ஜெயிக்கவழி

பார் போற்றும் பல அறிஞர்கள்
செல்லாத இடம்
பல்கலைக்கழகம் – அங்கு
செல்லாத உன்னாலும்
பாரினை மாற்றிட முடியும்
மறக்காதே!

பல்கலைக்கழகம் செல்வோரே
தன்னிலை மறக்காதே!
அங்கு சென்ற பலர்
தொழிலின்றி வாடுகின்றனர்
என்பதை மறக்காதே!

கற்றலின் இலக்கு
கல்லூரியில் இணைதல்
என நினைக்காதே!
கடவுளை புரிந்து
கடமையை செய்தல்
என்பதை மறக்காதே!

வாழ்கையில் ஜெயிக்க தேவை
பட்டமும் பதவியும் பணமும் அல்ல!
இறை அருளும் உன் முயற்சியும்
இருந்தால்
வாழ்வில் ஜெயிக்கலாம்
என்பதை மறக்காதே!

Ibnuasad

Leave a Reply

%d bloggers like this: