பிரியா வரம் கேட்டேன்

  • 38

கல்விக்கூட முதல் நாளே
கவர வைத்த முதல் உறவே
கவிகளால் வரைய முடியாத
கற்பனை காவியமே

வதனத்தின் புன்னகைக்கு
வசியம் செய்யும் பூ முகமே
உணவினை பங்கு போட
ஓடி வரும் ஓவியமே

கண்களில் கண்ணீர் வந்தால்
கலங்கிப் போகும் கற்பகமே!
பயிற்சிகளை பார்தெழுதும்
பரகசியமில்லா ஒளி விளக்கே!

சோகங்களை கொட்டித் தீர்க்கும்
சொந்தமில்லா பந்தமே!
ஓய்வு நேரம் அரட்டையடிக்கும்
ஓய்வில்லா ஓடையே!

உன் முகம் பார்க்கும் போது
தோற்குதே சோகங்கள்!
உன் குரல் கேட்கும் போது
பூக்குதே புன்னகை!

உள்ளத்தில் ஒன்றாக
உடலினில் வேறாக
வாழ்ந்திடும் ஈருடல் நாமடி!
நட்பெனும் நந்தவனத்தில்
தவழ்ந்திட்ட நாமோ
சுவனத்திலும் ஒன்றாக
வாழ்ந்திட வரம் கேட்போம்.

Shima Harees
Puttalam

கல்விக்கூட முதல் நாளே கவர வைத்த முதல் உறவே கவிகளால் வரைய முடியாத கற்பனை காவியமே வதனத்தின் புன்னகைக்கு வசியம் செய்யும் பூ முகமே உணவினை பங்கு போட ஓடி வரும் ஓவியமே கண்களில்…

கல்விக்கூட முதல் நாளே கவர வைத்த முதல் உறவே கவிகளால் வரைய முடியாத கற்பனை காவியமே வதனத்தின் புன்னகைக்கு வசியம் செய்யும் பூ முகமே உணவினை பங்கு போட ஓடி வரும் ஓவியமே கண்களில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *