பள்ளிக் காலமும், பசுமையான நினைவுகளும்

  • 15

அடிக்கடி சண்டை போட்ட நொடிகள்
அதை மறந்து மீண்டும்
நட்பில் கை கோர்த்த கணங்கள்.

பாட வேளையில் திருட்டுத்தனமாக
உண்ட உணவுகள்
இடைவேளையில் நண்பர்களின்
அறுசுவை உணவுகளால்
நா தட்டிய சுவைகள்

பரீட்சையில் கொடை வள்ளலான தோழமைகள்
வகுப்பறையில் போட்ட கலாட்டாக்கள்
மேசைகளில் கிறுக்கிய நட்பின் சின்னங்கள்
இன்று நினைத்தாலும் ஏங்க வைக்கும்
நட்பின் ஏக்கங்கள்

பள்ளி செல்ல முடியாது என்று அடம்பிடித்து
விழிகள் அழுதது முதல் நாள்
பள்ளியை விட்டு பிரிய மனமின்றி
மீண்டும் முதலில் இருந்தே படிக்க வேண்டும்
எனக்கேட்டு இதயம் அழுதது இறுதிநாள்

இவை வெறும் நினைவுகள் மட்டும் அல்ல
மீண்டும் கேட்டாலும் கிடைக்காத வரம்

Noor Shahidha
SEUSL
Badulla

அடிக்கடி சண்டை போட்ட நொடிகள் அதை மறந்து மீண்டும் நட்பில் கை கோர்த்த கணங்கள். பாட வேளையில் திருட்டுத்தனமாக உண்ட உணவுகள் இடைவேளையில் நண்பர்களின் அறுசுவை உணவுகளால் நா தட்டிய சுவைகள் பரீட்சையில் கொடை…

அடிக்கடி சண்டை போட்ட நொடிகள் அதை மறந்து மீண்டும் நட்பில் கை கோர்த்த கணங்கள். பாட வேளையில் திருட்டுத்தனமாக உண்ட உணவுகள் இடைவேளையில் நண்பர்களின் அறுசுவை உணவுகளால் நா தட்டிய சுவைகள் பரீட்சையில் கொடை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *