தூரம் போன சிநேகிதியே!

  • 13

சிந்தைக்குள் சிற்பமான
சிற்பியின் கலையழகே!
சிதறாமல் சிக்கியதும்
சிறு இதய அறைக்குள்ளே!

சிறகடிக்க துணையாக
சித்திரமாய் வந்தவளே!
சிகரமெல்லாம் விளையாடும்
சின்னஞ் சிறு தேவதையே!

சிடுமூஞ்சி என்னை மெல்ல
சிவப்பிதழ் சிரிக்க வைத்தவளே!
சினம் கொண்டு நீ நின்றால்
சிங்கத்தின் வாரிசும் நீயே!

சிநேகிதம் எனும் உறவை
சிறப்பாக தந்தவளே!
சிறு உள்ளம் போதாது
சிகரம் உன்னை நினைக்கவே!

சிலையென நான் இன்று
சினுங்கி நிற்பதும் ஏனோ!
சிநேகிதி உன்னைக் காணாது
சிதறியதும் என் மனம் தானோ!

சினிமா நாம் ரசிக்க
சில பள்ளி செல்லா களவுளே!
சிறு பிள்ளை வகுப்புக்குள்
சிக்கலாய் பிரம்படி ஆனதுவே!

சிறப்பாக எனக்காக
சிநேகிதியாய் வந்தவளே!
சிவப்பாக நானில்லையென
சிறு நொடியும் விலகலயே!

சித்திரத்தின் கோலாராய்
சிறு காலம் மாறிப் போகையிலே!
சிதறி தனித் தனியாய்
சிக்கித் தவிக்கிறோமே தனிமையிலே!

Rafeeul
ANURADHAPURA
SEUSL

சிந்தைக்குள் சிற்பமான சிற்பியின் கலையழகே! சிதறாமல் சிக்கியதும் சிறு இதய அறைக்குள்ளே! சிறகடிக்க துணையாக சித்திரமாய் வந்தவளே! சிகரமெல்லாம் விளையாடும் சின்னஞ் சிறு தேவதையே! சிடுமூஞ்சி என்னை மெல்ல சிவப்பிதழ் சிரிக்க வைத்தவளே! சினம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *