தனிமை

தனிமை

எல்லோரும் அருகில் இருந்தும்
நீங்கள் சில வேளை உணரலாம்
இனம்புரியாத ஒரு தனிமையை!

அது உங்களை பல நிமிடங்கள்
மௌனமாக்கிடும்
உங்களது மனதை காரணம்
இன்றி காயப்படுத்தும்
காரணம் கேட்டால் அது
உங்களுக்கே புரியாமல் இருக்கும்

இன்றைய சிறு தனிமைக்கே
உங்களால் தீர்வு காண முடியவில்லை

அப்படி இருக்கும் போது
நாளைய கப்றுடைய வாழ்வில்
யாரும் அற்ற தனிமையில்
எப்படி தனித்திருக்க போகிறோம்?

எதைக் கொண்டு தீர்வு
காணப் போகிறோம்?

தனித்திருப்பது முக்கியம் அல்ல
மாறாக நாம் தனித்திருக்கும் போது
எதை சம்பாதித்து கொண்டோம்
என்பதே முக்கியம்

நீ மனமுடைந்த நிலையில்
தனிமையை விரும்பினால்
மனிதர்களிடம் ஆறுதல்
தேடி அலையாதே!

மாறாக நீ இறைவனிடம்
அடைக்கலம் தேடு
அது உன்னை அவனிடமே
நெருங்கவும் வைக்கும்

அவர்கள் தனிமையிலும்
இறைவனை துதி செய்பவர்கள்.

Noor Shahidha
SEUSL
Badulla
கவிதை