பரீட்சை மன அழுத்தத்தை கையாள்வது எப்படி?

பரீட்சை மன அழுத்தத்தை கையாள்வது எப்படி?

பரீட்சை தொடர்பாக பீதி கொள்வது பரீட்சை காலப் பகுதியில் உங்கள் கல்விக்கு இடையூறு விளைவிக்கும். இனி இவ் அழுத்தத்தை நீங்களே நிர்வகிக்க இதோ சில வழிகள்.

தேர்வில் மற்றவர்கள் எவ்வாறு செயற்படுவார்கள் என்பதை அறிந்து கொள்ள முற்படுவதனை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

“தேர்வுகள் முக்கியம். ஆனால் தேர்வுகளை விட நீங்கள் மிக அதிகம் முக்கியமானவர்கள்.”

என்பதினை உணருங்கள்.

நீங்கள்,

  • நீங்கள் சயமாக படிப்பதற்கு தேவையான நேரத்தை ஒதுக்குங்கள்.
  • பழைய பரீட்சைகளில் பயிற்சி பெறல்.
  • வழக்காமான ஓய்வுகளை எடுங்கள். Take regular breaks
  • பரீட்சைத் தினத்தை திட்டமிடவும்.

எப்படி நான் பரீட்சையில் கவனம் செலுத்துவது?

பரீட்சை நெருங்க நெருங்க பரீட்சைக்கு தயராகுவது எப்படி என்பதில் பிரச்சினையா? பாடத்தில் கவனம் செலுத்த முதலில் உங்களால் முடியும் என்ற மனநிலையை இப்போதே ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

நான் எப்படி இலகுவாக ஞாபகப்படுத்துவது?

படித்தவற்றை ஞாபகப்படுத்த அது தொடர்பான வித்தியசமான கேள்விகளுக்கு விடையளிக்க முயலுங்கள்.

நான் எப்படி பரீட்சை பயத்திலிருந்து வெளியேறுவது?

உங்களை அடுத்த மாணவனுடன் ஒப்பிடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். மனதை ஒருநிலைப்படுத்திக் கொள்ளுங்கள். எப்போதும் நேர்மறையாக சிந்தியுங்கள். ஏனெனில் அனைத்திற்கும் மாற்றுவழிகள் உண்டு.

உடல் ஆரோக்கியத்தை பேணிக் கொள்ளுங்கள். இரவில் நீண்ட நேரம் கண்விழித்து படிக்க முயற்சிக்காமல் நித்திரை கொள்ளுங்கள். நித்திரையும் நம் பரீட்சையை சிறப்பாக எதிர் நோக்க உதவிடும்.

பரீட்சை நாளன்று,

நேரத்திற்கு எழுந்திருங்கள்.

நேர முகாமைத்துவம் பேணி செல்வதுடன் வினாக்களை விளங்கி விடையளியுங்கள். கடைசி நேரத்தில் பதற்றத்துடன் விடையளிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

நீங்களும் தயார் பரீட்சைக்கு ஒவ்வொரு நாளையும் திட்டமிட்டு முழுக் கவனத்துடன் பரீட்சையை எதிர்நோக்குவதுடன் முடிவடைந்த பாடம் தொடர்பான கலந்துரையாடல்களை முற்றிலும் தவிருங்கள் ஏனெனில் விடையளிக்கும் விதங்கள் மாறுபட்டவை. மனம் தளராது நகருங்கள். தொடர் பயிற்சியும் விடா முயற்சியும் வெற்றிக்கு முக்கியம்!

Now you can study smartly

Binth Minsar
Student counselor(NISD)
கட்டுரை