முதல் மேடையேறலில்

முதல் மேடையேறலில்

இதயப் படபடப்புடன்
கண்களில் கலக்கத்துடன்
பின்னிய கால்களை முன்னேவைத்து
மொழிய வேண்டியதை
மெளனமாக ஞாபகப்படுத்தி
தருணத்தை எதிர்ப்பார்த்து
அடிகளை எடுத்து வைத்து
முயன்று மேடையேறி
முன்னே சென்றால்

முன்னிருந்து முகங்களைப்
பார்த்ததும்
மொழிகள் முள்ளாய்
தொண்டையில் சிக்க
திக்கி திணறி
வியர்த்து விதிர்த்து
விரைவாக விடயங்களை
வியாக்கியானம் செய்து விட்டு
ஆசனத்தை நோக்கி
அமைதியுடன் நடைப்போட்டேன்
முதல் மேடையேறலில் முழுத்திருப்தியின்றி!

Rushdha Faris
South Eastern University of Sri Lanka
கவிதை