பவள விழாக் காணும் ஐக்கிய நாடுகள் சபை

  • 10

ஐக்கிய நாடுகள் தினம் ஆண்டு தோறும் ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி நினைவு கூறப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பானது 1945 ஆம் ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி தோற்றுவிக்கப்பட்டு 1948 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. ஐ.நா.வின் நோக்கங்களையும், சாதனைகளையும் உலகெங்கும் எடுத்துக் கூறுவதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

பொதுச்சபை, பாதுகாப்புச் சபை, சமூக பொருளாதார சபை, நம்பிக்கை பொறுப்புச் சபை, சர்வதேச நீதி மன்றம், செயலகம் போன்ற பிரதான கூறுகளால் கட்டியெழுப்பப்பட்டதே ஐ.நா.சபை ஆகும். இது சர்வதேச ரீதியில் அமைதி, பாதுகாப்பை பேணல், நாடுகளிடையே நல்லுறவைப் பேணல் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை நிலைநாட்டல்… போன்ற இலக்குகளை நோக்காகக் கொண்ட ஒரு அமைப்பாகும். இதன் தலைமையகம் நியூயோர்க் நகரிலும் அதன் கிளைகள் உலகின் பிரதான நகரங்களிலும் அமைந்துள்ளன.

இச்சபையில் 193 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன. இலங்கை 1951 இல் இணைந்து கொண்டது.

ஐ.நா.வின் முக்கிய நோக்கங்கள்

  • உலக நாடுகளில் அமைதியை நிலைநிறுத்தல்.
  • நாடுகளிடையே நல்லுறவைப் பேணல்.
  • ஏழை மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தவும், பசி, பிணி, கல்லாமை ஆகியவற்றை ஒழிக்கவும் கூட்டாக முயற்சி செய்தல்.
  • குறித்த குறிக்கோள்களை அடைவதில் உலக நாடுகளுக்கு உதவும் பொருட்டு பொது அரங்கமாக செயற்படல்.

பொதுச் சபையால் தேர்ந்தெடுக்கப்படும் செயலாளரே இதன் தலைவராவார். பதவிக் காலம் 5 வருடங்களாகும்.

அவ்வரிசையில் இப் பதவியினை வகித்த ஐ.நா. பொதுச் செயலாளர்கள்

  1. ட்ரிக்வெலி (1946-1952)
  2. டெக் ஹெமர் (1953-1961)
  3. ஊதான்ட் (1961-1971)
  4. கேர்ட் வால்ட்ஹைம் (1972-1981)
  5. ஜேவியர் பெரஸ்டி குவெல்லர் (1982-1991)
  6. பூட்ரோஸ் பூட்ரோஸ் காலி (1992-1996)
  7. காபி அனான் (1997-2006)
  8. பான் கி மூன் (2007-2016)
  9. அன்டோனியோ குட்டரஸ் (2017- தற்போது)

ஐக்கிய நாடுகள் சபையின் இணை நிறுவனங்கள்

  • உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO)
  • சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO)
  • சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA)
  • சர்வதேச சிவில் விமான அமைப்பு (ICAO)
  • விவசாய மேம்பாட்டுக்கான சர்வதேச நிதியம் (IFAD)
  • சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO)
  • சர்வதேச நாணய நிதியம் (IMF)
  • சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU)
  • ஐ.நா. கல்வி, விஞ்ஞான, கலாசார அமைப்பு (UNESCO)
  • உலகளாவிய தபால் ஒன்றியம் (UPU)
  • உலக வங்கிக் குழு (WBG)
  • உலக வானிலை அமைப்பு (WMO)
  • போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐ.நா.அலுவலகம் (UNODC)
  • உலக சுகாதார அமைப்பு (WHO)
  • அகதிகளுக்கான ஐ.நா.உயர்ஸ்தானிகர் அலுவலகம் (UNHCR)
  • உலக உணவுத் திட்டம் (WFP)

75 ஆண்டு நிறைவை கொண்ட ஐ.நா.சபையின் பேச்சுவார்த்தை “நாம் விரும்பும் எதிர்காலம். நமக்குத் தேவையான ஐ.நா.சபை: எமது கூட்டு உறுதிப்பாட்டுக்கான பலதரப்பட்ட அர்ப்பணிப்பு” எனும் சுலோகத்தை கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் ஐ.நா.வின் டெக் ஹெமர் நூலகம் 75 முக்கிய ஆவணங்களை ஆராய்ந்து வருகின்றமை சிறப்பம்சமாகும்.

ASMA MASAHIM
PANADURA
SEUSL

ஐக்கிய நாடுகள் தினம் ஆண்டு தோறும் ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி நினைவு கூறப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பானது 1945 ஆம் ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி தோற்றுவிக்கப்பட்டு 1948…

ஐக்கிய நாடுகள் தினம் ஆண்டு தோறும் ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி நினைவு கூறப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பானது 1945 ஆம் ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி தோற்றுவிக்கப்பட்டு 1948…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *