நீ மட்டும் போதுமடி

  • 13

தலயணையும் தேவையில்லை
உன் தாய் மடியே போதுமடி!
பூச் சரங்கள் தேவையில்லை
உன் புன்னகையே போதுமடி!

குயில் பாட்டு தேவையில்லை
உன் குறும்புப் பேச்சு போதுமடி!
கவரும் சிற்பம் தேவையில்லை
உன் காந்தக் கருவிழி போதுமடி!

குமரியின் அழகு தேவையில்லை
உன் குழந்தை மனதே போதுமடி!
தங்கத் தட்டு தேவையில்லை
என் தங்கை நீயே போதுமடி!

அழகு எனக்குத் தேவையில்லை
உன் அதீத அக்கறை போதுமடி!
பதவி எனக்கு தேவையில்லை
உன் பக்குவப் பார்வை போதுமடி!

உலகம் எனக்கு தேவையில்லை
உன் உன்னத அன்பு போதுமடி!
மகாலட்சுமி எனக்கு தேவையில்லை
மறு தாயாய் நீ மட்டும் போதுமடி!

Shima Harees
Puttalam

தலயணையும் தேவையில்லை உன் தாய் மடியே போதுமடி! பூச் சரங்கள் தேவையில்லை உன் புன்னகையே போதுமடி! குயில் பாட்டு தேவையில்லை உன் குறும்புப் பேச்சு போதுமடி! கவரும் சிற்பம் தேவையில்லை உன் காந்தக் கருவிழி…

தலயணையும் தேவையில்லை உன் தாய் மடியே போதுமடி! பூச் சரங்கள் தேவையில்லை உன் புன்னகையே போதுமடி! குயில் பாட்டு தேவையில்லை உன் குறும்புப் பேச்சு போதுமடி! கவரும் சிற்பம் தேவையில்லை உன் காந்தக் கருவிழி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *