உங்களுக்கு நீங்கள் மட்டும் தான்

உங்களுக்கு நீங்கள் மட்டும் தான்

தன்னை ஆறுதல்படுத்துவது என்பது வலியையும் பதட்டத்தையும் தரும் சூழ்நிலைகளில் தன்னை அமைதிப்படுத்துவதாகும். வலி உங்கள் மனதில் இருந்தால், அது உள்ளிருந்து மட்டுமே குணமாகும்.

தன்னை துன்பங்களில் இருந்து விடுவிப்பதை நீங்களே தொடங்க வேண்டும். நாம் காயப்படும்போது அல்லது கடினமான சூழ்நிலைகளுக்குச் செல்லும்போது, நம்முடைய அன்புக்குரியவர்களிடமோ அல்லது நம்மைப் பராமரிப்பவர்களிடமோ பேசலாம். அவர்கள் உங்களுக்கு ஆலோசனை மற்றும் ஆதரவை வழங்கக்கூடும், ஆனால் நீங்கள் மட்டுமே இறுதி முடிவை எடுக்கும் திறனைக் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் அந்த முடிவை எடுக்காவிட்டால், வேறு எவராலும் அந்த மாற்றத்தை கொண்டு வரவோ அல்லது உங்கள் காயங்களை ஆற்றவோ முடியாது.

நீங்களே ஆறுதல் படுத்திக் கொள்வதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும். உங்களுக்காக உங்களை விட வேறு யாராலும் சிறப்பாக எதையும் செய்ய முடியாது.

Shafna Nazeer
கட்டுரை வியூகம் வெளியீட்டு மையம்