நியாயமா?

  • 4

காட்டு மரமாய் வளர்கிறாள் அவள்
கண்ட படிக்கு அதை வெட்டலாமா?
கண் முன்னே நியாயம் புதைக்கப்படலாமா?

இறை நியதிக்கு அமைய அவள் பிறந்து விட்டால்.
இரவும் பகலுமாய் மாறி மாறி சுழல்கிறது
இளமைப்பருவம் அவளது.

புத்தி சொல்ல யாருமில்லை
பழி சுமத்த மட்டும் ஆட்களுக்கு
பஞ்சமா இல்லை!
பருவம் கடந்த பேதை அவள்

ஆறுதலுக்கு யாருமில்லை
அன்பு செய்ய மனமில்லை
அடி உதைக்கு பழக்கப்பட்ட உடம்பு
அனாதை எனும் பெயரால் புண்ணான உள்ளம்

மனிதம் இல்லாத
மிருகங்களான மனிதர்கள்
அந்த ஓநாய் கூட்டத்திடமிருந்து
அவள் அவளையே பாதுகாக்க
பட்ட படு பெரும்பாடு

கன்னிப் பெண் அவள்
கற்பின் ராணி அவள்
கல்யாணப் பேச்சு மட்டும்
கை கூடாத கருமம் தான் என்னவோ?
கஷ்டங்கள் ஏன் தான் தொடர்கதை ஆகிறதோ?

இலவசமாய் கிடைக்கும்
இனிய தூக்கம் கூட
இவளுக்கு வருவதில்லையே?
இரவுப்பொழுது ஒவ்வொன்றும்
இமைகளை நனைக்காமல் இருப்பதில்லை.

இவள் வாழ்வின் ஒவ்வொரு நொடிக்காகவும்
வாழ்வோடு போராடுகிறாள்.
காட்டு மரமாய் வளர்ந்த அவள்
கல் நெஞ்சக்காரி இல்லை
தன் மனமுடைந்தாலும்
தன்னால் யாருக்கும் கஷ்டம் கொடுக்காதவள்.
கண்ணீரிலே வாழ்ந்தவள்

காட்டுமரமான அவள்
கற்புக்காக போராடி
தன்னை மேய வரும்
மிருகக் கூட்டத்திடமிருந்து
தன்னைப் பாதுகாத்து
வேலி போட்டு
மழையில் நனைந்து
வேயிலில் காய்ந்து

காட்டு மரமாய் அவளாகவே வளர்ந்து இருக்கும் போது
நீங்கள் மனசாட்சியே இன்றி
உங்கள் இஷ்டத்துக்கு
அதை வெட்டி விடுவீர்களா?
இது தான் நியாயமா?

பேச வாய்ப்பிருந்தும்
மற்றவர் மனம் நோகக்கூடாது என்பதற்காக
தன் மனதிற்குள்ளே பேசிக் கொள்ளும்
அவள் ஓர் ஊமை உள்ளம்

ஊமை உள்ளம்

காட்டு மரமாய் வளர்கிறாள் அவள் கண்ட படிக்கு அதை வெட்டலாமா? கண் முன்னே நியாயம் புதைக்கப்படலாமா? இறை நியதிக்கு அமைய அவள் பிறந்து விட்டால். இரவும் பகலுமாய் மாறி மாறி சுழல்கிறது இளமைப்பருவம் அவளது.…

காட்டு மரமாய் வளர்கிறாள் அவள் கண்ட படிக்கு அதை வெட்டலாமா? கண் முன்னே நியாயம் புதைக்கப்படலாமா? இறை நியதிக்கு அமைய அவள் பிறந்து விட்டால். இரவும் பகலுமாய் மாறி மாறி சுழல்கிறது இளமைப்பருவம் அவளது.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *