அந்த ஒற்றை முத்தம்

அந்த ஒற்றை முத்தம்

என் அருமை தாயே!
மறுபடியும் தருவாயா
எனக்கொரு முத்தம்?

என்னை பெற்றெடுத்த முதல் நாள்
என் நெற்றியில் ஒரு முத்தமிட்டாய்
அன்று தெரியவில்லை
உன் முத்தத்தின் அருமை

தாயே! அன்று தெரியவில்லை
உன் முத்தத்தின் அருமை

நான் உறங்கிய பின்னால்
என் அருகே வந்து
என் நெற்றியை முத்தமிட்டு
தலையை தடவிச் சென்றாய்
அன்று தெரியவில்லை
உன் முத்தத்தின் அருமை

நான் உன்னை விட்டு
தூர செல்லும் போது
என்னை ஒவ்வொரு முறையும்
முத்தமிட்டு வழியனுப்பி வைத்தாய்
அன்று புரியவில்லை
உன் முத்தத்தின் அருமை

நான் திருமண பந்தத்தில்
நுழையும் போது
ஆனந்த கண்ணீருடன் முத்தமிட்டாய்
அன்று தெரியவில்லை
உன் முத்தத்தின் அருமை

தாயே! அன்று தெரியவில்லை
உன் முத்தத்தின் அருமை

நான் உன்னை
பல நாட்களுக்கு ஒரு முறை
பார்க்க வந்து செல்லும் போதும்
கண்ணீர் நிரம்பிய நிலையில்
ஏக்கத்துடன் ஒரு முத்தமிட்டாய்
அன்று புரியவில்லை
உன் முத்தத்தின் அருமை

தாயே! அன்று புரியவில்லை
உன் முத்தத்தின் அருமை

கடைசியாக நீ
சுகவீனமுற்றிருக்கும் போது
என்னை உன் அருகே அழைத்து
தலையை தடவி
பாசம் நிறைந்த நிலையில்
ஒரு முத்தமிட்டாய்
அன்று தெரியவில்லை உன்
முத்தத்தின் அருமை

தாயே! அன்றும் தெரியவில்லை
உன் முத்தத்தின் அருமை
ஆனால் என் அன்புத் தாயே
இன்று தான் எனக்கு புரிந்தது

நான் என் குழந்தைகளிடம்
ஒவ்வொரு முத்தத்திற்கும்
ஒவ்வொரு முறை ஏங்கும் பொழுது
நான் ஏங்காமலே
நீ தந்த முத்தங்களின் நினைவுகள்
என்னை ஆழ் மனதில்
வதைத்துக் கொண்டிருக்கிறன

என் உயிர்த் தாயே
என்னை மன்னித்து விடு
அன்று புரியவில்லை
உன் முத்தத்தின் அருமை

ஆனால் இன்று புரிந்து கொண்டேன்
உன் முத்தத்தின் அருமையை

தாயே இன்று புரிந்து கொண்டேன்
உன் முத்தத்தின் அருமையை

தாயே உன்னிடம் மறுபடியும்
நான் மன்னிப்பு வேண்டுகிறேன்
தயவுசெய்து என்னை மன்னித்து விடு

நீ ஏங்கிய போது நான்
உன்னை கண்டு கொள்ளவில்லை
ஆனால் இன்று நான் உனக்காக
ஏங்கும் பொழுது
நீ என் அருகில் இல்லை

தாயே நீ மறுபடியும் வரமாட்டாயா
உன்னை கட்டியணைத்து ஒரு முத்தமிட!
உன்னை கட்டியணைத்து ஒரு முத்தமிட!

Fasool Muhammadh Fasroon
உடநிதிகம
கெகிராவ
கவிதை