உனை புகழும் வரை

  • 8

அன்றொரு நாள் நீ பழிக்கப்பட்டாய்
இன்றைய நாள் நீ பாராட்டப்படுகிறாய்!
உன் வறுமையால் நீ சிரிக்கப்பட்டாய்
உன் கல்வியால் நீ சீராக்கப்படுகிறாய்!

உனது ஏழ்மையால் நீ உதாசீனமானாய்
உனது பணிவினால் நீ உரிமையாளனானாய்!
மற்றவர் பெருமையால் நீ தூக்கியெறியப்பட்டாய்
உனது பொறுமையால் நீ கொண்டாடப்படுகிறாய்!

உனது பிறப்பினால் நீ சபிக்கப்பட்டாய்
பிறர் வளர்ப்பினால் நீ சரித்திரமானாய்!
பல வஞ்கர்களால் நீ பழிச்சொல் ஏற்றாய்.
உன் வார்த்தைகளால் வஞ்சகர்களை
பழிச்சொல் ஏற்கவைத்தாய்!

பல சில்லறைகளால் நீ தலைகுனிந்தாய்
சில சீதேவிகளால் நீ தலைநிமிர்ந்தாய்!
காலத்தின் சோதனைகளால் நீ பகடக்காயானாய்
உன் சாதனைகளால் நீ பதிலடி தந்தாய்!

காத்திரு உனை உதாசீனம் செய்த
உதடுகள் உனை புகழும் வரை!
பணிவாய் நீ பூத்திரு!
வெற்றிக் கொடிகள் உனை
வரவேற்கும் நாள் வரை!

Shima Harees
Puttalam

அன்றொரு நாள் நீ பழிக்கப்பட்டாய் இன்றைய நாள் நீ பாராட்டப்படுகிறாய்! உன் வறுமையால் நீ சிரிக்கப்பட்டாய் உன் கல்வியால் நீ சீராக்கப்படுகிறாய்! உனது ஏழ்மையால் நீ உதாசீனமானாய் உனது பணிவினால் நீ உரிமையாளனானாய்! மற்றவர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *