மழை நாளொன்றில்!

  • 10

சுட்டெரிக்கும் சூரியன் சட்டென மறைந்திட
சில்லென்ற குளிர் காற்றில் மேனி சிலிர்த்திட
இடி இடித்த இசையோடு கரு மேகங்கள் கலைந்து ஓடிட
முத்து முத்தாய் மழைத்துளி மண்ணில் விழுந்திட
மண் வாசணை கிளம்பி மண்ணும் குளிர்ந்தது!

இந்த வானுக்கும் மண்ணுக்கும் தான் என்ன உறவு?
இத்தனை ஆர்ப்பாட்டங்களுடன்
மண்ணை முத்தமிட்ட பூரிப்பில்
முத்து மழை பொழிந்து கொண்டிருக்க
ஜன்னலோரமாய் நின்று கம்பிகளுக்கிடையில்
முகம் புதைத்தவளாய்
வெளியே சிந்தும் மழைத்துளியை கையில் ஏந்தியபடி
நான் மட்டும் தனியாக!
என் சிந்தனைகளோ சிலகாலம்
பின்னோக்கி சிறகடிக்கத் தொடங்கின!

அன்று நான் உன்னோடு ஒருகுடைக்குள்
மழையில் நடை போட்டதும்!
குடையைத் தள்ளிவிட்டு மழையில் ஆட்டம் போட்டதும்!
மர நிழலில் ஒதுங்கி காகித ஓடங்களை
மழை நீரில் மிதக்க விட்டதும்!
ஒருவர் ஓடத்தை ஒருவர்
நீரில் மூழ்கடித்து சண்டை போட்டதும்!
சாலையோரக் கடையில் ஐஸ்கிரீம் குடித்ததும்!
குடித்த ஐஸ்கிரீமை நீ மழையில் தட்டி விட்டதும்!
நெற்றியில் வடிந்த மழை நீரை நீ
இலேசாக துடைத்து விட்டதும்!
இன்றும் பசுமையான நினைவுகளாய் மனதில் நிற்கிறது!

அன்று தான் உன்னை நான்
கடைசியாக பார்த்தது!
எப்போதெல்லாம் மழை பெய்கிறதோ
அப்போதெல்லாம் என் கண்கள்
நீ என் அருகில் வேண்டுமென்று அடம்பிடிக்கிறது!

உன்னைத் தொலைக்கவில்லை நான்
ஆனாலும் இன்றும் தேடிக்கொண்டு
தான் இருக்கிறேன்.
அந்த நாட்கள் மீண்டும் வராதா
என்று உள்ளம் ஏங்குகிறது!
நெஞ்சில் ஆணி அடித்தது போல் சில நினைவுகள்!

மறக்கத்தான் முடியுமா மறந்து தான் போகுமா?
சில்லென்ற காற்றில் வந்த சில மழைத்துளிகள்
முகத்தில் பட்டு சிலிர்த்திட
குடையோடு வெளியே நடைபோடுகிறேன்!
நான் மட்டும் தனியாக!

Fathima Nifra Nijam
Daluwakotuwa,
Kochchikade,
Negombo.

சுட்டெரிக்கும் சூரியன் சட்டென மறைந்திட சில்லென்ற குளிர் காற்றில் மேனி சிலிர்த்திட இடி இடித்த இசையோடு கரு மேகங்கள் கலைந்து ஓடிட முத்து முத்தாய் மழைத்துளி மண்ணில் விழுந்திட மண் வாசணை கிளம்பி மண்ணும்…

சுட்டெரிக்கும் சூரியன் சட்டென மறைந்திட சில்லென்ற குளிர் காற்றில் மேனி சிலிர்த்திட இடி இடித்த இசையோடு கரு மேகங்கள் கலைந்து ஓடிட முத்து முத்தாய் மழைத்துளி மண்ணில் விழுந்திட மண் வாசணை கிளம்பி மண்ணும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *