பெண் எனும் பெரும் அமானிதம்

  • 16

பிள்ளைகள் வளர்ப்பது கடினம்தான். அதிலும் பெண் பிள்ளைகளை வளர்த்துக் காப்பது மிகக் கடினமானது. நுட்பமானது கொஞ்சம் சறுக்கினாலும் முடிவு விபரீதமாகும். பெண் ஓர் அத்தியாயத்தின் ஆணிவேர்.

வெளியில் நடமாடும் போது பெண் பிள்ளைகளின் ஆடைகளைக் கவனியுங்கள் ; நடவடிக்கைகளைப் பாருங்கள். ஆடையென்பது விருந்தல்லஅது பெண்களுக்கான தடுப்பு வேலி. வேலி எந்தளவுக்கு வலுவானதோ அந்தளவுக்கு பாதுகாப்பானது.

வீட்டிலிருப்போர் மஹ்ரமான ஆண்களாக இருந்தாலும் நினைத்த மாதிரியான ஆடைகளில் பெண்கள் இருக்க முடியாது. வரம்புகள் உள்ளன. சொல்லிக் கொடுங்கள். இல்லையேல் விரும்பத்தகாத பித்னாக்களும் பிரச்சினைகளும் ஏற்படலாம்.

பிள்ளைகளுக்கு ஸ்மார்ட் போன் கொடுப்பதைத் தவிருங்கள். குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு வழங்குவதை கண்டிப்பாக தவிர்ந்து கொள்ளுங்கள். கல்வி சம்பந்தமான விடயங்கள் இருப்பின் முன்னின்று முடித்துக் கொடுங்கள்.

பேச்சுக் கலாச்சாரத்தைப் போதியுங்கள். அஜ்னபி மஹ்ரமி வரையறைகளை சொல்லிக் கொடுங்கள். ஆண்பெண் கலப்பின் விபரீதம் பற்றி எச்சரிக்கை செய்யுங்கள். பசியோடு திரியும் கழுகுகளுக்கும் ஓநாய்களுக்கும் உங்கள் பெண் பிள்ளைகளை அநியாயமாக இரையாக்கி விடாதீர்கள்.

குடும்பம் சிதறிவிடும்.. உங்கள் பொடுபோக்கு மீளமுடியா வலிகளை உருவாக்கலாம். வெட்கம் ஒழுக்கம் பண்பாடு மானம் மரியாதை போன்றவற்றை ஊட்டி ஊட்டி வளருங்கள். பெண் பிள்ளை இப்போது தனிமரம் தான் ஆனால் அது எதிர்கால தோப்புக்கான அஸ்திவாரம். அதை நன்றாக விதைத்து விடுங்கள்.

மார்க்கத்தையும் பெண்மையையும் நேசிக்கும் மணவாளனுக்கு மணமுடித்துக் கொடுங்கள். நன்றாக வாழட்டும். சந்தோஷமான வாழ்வில் சங்கமிக்கட்டும். நல்லதொரு குடும்பம் செழிக்கட்டும்.

வாழ்வையும் சந்தோஷத்தையும் தொலைத்து கண்ணீரும் கவலையுமாய் உதிர்ந்து கசங்கிப்போய் கிடக்கும் எத்தனை பெண் பிள்ளைகள். எத்தனை குடும்பங்கள். இது பெண் அடிமைத்துவம் அல்ல. பெண்களுக்கும் உங்கள் பெண்களால் உங்களுக்கும் இழிவுகள் ஏதும் வந்துவிடாமல் காக்கும் அரண்கள்.

பெண் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்ப்பதன் பேறு பற்றி நபிகளாரின் கூற்றைக் கவனியுங்கள்:

“யார் இரு பெண்குழந்தைகளை, அவர்கள் பருவ வயதடையும் வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம்” என்று கூறிவிட்டு, தம் விரல்களை இணைத்துக் காட்டினார்கள். (முஸ்லிம்)

இறைவன் நமக்கான கடமையையும் ஞாபகமூட்டுகின்றான்:

“நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தவரையும் நரகத்தை விட்டும் காத்திடுங்கள்” ( தஹ்ரீம்: 6)

பெண் எனும் பெரும் அமானிதம் அர்த்தமுள்ளதாக அமையட்டும்.

பாஹிர் சுபைர்

பிள்ளைகள் வளர்ப்பது கடினம்தான். அதிலும் பெண் பிள்ளைகளை வளர்த்துக் காப்பது மிகக் கடினமானது. நுட்பமானது கொஞ்சம் சறுக்கினாலும் முடிவு விபரீதமாகும். பெண் ஓர் அத்தியாயத்தின் ஆணிவேர். வெளியில் நடமாடும் போது பெண் பிள்ளைகளின் ஆடைகளைக்…

பிள்ளைகள் வளர்ப்பது கடினம்தான். அதிலும் பெண் பிள்ளைகளை வளர்த்துக் காப்பது மிகக் கடினமானது. நுட்பமானது கொஞ்சம் சறுக்கினாலும் முடிவு விபரீதமாகும். பெண் ஓர் அத்தியாயத்தின் ஆணிவேர். வெளியில் நடமாடும் போது பெண் பிள்ளைகளின் ஆடைகளைக்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *