இளைய தலைமுறை

  • 15

பூவிலும் காற்றிலும்
இரசணை இல்லை
புறவுருத் தோற்றம்
வைத்தால் போதும்.

பூபாளம் கேட்டிட
ஆசையில்லை.
டிக் டொக் காணொளி
செய்தால் போதும்.

கடலில் கால் நனைக்க
ஆசையில்லை.
புகைப்படச் சீரமைப்பு
செய்தால் போதும்.

வீடு சென்று நலம்
கேட்க தேவையில்லை.
புலனத்தில் ஹாய்
சொன்னால் போதும்.

கூடியிருந்து பேசியிருக்க
நேரமில்லை
முக நூலில் பேசு
அது போதும்.

முதியோரின் ஆசிகள்
தேவையில்லை
ட்விட்டரில் பெற்றுக்கொள்
அது போதும்.

இனிய பொழுதுகள்
நினைவில் இல்லை
இன்ஸ்டாகிராம் பதிவுகள்
போதும் போதும்.

கடைக்குசென்று
வாங்கிட தேவையில்லை
இயங்கலைச் சந்தை
போதும் போதும்.

வகுப்பறை கற்கைகள்
தேவையில்லை
ஸூம்முறைக் கல்வி
போதும் போதும்.

கலைச் சொற்கள்:
  1. Profile picture: புறவுறுத்தோற்றம்
  2. Tik Tok video: டிக் டொக் காணொளி
  3. Photoshop Editing: புகைப்படச் சீரமைப்பு
  4. WhatsApp: புலனம்
  5. Facebook: முகநூல்
  6. Twitter: ட்விட்டர்
  7. Instagram: இன்ஸ்டாகிராம்
  8. Online Shopping: இயங்கலைச் சந்தை
  9. Zoom class: ஸூம் முறைக் கல்வி
மக்கொனையூராள்

பூவிலும் காற்றிலும் இரசணை இல்லை புறவுருத் தோற்றம் வைத்தால் போதும். பூபாளம் கேட்டிட ஆசையில்லை. டிக் டொக் காணொளி செய்தால் போதும். கடலில் கால் நனைக்க ஆசையில்லை. புகைப்படச் சீரமைப்பு செய்தால் போதும். வீடு…

பூவிலும் காற்றிலும் இரசணை இல்லை புறவுருத் தோற்றம் வைத்தால் போதும். பூபாளம் கேட்டிட ஆசையில்லை. டிக் டொக் காணொளி செய்தால் போதும். கடலில் கால் நனைக்க ஆசையில்லை. புகைப்படச் சீரமைப்பு செய்தால் போதும். வீடு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *