களுக்கும் பிரதான காரணங்களுல் ஒன்று காணிப் பிரச்சினை.

ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருக்க வேண்டிய கணவனும் மனைவியும் இறுதிக் காலங்களில் பிரிந்திருப்பதற்கும் சில இடங்களில் காரணம் காணி.

தான் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு அல்லது தன்னைப் பெற்றெடுத்தவர்கள், உடன் பிறந்தவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய சிலரைத் தூண்டிவிடுவதும் காணிப் பிரச்சினைதான்.

திருமணத்திற்குப் பிறகு தமது கணவன் மனைவியரைத் தூண்டி விட்டு அவர்களது சகோதர சகோதரிகளுடனும் பெற்றோருடனும் பிரச்சினையை ஏற்படுத்தி சந்தோஷமான குடும்பம் பிரிவதற்கும் காரணம் பலரது காணியின் மீதான பேராசையே குடும்பத்தைப் பிரித்ததைத் தவிர வேறு எதனை சாதித்தார்கள்?

அண்டை வீட்டாருடனான சண்டைக்குள் பலரைத் தள்ளி விடுவதும் அதே காணியின் மீதான பேராசையே.

எல்லாவற்றையும் விட மிகக் கேவலமானதும் கவலையானதுமான விடயம் தன் பெற்றோர், உடன் பிறப்புக்கள் மரணித்த பின்பும் அற்ப காணிப் பிரச்சினைக்காக அவர்களது ஜனாஸாவில் கூட கலந்து கொள்ளாதோரின் பரிதாப நிலை கண்டு கண்ணீர் வடிக்க வேண்டியுள்ளது. அந்தளவிற்கு காணி மீதான மோகம் காணிக்காக கல்லாகிய உள்ளங்கள் காணிக்காக மூடப்பட்ட கண்கள். சிலரின் உள்ளங்களில் உறவை விட காணியும் சொத்தும் குடிகொண்டு விட்டன. நபிகளாரின் எச்சரிக்கையை கவனியுங்கள்.

“உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்” – (புகாரி)

உறவுக்கும் இறைவனுக்கும் இடையில் உள்ள இறுக்கமான தொடர்பைப் பாருங்கள்:

“உறவு என்பது, அளவிலா அருளாளன் (ரஹ்மான்) இடமிருந்து வந்த (அருட்கொடை) கிளையாகும். எனவே, இறைவன் (உறவை நோக்கி) ‘உன்னோடு ஒட்டி வாழ்பவனுடன் நானும் உறவு பாராட்டுவேன். உன்னை முறித்துக் கொள்பவனைள நானும் முறித்துக்கொள்வேன்’ என்று கூறினான்” ( புகாரி)

உறவு முறிந்து ஜென்ம விரோதமானாலும் சரி காணியும் சொத்தும்தான் தேவை என்பவனின் உள்ளத்தில் ஷைதான் மிக ஆழமாகத்தான் வேரூன்றியுள்ளான்.

படித்தவர்கள் கூட சாதாரண சிறு துண்டுக் காணிக்காக தன் அறிவையும் பண்பாட்டையும் அடகு வைத்துவிட்டு வீதியில் இறங்கி சண்டை பிடிக்கும் அவல நிலை இது ஒரு புறம்.

மற்றொரு புறம் சிலரின் காணியை அல்லது காணியின் சிறியதொரு துண்டை அபகரிக்கும் கேவலமான நோக்கம் சிலரிடம். அதற்கான பொய்கள், ஏமாற்று நடவடிக்கைகள், சண்டைகள் என நயவஞ்சகனின் பண்புகளை எடுத்துக் கொள்ளும் கேவலமான நிலை.

“ஒரு நிலத்திலிருந்து ஒரு பகுதியைத் தனக்கு உரிமையின்றி எடுத்துக் கொண்டவன் மறுமை நாளில் ஏழு பூமிகளுக்குக் கீழே அழுந்திப் போய் விடுவான்” (புகாரி)

“பிறரின் நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்தவர் ஏழு நிலங்களை (மறுமையில்) கழுத்தில் மாலையாகக் கட்டித் தொங்க விடப்படுவார்”. (புகாரி,முஸ்லிம்)

மனிதா! நீ எவ்வளவு காணிகளை வாங்கினாலும் அநீதியாக அபகரித்தாலும் கடைசியில் உனக்கு சொந்தமாவது மையவாடியில் ஒரு துண்டுதான். சிந்திக்க மாட்டாயா நீ உலகில் இருந்த இடம் தெரியாமல் மறைவாய் தடங்கள் தெரியாது காணாமல் போவாய். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

[edsanimate_end]

[edsanimate_start entry_animation_type= “flash” entry_delay= “0” entry_duration= “0.5” entry_timing= “linear” exit_animation_type= “” exit_delay= “” exit_duration= “” exit_timing= “” animation_repeat= “1” keep= “yes” animate_on= “load” scroll_offset= “” custom_css_class= “”]பாஹிர் சுபைர்[edsanimate_end]

[edsanimate_start entry_animation_type= “zoomInUp” entry_delay= “1” entry_duration= “2” entry_timing= “linear” exit_animation_type= “” exit_delay= “” exit_duration= “” exit_timing= “” animation_repeat= “1” keep= “yes” animate_on= “load” scroll_offset= “”…

[edsanimate_start entry_animation_type= “zoomInUp” entry_delay= “1” entry_duration= “2” entry_timing= “linear” exit_animation_type= “” exit_delay= “” exit_duration= “” exit_timing= “” animation_repeat= “1” keep= “yes” animate_on= “load” scroll_offset= “”…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *