அலிஸப்ரியிடம் அரசியலுக்கு அப்பால் சமூகத்திற்காக

  • 74

அரசியல் இவை ஒரு புறம் இருக்க. இதை மீறிய ஒரு ஒற்றுமை மார்க்கம் கலிமாவை ஏற்ற முஸ்லிம் ஒருவருக்கு ஒருவர் சகோதரன்.

மாஷா அல்லாஹ் நீங்கள் 20 வது சட்ட வரைபில் முளுமையாக பங்கெடுத்தது தொடர்பாக ஓரு முஸ்லிம் என்ற வகையில் உண்மையில் பெருமையடைகிறேன்.

இலங்கையில் கல்வித்துறையில் ஏனைய சமுகங்களால் முஸ்லிம் சமுகம் பின் தள்ளப்பட்டுள்ள நிலையில், மற்ற சமூகங்களுக்கு மத்தியில், நாமும் சளைத்தவர்கள் அல்ல என்பதை சட்டத்தினால் சாகாசம் காட்டி சாதித்ததை பாராட்டாமல் இருக்க முடியாது.

கொளரவ அமைச்சர் அவர்களே நாட்டில் நீதியில் நீதிச் சமுத்திரங்கள் இருக்கும் நிலையில், 20வது திருத்த விவாதத்தின் போது அரசின் சார்பில் ஆஜரான நீங்கள், சட்டத்தை வாட்டி வதக்கி மடக்கிக் கசக்கி சட்டத்தை சாறாக்கி பருகி இருப்பதை அன்று தான் அவதானித்தேன்.

நாட்டுக்கே நீதி வழங்கும் நீதிக் கடலில் சற்றும் சளைக்காமல் களைக்காமல் எதிர் நீச்சல் அடித்தது. அது உங்கள் திறமை. உங்களுக்கு நிகர் நீங்களே.

இவை ஒரு புறமிருக்க விஷட திறமை, அறிவு கொண்டேர் அல்லாஹ்வால் தேர்ந்தெடுத்து விஷட அருள் புரியப்பட்டவர்கள். அவ்வாறானவர்கள் சமுதாய பிரச்சினைகள் என வரும்போது சமுதாயத்திற்கான விஷேட பொறுப்புதாரிகள் அவ்வாறாக திறமை கொண்டவர்களுக்கு அல்லாஹ்விடம், அவருக்கு அருளப்பட்ட அருளுக்கான கேள்வியும் உண்டு.

மாஷா அல்லாஹ் இந்த அரசாங்கத்தில் தங்களால் செய்ய முடியாதது என ஒன்றும் கிடையாது என நினைக்கிறேன்.

இன் நிலையில் நமது ஜனாஸா விடயத்தில் மட்டும் சட்டத்தை மாற்ற முடியாமல் போனதும் 100% நம் விடயத்தில் சட்டம், சானுக்குச் சான் சட்டம் நிலை நாட்டப்படுவதும், சர்வதேச சட்டத்தையும், சர்வதேச ஆய்வுகளையும் மீறுவது கவலையாவே இருக்கின்றது.

தாங்களுடன் சட்டம் விவாதிக்க தகுதி அற்றவனாக இருந்தாலும், மார்கம் சமுகம் என்ற விடயத்த்தில் தர்கித்துக் கொள்வதில் பிழை இல்லை என்ற நினைக்கிறேன். அதுவே என் கடமையும் கூட.

நாட்டில் மீண்டும் கொரோனா பிரச்சினை தலை துக்கியுள்ளது. அனைத்து மக்களும் இதில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும். இதி்ல் மாற்றுக் கருத்தில்லை.

இருந்தாலும் மரணம் என்பது நிச்சயமே. அது அன்றானாலும் இன்றானாலும் என்றானாலும் நிகழலாம். அது நிச்சயிக்கப்பட்டது எழுதப்பட்டது.

அடுத்த கொரோனா மரணம் யாரை ஆற்கொள்ளும் என்பதை யாராலும் சொல்லி வைக்க முடியாது. அது யாராகவும் இருக்கலாம். கொரோனா ஆதிக்கத்தில், அதிகாரத்தில், உலகின் உச்சத்தில் இருந்த அமெரிக்கா ஜனாதிபதியை விட்டு வைக்கவும் இல்லை. செகுசு வாழ்கையில் உலக சொர்கத்தில் வாழ்ந்த பால சுப்ரமணியத்தை விட்டு வைக்கவும் இல்லை.

அடுத்த கொரோனா மரணம் யாரை ஆற்கொள்ளும் என்பதை யாராலும் சொல்லி வைக்க முடியாது. அது யாராகவும் இருக்கலாம். அலாஹ் அனைவரையும் பாதுகாக்க வேண்டும் என்பது தான் எனது பிரார்த்தனையும்.

ஆனா‌ல் ஒரு முஸ்லிம் என்ற வகையில் ஜனாஸாக்கள் எறிக்கப்படும் போது மிகுந்த கவலையும் வேதனையும் அளிக்கிறது. மனம் துடிக்கிறது, உள்ளம் பதறுகிறது. நெஞ்சு வலிக்கிறது. அனைவரையும் அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.

கொரோனா தொற்று மீ்ண்டும் பரவும் நிலையில் ஒரு முஸ்லிம் மரணிப்பாரானால், கொளரவ அமைச்சர் அவர்களே இந்த நாட்டின் வரலாற்றில் எனைய சமுகங்களால் இந்த நாட்டிற்கு விடுதலை என்ற பெயரிலும், அரசியல் புரட்சிகள் என்ற பெயரிலும், பரிய அழிவுகள் எற்படுத்பட்பட்ட போதிலும். முஸ்லிம் சமுகம் இந்த நாட்டிற்கு எந்த விதமான அழிவையோ நஷ்டத்தையோ ஏற்படுத்தியது வரலாறு கிடையாது. முஸ்லிம்களின் வரலாற்றில் முஸ்லிம்கள் இந்த நாட்டின் நற் பெயருக்கும் அபிவிருத்திக்கும் சதகமாகவே செயல்பட்டுள்ளனர்.

மனித இனத்தின் துரேகியான ஸஹ்ரான் என்பவன் எவனே ஒருவனின் தேவைக்காக செய்த துரேகம் ஒட்டு மொத்த சமுதாயத்தின் செயலாக கருத முடியாது.

நிறை வேற்றப்பட்ட 20 ஆம் திருத்தச்சட்ட மூலமும் முஸ்லிம்களினாளேயே வெற்றி கொள்ளப்பட்டது.

இவ்வாறான ஒரு நிலையில் முஸ்லிம்களின் ஜனாஸா தொடர்ந்தும் எரிக்கப்படுவது நியாயமானதா?

தாங்கள் இந்த நியாயத்தை மேல் இடத்தில் ஒரு முஸ்லிமின் மணக்க குமுறலாக எடுத்தியம்புவீர்கள் என நினைக்கிறேன். எனவே தோடர்ந்தும் இதே நிலை தானா என்பதை, சட்டத்தில் சக்கரமாய் செயல்பட்டு, சாகசம் புரிந்து, சாதனை படைத்த உங்களிடம் சமுதாயத்தின் சார்பாக வேண்டி நிற்கின்றேன்.

உங்களின் திறமையும் அறிவும் முஸ்லிம் சமுதாயத்திற்கு காட்டில் பெய்த மழையாகவும், கடலில் கலக்கும் நதியாகவும் ஆகாமல் இருக்க வேண்டுகிறேன்.

நன்றி
பேருவளை ஹில்மி

அரசியல் இவை ஒரு புறம் இருக்க. இதை மீறிய ஒரு ஒற்றுமை மார்க்கம் கலிமாவை ஏற்ற முஸ்லிம் ஒருவருக்கு ஒருவர் சகோதரன். மாஷா அல்லாஹ் நீங்கள் 20 வது சட்ட வரைபில் முளுமையாக பங்கெடுத்தது…

அரசியல் இவை ஒரு புறம் இருக்க. இதை மீறிய ஒரு ஒற்றுமை மார்க்கம் கலிமாவை ஏற்ற முஸ்லிம் ஒருவருக்கு ஒருவர் சகோதரன். மாஷா அல்லாஹ் நீங்கள் 20 வது சட்ட வரைபில் முளுமையாக பங்கெடுத்தது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *