தாய்மையின் உறைவிடம்

  • 12

கருவறையை தாங்கிக் கொண்டு
மரண வலி நீ சுமந்து
பூமிக்கு விதையாக்கும்
விளை நிலம் நீ!

இரத்தத்தை பாலாக்கி
இரவுகளை பகலாக்கி
கடினத்தை கரும்பாக்கும்
கலை விளக்கு நீ!

ஆகாரம் நான் உண்டால்
அதை பார்த்து அகம் மகிழும்
அன்பின் வடிவம் நீ!

அருவியிலே நீரெடுத்து
குளிக்க என்னை வைப்பதற்குள்
முற்றாக குளித்து விடும்
முழு மதி நீ!மழலைக்கோர் நோய் வந்தால்
தன்னுயிரை துச்சமாக்கி
தற்காப்பு கொடுக்கின்ற
கவசத்தாய் நீ!

நான் செய்யும் குறும்புகளை
கரும்பாக நினைத்துக் கொண்டு
கண்ணிலே ஆனந்தம் காணும்
கருணைக் கடல் நீ!

பாதையிலே செல்கையிலே
தவறி பிள்ளை வீழ்ந்திட்டால்
பதறி ஓடி கண் கலங்கும்
பாவைச் சுடர் நீ!

நான் வாங்கும் பட்டங்களை
பக்குவமாய் வாங்கிக் கொண்டு
பண்பாட்டை கூறித் தரும்
பக்குவத்தாய் நீ!

உன்னாலே உருவான
உன்னன்பில் உயிரான
உன் மழலை நான் அன்றோ!

பார் போற்றும் பாரினிலே
ஈரெழுத்தில் நடமாடும்
பெண் தெய்வம் நீ அன்றோ!

உன் வாழ்க்கை சிறப்பாகி
உன் ஆயுள் வளமாக
உன் அன்பு நிலையாக
உன் மழலை என்றும்
கையேந்துவேன் தாயே
உனக்காய்!

Shima Harees
Puttalam

கருவறையை தாங்கிக் கொண்டு மரண வலி நீ சுமந்து பூமிக்கு விதையாக்கும் விளை நிலம் நீ! இரத்தத்தை பாலாக்கி இரவுகளை பகலாக்கி கடினத்தை கரும்பாக்கும் கலை விளக்கு நீ! ஆகாரம் நான் உண்டால் அதை…

கருவறையை தாங்கிக் கொண்டு மரண வலி நீ சுமந்து பூமிக்கு விதையாக்கும் விளை நிலம் நீ! இரத்தத்தை பாலாக்கி இரவுகளை பகலாக்கி கடினத்தை கரும்பாக்கும் கலை விளக்கு நீ! ஆகாரம் நான் உண்டால் அதை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *