காட்டுவாசிகளின் பௌர்ணமி விழா

  • 18

கடற்கொள்ளையர்களின் புதையல்
【The treasure of pirates】
【பாகம் 27】

“இந்த உலகத்திலேயே அதிகமான காந்தப்புலம் இந்த டோரடோ தீவுல தான் இருக்கு. ஆனா ஒவ்வொரு பௌர்ணமி அன்னிக்கும் அந்த காந்த சக்தி பூமிக்குள்ள உள்வாங்க பட்டுடும். அன்னிக்கு தான் தீவு வாசிகள் விழா எடுப்பார்கள். கடல் தேவதையை வழிப்படுவார்கள்.” என்று தாத்தா சொல்லிக்கொண்டே போனார்.

“அப்படின்னா தாத்தா பௌர்ணமி அன்னிக்கு காந்த சக்தியால நமக்கு எந்த பாதிப்பும் இல்லை அப்படித்தானே?” என்று கேட்டான் யுவான்.

“பாதிப்பு இல்லை என்று சொல்ல முடியாது. ஆனா நமக்கு எதிராக நம்ம ஆயுதங்களே திரும்ப கூடும்.” என்றாள் சார்லட்.

“என்ன கொளப்புரீங்க?” என்றாள் ஐரிஸ்.

“போனவாட்டி நடந்தது என்னன்னு தெரிஞ்சா இப்படி பேச மாட்டீங்க. போன பௌர்ணமி அன்னிக்கி இரும்பாலான ஆயுதங்களும் அங்க இருந்தது. காந்த சக்தி இருக்காது என்று நினைத்து தான் கொண்டு போனாங்க. ஆனா திடீரென என்னாச்சுன்னு தெரியல ஆயுதங்கள் மலையை நோக்கி இழுக்கப்பட்டதும் இடையில் இருந்த ஆளுங்க எல்லாம் வெட்டப்பட்டு கீழே விழுந்து இறந்துட்டாங்க.” என்றாள்.

“ஆமா. அதுல தான் என்னோட அம்மாவும் இறந்தாங்க.” என்றான் சோகத்துடன் மேனி.

“இந்த முறை யாருக்கும் எதுவும் ஆகாது. எந்த காந்த சக்தியும் இந்த சாமுரியத்தால செஞ்ச ஆயுதங்களை அசைக்க முடியாது.” என்றாள் சார்லட்.

“சரி. நீங்க இந்த தீவை சேர்ந்த பழைய வம்சாவளியை சேர்ந்தவங்களா? இல்லை எங்க தாத்தா போல விபத்தால் இங்க வந்து சேர்ந்தவங்களா?” என்று கேட்டான் யுவான்.

“ரெண்டுமே இல்ல. நானாவே விரும்பி தான் இங்கே வந்து சேர்ந்தேன். நான் இங்கிலாந்தை சேர்ந்தவள். இதோ இந்த பையன் தீவு வாசிதான்.” என்றாள்.

சார்லட் பேசுவதை கேட்கையில் ஆச்சர்யமாக இருந்தது.

“என்னது நீங்களே விரும்பி இங்க வந்தீங்களா? கண்டிப்பாக இதற்கு ஏதாவதொரு நியாயமான காரணம் இருக்கும் இல்லியா?” என்று கேட்டாள் ஐரிஸ்.

“ஆமா திரும்பி போகமுடியாது. அப்படி போறதும் கஷ்டம் என்னும் தெரிஞ்சிகிட்டே வந்திருக்கீங்க. அது ஏன் என்னு தெரிஞ்சிக்கலாமா?” என லில்லி கேட்டாள்.

ஆனால் சார்லட் ஒண்ணும் பதில் சொல்லாமல் தன் இடையில் இருந்த குருவாளை அழுத்தமாக பிடிப்பதை யுவான் கண்டு கொண்டான். வேறெவரும் சார்லட்டை நோட்டம் விடவில்லை. ஆனால் யுவானுக்கு ஏதோ ஒன்று தப்பாக இருப்பது போலவே தோன்றியது. யுவான் கொஞ்சம் தேறி யார்துணையும் இன்றி நடக்க முடிந்தது.

மறுபுறம் கேப்டன் குக் மற்றும் அவனது ஆட்கள் தப்பித்து சென்ற மரியாவை தேடி அலையாய் அலைந்தனர்.

மலையை அண்மித்த பகுதிகளில் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக கேட்க ஆரம்பித்தது. அது எல்லோரது காதுகளுக்கும் கேட்டது.

“தீவு வாசிகள் எல்லோரும் சேர்ந்து விழாவை ஆரம்பித்து விட்டனர். மேளங்கள் சத்தம் கேட்க ஆரம்பித்து விட்டது.” என்றாள் சார்லட்.

“ஒஹ்ஹ் நாம அப்போ மலைக்கிட்ட நெருங்கிட்டோம் இல்லியா?” என்றாள் ஐரிஸ்.

அதே நேரத்தில் நிக்கலஸ் அந்த காட்டுமிராண்டிகள் கூட்டத்தில் இருந்து தப்பிப்பதற்கு வழி தேடிக்கொண்டு இருந்தார். தன்னுடைய மகளை அவர் இங்கு பார்த்து விட்டதாலும் மாரியாவுக்கு என்ன ஆயிற்றோ என்ற வருத்தத்தினாலும் அவரால் கவலையை தவிர வேறொன்றையும் உணர முடியவில்லை.

அப்போது அந்த இடத்திற்கு ஒரு காட்டுவாசி வந்து சேர்ந்தான். நிக்கலசையும் மற்றவர்களையும் அடைத்து வைத்திருந்த கூண்டை திறப்பதற்கான சாவி அவனிடம் தான் இருந்தது. அதை எப்படியோ பார்த்துவிட்ட அவர் அவனை ஏமாற்றி அதனை எடுக்க முயன்றார்.

சமயம் பார்த்து கூண்டுக்கு வெளியே நின்றவனை கூண்டோடு இழுத்து அவன் கழுத்தை நெறித்து மயக்கமடைய வைத்தபின்னர் லாவகமாக சாவியை எடுத்து கொண்டு கதவையும் திறந்தார்.

அவரோடு மாட்டியிருந்தது வேறு யாரும் இல்லை கேப்டன் குக் தான் தப்பிப்பதற்காக பணயம் வைத்த அவனது சிப்பாய்கள் தான். நிக்கலஸிடம் அவர்கள் ஒரு ஒப்பந்தமொன்றை மேற்கொண்டார்கள்.

“நாங்க யாரை நம்பி இந்த கடற்பயணத்தை ஆரம்பித்தோமோ அவனே எங்களை பணயம் வைத்துவிட்டு தப்பிவிட்டான். ஆனால் உனக்கு கேடு நினைத்த எங்களையும் நீயே காப்பற்றினாய், அதனால இப்போ இருந்து நாங்க உன் பக்கம் இருக்கிறோம். காட்டுக்குள்ள போய் உன்னோட குடும்பத்தை காப்பாற்றுவதற்கும் அந்த கொடூரனை கொல்வதற்கும் நாங்க உன் கூட இருப்போம்.” என்று அவர்களில் ஒருவன் சொல்ல அனைவரும் அதற்கு உடன் பட்டனர்.

அதற்கேற்ப அவர்கள் அந்த கப்பலில் இருந்து தப்பிக்க முன்னர் ஏனையோரையும் விடுவித்த பின்னர் அந்த கப்பலில் இருந்த ஆயுத அறைக்கு சென்று வெடிபொருட்கள் எல்லாவற்றையும் எடுத்து ஒவ்வொரு இடமாக பொருத்தி விட்டு கடலில் குதித்து கரையை அடைந்தனர்.

அவர்கள் திட்டமிட்டபடியே அந்த கப்பல் குறித்த நேரத்தில் வெடித்ததுடன் உள்ளே இருந்த அத்தனை காட்டுவாசிகளும் சுக்குநூறாகினர்.

ஏதோ பெரிய வெற்றியை கொண்டாடுவது போல கரையில் இருந்து கொண்டு இவர்கள் அனைவரும் கூச்சலிட்டனர். கடலில் ஏற்பட்ட வெடிச்சத்தம் காட்டுக்குள் சென்று கொண்டிருந்த ஐரிசின் குழுவினருக்கும் அதே சமயம் கேப்டன் குக்கின் கூட்டத்திற்கும் கேட்டது.

வினோதமான இந்த சத்தமும் பறவைகளின் பயந்த ஒலியும் எல்லோரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது. மாரியாவுக்கு மட்டும் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை.

அதன்பின்னர் நிக்கலசும் அவரோடு இணைந்திருந்த குக்கின் ஆட்களும் காட்டுக்குள் பயணிக்க ஆரம்பித்தனர்.

தொடரும்
A.L.F Sanfara

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirates】 【பாகம் 27】 “இந்த உலகத்திலேயே அதிகமான காந்தப்புலம் இந்த டோரடோ தீவுல தான் இருக்கு. ஆனா ஒவ்வொரு பௌர்ணமி அன்னிக்கும் அந்த காந்த சக்தி பூமிக்குள்ள…

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirates】 【பாகம் 27】 “இந்த உலகத்திலேயே அதிகமான காந்தப்புலம் இந்த டோரடோ தீவுல தான் இருக்கு. ஆனா ஒவ்வொரு பௌர்ணமி அன்னிக்கும் அந்த காந்த சக்தி பூமிக்குள்ள…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *