வாசிப்பை நேசிப்போம்.

  • 141

“வாசிப்பு ஒரு மனிதனைப் பூரணப்படுத்துகிறது.”

நிச்சயமாக ஒரு மனிதன் முழுமையடைய வாசிப்பு அவனுக்கு உதவுகிறது. வாசிப்பு எமது ஆன்மாவின் பசியைப் போக்குகிறது. அதனை வளப்படுத்துகிறது. ஆனால் நாம் எம் வெளித்தோற்றத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தையோ நேரத்தையோ ஆன்மாவுக்கு கொடுக்க மறந்து விடுகிறோம். உடல் மட்டும் அல்ல உள்ளமும் தூய்மைப்பெற வேண்டும்.

இன்று வாசிப்பும் நவீன மயமாகிவிட்டது. எல்லோர் கையிலும் கையடக்க தொலைபேசி (Smart phone) இருப்பதால் எந்தவொரு விடயத்தையும் அதனூடாகவே அறிந்து கொள்ள முற்படுகின்றனர். பத்திரிகைகள், புத்தகங்கள் வாசிப்பது அரிதாகவே காணப்படுகிறது.

ஆனால், கையடக்க தொலைப்பேசித் திரைகளை(Mobile Screen), விட பத்திரிகை மற்றும் புத்தகங்களின் பக்கங்கள் நாம் வாசிப்பவைகளை அதிகம் நினைவில் நிறுத்தக்கூடியது.

நல்ல வாசகன் வாசித்து முடிப்பதே இல்லை. ஏனெனில், வாசிப்பின் மூலம் அவன் தன்னை அறிகிறான். அது மட்டுமன்றி உலகையும் அறிந்து கொள்கின்றான். ஒரு நல்ல புத்தகம் உங்கள் வாழ்க்கையை மாற்றும், அதில் சந்தேகம் இல்லை. இன்று நாம் பல தினங்களைக் கொண்டாடுகிறோம்.

சுற்றாடல் தினம், நீர் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம் என ஏராளம். ஆனால், வாசிப்பை மாத்திரமே ஒரு மாதத்திற்கு வழங்கியிருக்கிறோம். ஒக்டோபர் மாதம் வாசிப்பு மாதமாக கொண்டாடப்படுகிறது. இதன் மூலம் நாம் வாசிப்பின் முக்கியத்தை அறிந்து கொள்ளலாம்.

சிறுவர்களிடையே வாசிப்பை ஊக்கப்படுத்த வேண்டும். அதன் பயன்களை சொல்லிக் கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு பக்கத்தையாவது வாசிக்க நேரம் ஒதுக்குங்கள். அது உங்களை அறியாமலே உங்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். ஒரு நல்ல வாசிப்பாளன் சிறந்த படைப்பாளன் ஆகிறான். வாசிப்பு அறிவை பெருக்குகிறது, அறியாமையை நீக்குகிறது. எந்தவொரு பாடத்தினதும் அடிப்படை வாசிப்பு. வாசிப்பின் ஊடாகவே நாம் அந்தப் பாடத்தை விளங்கிக் கொள்ள முடியும்.

உலகம் போற்றும் சாதனையாளர்கள் பலர் வாசிப்பு மீது நாட்டம் கொண்டவர்கள் என்பதோடு எழுத்தாளர்களும் கூட. அப்துல் கலாம், மகாத்மா காந்தி போன்ற இன்னும் பலரை சுட்டிக்காட்டலாம். இவர்களின் புத்தகங்களை வாசிப்பதன் மூலம் வெற்றிக்கான வழிகளை நாம் அறிந்து கொள்ளலாம். மற்றும், தோல்விகளை வெற்றிப் படிகளாக்கி எப்படி முயற்சிக்கலாம் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

கற்றவர்களும் கற்காதவர்களும் சமமாக முடியாது. நாம் எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் வாசிப்பு மீது ஆர்வம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

நீங்கள் யாருக்காவது எதையாவது பரிசளிக்க விரும்பினால் நல்லதொரு புத்தகத்தை பரிசளியுங்கள். இதன் மூலம் வாங்கியவரும் கொடுத்தவருக்கும் எப்போதும் பயன் பெற முடியும். வாசிப்பின் மூலம் நாம் பல விடயங்களை சிந்தித்து செயற்படுத்தலாம். எமது செயற்பாடுகள் தான் நாம் யார் என்பதை அடையாளப்படுத்தும்.

எனவேதான், வாசிப்பு மனிதனைப் பூரணப்பித்துகிறது எனக் கூறப்படுகிறது. ஆகவே, வாசிப்பை சுவாசிப்போம், வாசிப்பை நேசிப்போம்!

Rushdha Faris

“வாசிப்பு ஒரு மனிதனைப் பூரணப்படுத்துகிறது.” நிச்சயமாக ஒரு மனிதன் முழுமையடைய வாசிப்பு அவனுக்கு உதவுகிறது. வாசிப்பு எமது ஆன்மாவின் பசியைப் போக்குகிறது. அதனை வளப்படுத்துகிறது. ஆனால் நாம் எம் வெளித்தோற்றத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தையோ நேரத்தையோ…

“வாசிப்பு ஒரு மனிதனைப் பூரணப்படுத்துகிறது.” நிச்சயமாக ஒரு மனிதன் முழுமையடைய வாசிப்பு அவனுக்கு உதவுகிறது. வாசிப்பு எமது ஆன்மாவின் பசியைப் போக்குகிறது. அதனை வளப்படுத்துகிறது. ஆனால் நாம் எம் வெளித்தோற்றத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தையோ நேரத்தையோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *