கறுப்பு ஒக்டோபருக்கு 30 வருட நிறைவும், தொடரும் வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகளும்

  • 49

1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் சோக ஆற்றில் மூழ்கிய மாதமாகும். வடக்கு பெருநிலப்பரப்பில’ பல்லாண்டு காலம் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் தாய் மண்ணில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். குறிப்பிட்ட கால அவகாசத்துடன் சிறு தொகை பணம் 200 ரூபாயுடன் பாவித்த உடைகளுடன், வடக்கில் இருந்து வெளியேறுமாறு அறிவூறுத்தப்பட்டனர். படகு பயணம் நிச்சயமற்ற பலத்த கடல் காற்றும், விடாது பெய்த ஒக்டோபர் மழையும், வெளியேறாவிடின் உயிரை பறிக்கவிருந்த தூப்பாக்கி முனைக்கும் மத்தியில் தாயகத்திலிருந்து கண்ணீரும் கம்பலையூமாக நாட்டின் நாலா திசைக்கும் சிதறுண்டு வெளியேறினர்.

பலவந்த வெளியேற்றக்கு முன்

மேலும் 1981ம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின்படி 75 ஆயிரம் முஸ்லிம்கள் வடபுலத்தில் வசித்து வந்ததுடன் பாசிச பயங்காரவாதிகள் தோற்றம் தொட்டு பல சொல்லல்லா துன்பங்களுக்கும் இன்னல்களுக்கும் முகம்கொடுத்தனர் அவற்றில் நின்றும் தனவந்தவர்களிடம் கப்பம் கோரல் இளையவர்களினை கடத்துதல், இராணுவத்துடன் தொடர்புடையவாகள் என கடத்துதல், கால்நடைகளை அபகரித்தல், வியாபாரிகளின் நடவடிக்கைக்கு இடையீறு செய்தல், ஏக்கருக்கு ஒரு மூடையை பெறல், போராளிகளுக்கு உணவினை முஸ்லிம் வீடுகளில் இருந்து பெறல், கடையெறிப்பு, இளைஞர் குழுக்களை ஜிகாத் குழு என கைதுசெய்தல், காரணமின்றி பல நூறு பேரின் உயிரைப் பலியாக்கியமை, மாணவர்கள் இயக்கத்தில் இணைய வற்புறுத்தியமை என்பன இவற்றில் சிலவாகும்.

குறிப்பாக தொன்னூறுகளின் ஒக்டோபரில் தங்களது நாசகாரத்திட்டத்தனை தந்திரோபயகரமாக நகர்த்தும் பொருட்டு கிழக்கில் இருந்து படைகளினை குவித்தமை, நவீனரக ஆயூதங்களை பயன்படுத்தியமை, முஸ்லிம் இளையவர்களினை சித்திரவதை செய்தமை போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டனா்.

இயக்கத்தின் வளர்ச்சிக்காக அப்பாவி முஸ்லிம் தனவந்தர்களில் சோனகத் தெருவில் 22 பேரையூம், முசலியில் 25 பேரையூம், மன்னார் தீவினை சேர்ந்தவர்களையும் பல மாதங்களாக தடுத்துவைத்து சித்திரவதை செய்யப்பட்டு வங்கிக்கணக்குகள் பரிசோதிக்கப்பட்டு பணத்தினையும் அறவிட்டனர். பலர் இன்னல்கள் தாங்க முடியாமல் உயிரிழந்தனர். இவ்வாறு இயக்கத்திற்கு வளங்களை சேர்ப்பதன் பொருட்டும், தமீழக தாயகத்தினை அடையும் பொருட்டும் திட்டமிட்டு 85,000 முஸ்லிம்களையும் பலவந்தமாக இனச்சுத்திகரிப்புக்கு உட்படுத்தினர். அவர்களின் அசையும் அசையாத சொத்துக்களை சூறையாடியதுடன், நாட்டின் முக்கிய வளங்களையும் நாசப்படுத்தினர்.

பலவந்த வெளியேற்றம்.

தொடர் மனிதாபிமற்ற வக்கிர செயல்களாக இந்திய இராணுவத்தினர் கொலை, காத்தான்குடி பள்ளி 140 பேர் கொலை, 118 பேர் ஏறாவூர் கொலை செய்ததன் தொடர் வரிசையில் நீண்ட கால திட்டமிடலின் படி வடக்கு முஸ்லிம்களின் தாய்மண்ணிலிருந்த ஆணி வேருடன் தூக்கியெறிந்தனர் தனது திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பின் முதற்கட்டமாக 18ஆம் திகதி முஸ்லிம்கள் தொன்மையாக வசித்து வந்த ஜவாகச்சேரி என்ற சாவகச்சேரியிலிருந்து வந்ததாக ஒருவரிடம் ஆயுதம் உண்டு எனக் கூறி வெளியேற்றினர். 22ம் திகதி முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதியான மன்னார் தீவில் மேற்கொண்டனர். குறித்த செய்தியை ஏனையவர்களுக்கு பரவாமல் இருக்கச் செய்தததுடன் சீரற்ற போக்குவரத்து முறைமையை கொண்டும் தாராபுரம், எருக்கலம்பிட்டி, மன்னார் நகரம், உப்புக்குளம், புதுக்குடியிருப்பு, கரிசல், போசாலை என தீவகத்தில் முஸ்லிம்களின் விடுகளுக்குத் துப்பாக்கி முனைகாட்டி சொத்ததுக்களை சேகரித்ததுடன் நகை மற்றும் பணம் போன்றவற்றையும் பறித்தனர்.

மேலும் ஏவூகணையாய் பாய்ந்த வெளியேற்ற உத்தரவினால் அனைவரும் கதிகலங்கி நின்றதுடன், செய்வதறியாது தவிர்ந்து சுயநினைவற்று காணப்பட்டனர். ஒக்டோபர் மழையில் அங்கும் இங்கும் அல்லப்பட்டு கண்ணீர் மழையானது. வடக்கு முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் கணவன், மனைவி, கர்ப்பிணி, முதியோர் என்று பாராது யாரையும் யாரும் கவனிக்க முடியாது தவித்தனர். அவகாசமின்றி தன்னை மாத்திரம் காப்பாற்ற மாத்திரமான நிலையிலிருந்து அழுது பிராத்தித்து தாய் மண்ணிலிருந்து உயிரற்ற வெறும் சடமாய் விடைபெற்றனர். இது போன்ற ஒன்று யாருக்கும் ஏற்கட்டு விடக்கூடாது என்பதே அவர்கள் அனைவரதும் ஒரே பிராத்தணையாக இருந்தது.

இதே போன்றே ஒக்டோபர் 23ஆம் திகதி மாலை 5 மணியளவில் முசலி முஸ்லிம்களுக்கும் பாசிசப் புலிகளின் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. முசலியானது அதிக முஸ்லிம்களையும் பலசாலியான கிராமங்களை கொண்டிருந்தும் கூட கட்டளைக்கு மண்டிட்டு செய்வதறியாது தமக்கு தெரிந்த வழிகளினூடாக வெளியேறினர். முசலி கிழக்கு பெற்கோணி, அகத்திமுறிப்பு, வேப்பங்குளம் போன்ற கிராமத்தவர்கள் அடர்ந்த காட்டினூடாக அநுராதாபுர எல்லையையும் தெற்கு பகுதியினரான பாலைக்குழி, கரடிக்குழி, மரிச்சுக்கட்டி வில்பத்து வனாத்தரமூடாக புத்தளத்தினையும் சென்றடைந்தனர்.

ஏனையவர்கள் 23, 24, 25 திகதிகளில் சிலாவத்துறையிலிந்து கடல் வழியாக வேப்பங்குளம், பி.பி.பொற்கொணி, அகத்திமுறிப்பு, பண்டாரவெளி, கரடிக்குளி, கொண்டச்சி, சிலாபத்துறை, இலந்தைக்குளம், மணக்குளம், பூனச்சிக்குளம், பிச்சை வாணிப குளம், மேத்தன்வெளி, நான்காம் கட்டை, முசலி, தம்பட்ட முசலிகட்டு, சிறுக்குளம் போன்ற கிராமத்தவர்கள் பாதுகாப்பற்ற படகில் சுயநினைவற்றவர்களாக தாயகத்திலிருந்து புத்தளத்தினைச் சென்றடைந்தனர். மேலும் மாந்தை மற்றும் நானாட்டன் பிரதேச முஸ்லிம்களுக்கு “சொத்துக்களை தமிழ் சகோதரர்களிடம் ஒப்படைக்க கூடாது” என்ற உத்தரவுடன் விடத்தல் தீவூ, பெரிய மடு, விளாங்குளம், மினுக்கன் கட்டைக்காடு, அடம்பன், ஆண்டாங்குளம், வட்டக்கண்டல், நெடுவரம்பு, பள்ளிவாசல்பிட்டி, வெளாங்குளம், இலந்தைமேட்டை, ரசூல் புதுவெளி, பூவரசங்குளம், நானாட்டன், முருங்கன், அளவக்கை ஆகியோர் பண்டிவிருச்சான் மடு ஊடாக வெளியேற்றப்பட்டதுடன், ஒக்டோபர் கனத்த மழையில் மடு கோவில் தங்கியிருந்து வெளியேறியதுடன், குறிப்பிட்ட அனுமதிக்கப்பட்ட பாதை வழியே வெளியேற்றப்பட்டு இனச்சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் நெச்சிக்குள முஸ்லிம்கள் முசலி முஸ்லிம்களுடன் கடல் வழியாக வெளியேறினார்கள்.

அடுத்து வடக்கில் எல்லா வகையிலும் மென்மையுடன் விளங்கிய யாழ்ப்பாண முஸ்லிம்களின் வெளியேற்றமானது மிகத் துன்பகரமானது. ஏனெனின் ஏனையவர்களை விட மிகக் குறுகிய காலக்கோடுடன் (இரண்டு மணித்தியாலங்கள்) நீண்ட பயணத்திற்கு மத்தியிலும் பலவந்த வெளியேற்றத்திற்குப்பட்டனர். இப்படியான ஒரு சம்பவத்தினை அவர்கள் நினைத்துப்பார்க்கவில்லை. காலை எட்டு மணியளவில் 1000 பேரளவில் ஆயுதம் தாங்கியவர்களாக சோனகர் தெருவை சுற்றிவளைத்தனர். வீட்லிருந்து ஒருவர் என அழைக்கப்பட்டு உஸ்மானிய்யா கல்லூரிக்குறிய ஜின்னா மைதானத்தில் வைத்து பாசிசக்காரர்கள் “வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்களுக்குரியது” எனவே தமிழ் மண்ணை விட்டு புறப்படுமாறு கட்டளை பிறப்பித்தததுடன், மட்டுமன்றி வெளியேறாவிட்டால் அநியாயமாக சுட்டுக்கொள்ளப்படுவீர்கள் என வானத்தினை நோக்கிச் சுட்டனர்.

மேலும் வீடு வீடாக சென்று நகை, பணம் என்பவற்றினை பறிமுறுதல் செய்தனர். இனச்சுத்திகரிப்பின் போது அனைவரையும் மனோகா திரையரங்கில் அடைத்து பரிசோதனை செய்தததுடன், கையிலும் காதிலும் அணிந்திருந்த ஆணிகலங்களை இழுத்தெடுதத்தனர் இதனால் பலரும் காயமுற்றதுடன் உண்பதற்கான அடையை பறித்தும், சுடுதண்ணி போத்தல் இருந்தவற்றினையும் ஆபகரணத்தினையும் கூட விட்டுவைக்கவில்லை. “பெற்ற பொருட்கள் திரும்பித்தருவதாக ஒப்பந்தத்துடன் தமிழ் சகோதரர்களுக்கு கொடுக்க கூடாது” என்ற நிபந்தனையுடன பெருந்தொகையான பணத்தினை பறிமுதல் செய்ததுடன் விலங்குளை போல் வாகனங்களில் அடைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர். இதன் போது ஒருவர் மீது இன்னொருவர் கையும் காலையும் மிதித்து அழுகையும் விட்டனர். பயணத்தின் இடைநடுவிலும் கூட வெடிகுண்டு தூகள்கள் பலரின் உயிரினை இறையாக்கியது. இது போலவே கிளிநொச்சி, முல்லைத்தீவூ முஸ்லிம்களையூம் வெளியேற்றினர்.

முல்லைத்தீவின் தண்ணீருற்று, ஹிஜ்ராபுரம், நீராவிப்பிட்டி அனைவரும் குர்ஆன் மத்ரஸாவில் ஒன்று கூட்டப்பட்டதுடன், இராணுவத்திற்கு தகவல் கொடுப்பவர்கள் என்ற அபாண்டத்தினை முன்வைத்து வெளியறுமாறு உத்திரவிடப்பட்டதுடன் நொச்சிமோட்டை என்ற இடத்துக்கு பலவந்தமாக கொண்டு விட்டனர். மேலும் கிளிநொச்சி முஸ்லிம்கள் கடல்வழி (கல்பிட்டி) தரைவழி (மாங்குளம்) மூலம் வெளியேறினர்.

பாசிசப் புலிகளின் இனச்சுத்திகரிப்பினால் வேரெந்த வரிகளால் வர்ணிக்க முடியாது. காலக்கோடுடன் கடுமையான நிபந்தனைகளுடன் அடையாளப்படுத்தப்பட்ட பாதையினூடாக பல சோதனை சாவடிகளை கடந்தே சொந்த மண்ணிலிருந்து விடைபெற்றனர் பயண வழிகளின் போது சிறுவர்கள், முதியோ்கள், இளையவர்கள் என அனைவரும் கால்நடையாக உணர்விழந்து இரவு பகலாக நடத்ததுடன் நடக்க முடியாதாவர்கள் காவுகட்டி கொண்டு செல்லப்பட்டனர்.

வாகனங்களில் மந்தைகள் போல் அடைக்கப்பட்டும் கர்ப்பிணிகள் இடைநடுவிலே குழந்தைகளைப் பிரசவித்ததுடன், குழந்தைகளும் மரணமாயினர். பலர் வரும் வழியில் குண்டுத்தாக்குதலுக்கும் இறையானதுடன் அதே இடத்தில் அடக்கப்பட்டனர். மேலும் தோற்று நோய்கள் பரவியதுடன் (வவூனியா) பாதுகாப்பற்ற படகு பயணத்தால் பல ஆயிரம் பேர்கள் வயிற்றோட்டம், வாந்திபேதி போன்ற நோய்களிளாலும் பீடிக்கப்பட்டனர். மேலும் செல்லும் வழியில் உணவு குடிநீரின்றி தவிர்த்ததுடன் காட்டுப்பாதையில் தங்க தரிப்பிடமின்றி தவிர்த்தனர்.

நவம்பர இரண்டாம் திகதி முஸ்லிம்களற்ற பூமியாக வடக்கு காட்சியளித்ததுடன், பாசிசக்காரர்களின் ஈன இரக்கமற்ற இச்செயலால் வெளியில் அகதியெனும் பெயருடன் நாட்டின் நாலா திசைக்கும் சிதறவிட்டு வாழ வேண்டியாயிற்று.

அகதி வாழ்க்கைச் சவால்கள்

பலவந்த வெளியேற்றம் என்பது ஒரு தற்காலியமானது. மீண்டும் தாயகம் திரும்பலாம் என்ற எதிர்பார்ப்புடன் வெளியேறினர். ஆனால் அனைத்தும் தவிடுபெடியானது. தற்காலிகமான அகதிமுகாம்களில் கூடாரங்களில் நிரந்தரமாக தங்க வேண்டியேற்பட்டது. இடப்பெயர்வின் காரணமாக பலநூறு பேர் காணமால் ஆக்கப்பட்டும் பலர் கொலை செய்யப்பட்டதுடன், பல நூறு ஆயிரம் கோடி பெறுமதியான சொத்துக்களும் வயல்களும் காணிகள் தென்னங்கன்றுகள் பல ஆயிரம் இழக்கப்பட்டன. 300க்கு மேற்பட்ட (54 பாடசாலை 136 பள்ளிவாசல்கள் 114 மத்ரஸாக்கள்) பொது நிலையங்கள் 22 ஆயிரம் வீடுகள் 2400 வியாபார நிலையங்களும் சேதமாக்கப்பட்டன.

தாயக மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டு அனைத்தினையும் இழந்தவர்களாக சோகத்துடன் கண்ணீர் நிரம்பிய விழிகளுடன் புத்தளம், கொழும்பு, அநுராதபுரம், குருநாகல் மாவட்டங்களின் வெவ்வேறு பகுதிகளை சென்றடைந்தனர். அங்குள்ளவர்கள் அன்பாக உபசரித்ததுடன், தற்காலிக வதிவதிடங்களையும் உண்ண உணவும் பருகவும் செய்து அரவணைத்தனர்.

குறிப்பாக புத்தளத்திலிருந்து கல்பிட்டி வீதியும் மன்னார் வீதியும் கொழும்பு வீதியின் சிலாபம் வரையான பாதையின் இரு மருங்கும் அகதி முகாம்களாக நிறைந்தன. கல்பிட்டி நகரம், கண்டக்குளி, குறிஞ்சிபிட்டி, ஆணைவாசல், புதுக்குடியிருப்பு, தலைவிலு, முசல்பிட்டி, கண்டல்குடா, தைக்கா பள்ளி, தாருஸ்ஸலாம், வில்வா முகாம், ஆலங்குடா (ஏ, பீ, எருக்கலம்பிட்டி, முல்லைத்தீவூ), பூலாச்சேனை, கொய்யவாவாடி, சஞ்சியாவத்தை, கரைத்தீவூ, அறபாநகர், அல்அறபாநகர், தில்லையடி, கரம்பை, விருதோடை, மதவாக்குளம், மதுரங்குளி, கடையாமேட்டை, புளிச்சாக்குளம் என்பன இவற்றில் சிலவாகும்.

அகதி முகாம்கள் வெள்ளத்தில் முழ்குபவையாகவூம் தாழ் நிலங்களிலும நிலக்கீழ் உப்பாகவும் பொதுக்கிணறு, பொது மலசலகூடம் காணப்பட்டதுடன், தொடர் வதிவிடங்கள் என்பதால் சில இடங்களில் தீப்பற்றி எறிந்துமுள்ளது. மேலும் சுகாதார நிலைமையானது மிக மோசமாக காணப்பட்டது. குழந்தை, கர்ப்பிணிகள், முதியவர்கள் ஆகியவற்றவர்களுக்கு போசாக்கற்ற உணவு தொற்று நோய்களின் பரவுகை (வாந்திபேதி, மலேரியா, தோல் நோய்கள், பிலக்சிமா), பொதுமல கூட பாவனை, ஒரு தலை வைத்தியசாலையும் 2 மருந்தகமும் (மாம்புரி, தலவில) காணப்பட்டதுடன், ஒரு மகப்பேறு மற்றும் சிறுவர் வைத்தியரும் காணப்பட்டதுடன் ஒரு கட்டிலில் இரண்டு கர்ப்பிணிகளுக்காவும் ஒதுக்கப்பட்டிருந்தது. ஓலைக் குடிசைகளையும் வெறும் மண் தரையினையும் கொண்ட அந்த அகதி முகாமில் காலையில் எழுகின்றபோது , காலைக் கடன்களை முடிப்பதற்காக மிக நீண்ட நேரம் ஆண்களும் பெண்களும் நீண்ட வரிசையில் காத்து நிற்க வேண்டி இருந்தது.

அகதிகளாக்கப்பட்ட பின்னர் உள, சமூக, பொருளாதார ரீதியில் பாரிய சவால்கள் ஏற்பட்டது. சுயமரியாதை, கௌரவம், தாழ்வு மனப்பான்மை, இரண்டாம் பிரஜையாக கருதப்பட்டமை, அகதியென முத்திரை குத்தப்படல், பூர்வீக கலாச்சார சீர் குழைவு, சொந்த உறவுகளின் பிரிவு உண்பதும் குடிப்பதுடன் மட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை சக்கரம், பூர்வீக காலச்சாரச் சம்பிரதாயங்களின் இழப்பு, பொருளாதார இழப்பு, அதிக விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டி ஏற்பட்டமை, குறைந்த விலையில் கொள்வனவும் நோய்களுக்கு உள்ளானமை (பீட்டுட்), போதைப்பொருள் பாவனை போன்றன சிலவாகும். மேலும் பொருளாதார ரீதியில் வேலையின்மை, ஊழியத்துக்கு வேலைக்கு செல்ல நிரப்பந்திக்கப்பட்டமை, உள்ளூர் மக்களுடன் போட்டியிட வேண்டியமை, எவ்வித மூலதனமீன்மை, வாழ்வாதாரத்துக்கான உதவித்திட்டங்களின்மை, நிரந்த வேலையின்மை போன்ற மேலும் பல சவால்களையூம் எதிர் கொண்டனர்.

மீள்குடியேற்றமும் , சவால்களும்

உருண்டோடிய இரு தசாப்த அடி வாழ்க்கையின் இடையே 2002 ஆம் ஆண்டு இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தத்தின் பலத்த எதிர்பார்ப்புடன் தாயகத்தை நோக்கி மீண்டனர். திட்டமிடப்படாத மீள்குடியேற்றம் எவ்வித வசதியின்மை மட்டுமன்றி இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது முஸ்லிம்களுடன் தொடர்புடைய விடயங்களையே போதியளவு கவனத்தில் கொள்ளப்படாமை பாரிய ஏமாற்றம் அளித்ததது.

இலங்கையின் போர் வரலாறானது நான்கு தசாப்தங்களுக்கு மேற்பட்ட ஒன்றாக உள்ளதுடன், இறுதிப் போரில் ஒரு இலட்சம் உயிர்களை பலியாக்கப்பட்டதுடன், பல லட்சம் பேரினை இடப்பெயர்வுக்குள்ளாக்கியது. போர் ஓய்ந்ததன் பிற்பாடு இறுதி மூச்சை அவரது சொந்த மண்ணில் சுவாசிக்க வேண்டும் என மீளத் திரும்பினர்.

இருந்தபோதிலும் கூட ஆரம்ப காலங்களில் பழைய அகதிகள் புறக்கணிக்கப்பட்டதுன், நிர்வாக ரீதியாகச் சவால்களை எதிர்கொண்டனர் இன்று வடக்கில் மீள்குடியேறுகின்ற முஸ்லிம்கள் சமூக, பொருளாதார, கலாச்சார, கல்வி, சுகாதார, நிர்வாக, சமய ரீதியாக சவால்களை எதிர் கொள்ளுகின்றார்கள். பொருளாதார ரீதியில் மீள்குடியேற்றியவர்களில் அநேகமானவர்கள் மீள்குடியேறி 10 வருடங்களிளை கடந்த போதிலும் கூட இன்று வரைக்கும் குறைந்த வருமானம், தொழில் இன்மை, வாழ்வாதார பிரச்சினை, குறைந்த வாழ்க்கை தரம், உற்பத்தி ஒழுங்கு இன்மை, தொழில் ஒன்றினை மேற்கொள்வதற்கான போதிய வசதி இன்மை, வாழ்வாதாரத் திட்டங்களை மேற்கொள்ளப்படாமை, போசாக்கின்மை நிலை, விவசாயத்தினை மேற்கொள்ள நீர்ப்பாசன வசதிகளுக்கான இன்மை (அநேகமான பகுதிகளில்), நிர்வாக ரீதியில் இரண்டாம் தர பிரஜையாகப் பார்க்கப்படல், அதிகரித்த சனத்தொகை குறைந்த வள ஒதுக்கீடு, பாகுபாடு, பழைய அகதி என்ற அடிப்படையில் புறக்கணிப்பு வீட்டுத்திட்ட ஒதுக்கீடு, அரச சார்பற்ற நிறுவனங்களின் குறைந்தபட்ச உதவி, அரச உயர் அதிகாரிகள் அக்கறையின்மை மற்றும் பழை அகதி புதிய அகதி என்ற நிரலில் முஸ்லிம்கள் பழைய அகதியென ஒரம் கட்டுதல் என்பன மேலும் பல சவால்களை எதிர் கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் போர் ஓய்ந்து ஒரு தசாப்தமாகியுள்ள போதிலும் கூட வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகள் பிரச்சினைகள் முழுமையாகத் தீர்ந்தபாடில்லை.

1990ஆம் ஆண்டு 15, 000 குடும்பங்களைச் சேர்ந்த 5மாவட்டங்களுக்குரிய முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். இன்று 30 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும்இ பல அரசாங்கள் மாறி மாறி ஆட்சிக்கு வந்த போதிலும் இவர்களின் பிரச்சினைகளினைத் தீர்க்கும் பொருட்டு தனியான ஆணைக்குழு நியமிக்கப்படவில்லை. நாட்டின் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதும் வடக்கு முஸ்லிம்கள் தொடர்பாக கரிசணை செலுத்த அன்றைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தவறிழைத்ததுடன், இன்று வரைக்கும் புனரமைத்து தருவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட அகதிமுகாமையும்-தாயகத்தினையும் இணைக்கும் மன்னார்-மறிச்சுக்கட்டி புத்தளம் பாதை கூட போக்குவரத்திற்காக செய்துகொடுக்கப்படவில்லை.

யாழ்ப்பாணம், முசலி, முல்லைத்தீவு என எல்லா இடங்களிலும் காணிப்பிரச்சினை மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. காணி போதுமானதாக இன்மை காணியை அடையாளம் காண்பதில் சிக்கல், சொந்த காணியில் சட்டவிரோதமான குடியிருப்பு, காலக்கோடுடன் வெளியேற்றப்பட்டதால் உறுதிப்பத்திரங்கள் இன்மை, குறைந்த விலைக்கு விற்க நேரிட்டமை, பொலிஸ் மற்றும் இராணுவ கையாளுகைக்கு உட்பட்டமை, காணிப்பகிர்வில் பாகுபாடு, காணி அனுமதி பெறுவதில் முஸ்லிம்களுக்கு சிக்கல், காடு அழிப்பு என்ற குற்றச்சாட்டு, பூர்வீக காணிகள் வனாந்தமாக வர்த்தமானி பிரகடனப்படுத்தியமை போன்ற பல சவால்களை குறிப்பிட முடியும்.

சமூக கட்டமைப்பு சார்ந்த பிரச்சினைகளாக சமூக சமத்துவமின்மை, குடும்ப பிரச்சினை, பாடசாலை இடைவிலகல், சீதனம் கோரல், சிறுவர் சார்ந்த பிரச்சினை, சமூக தொடர்புகளின் பற்றாக்குறை, சமூக புறமொதுக்கள் பௌதீக மூலதனப் பிரச்சினைகளில் முக்கியமாக காணி இன்மை, வெள்ளப் பெருக்கு, வரட்சி போக்குவரத்து கட்டமைப்பு வசதி குறைவு, கிணறு வசதியின்மை, தூய குடிநீர் இன்மைை, நிரந்தர தொழில், வேலையீன்மை என்பன பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றார்கள்.

இயற்கை மூலதனப் பிரச்சினைகளாக வாழ்க்கை தரத்தை முன்னேற்றக் கூடிய வகையில் இயற்கை வளங்கள் விவசாய நிலங்கள் இன்மை, கடல் வள பயன்பட்டில் இராணுவத்தின் கட்டுப்பாடு, விவசாயக் காணிகள் இராணுவத்தின் பிடியில் உள்ளமை என்பன பல இன்று வடக்கு முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பல்வேறுபட்ட சவால்களாக உள்ளன.

வடக்கு முஸ்லிம்கள் குறிப்பாக முஸ்லிம்களை 84% வீதமாக கொண்ட முசலி பிரதேசம் உட்பட ஏனைய பகுதிகளில் ஒழுங்கான திட்ட வரைபு இன்மை, சமூக பொருளாதார நலன்புரி சேவைகள் கிடைக்கப் பெறாமை, பெண் தலைமைக் குடும்பங்களுக்கான வீடு மற்றும் வாழ்வாதர இன்மை, மீனவர் மானியத் திட்டமின்மை, நீர்ப்பாசன வசதி இன்மை, கல்வி ஒழுங்கின்மை, சுகாதார வசதியின்மை மூலதனமின்மை, கடனை திருப்பி செலுத்த முடியாமை, குறைந்த வருமானம், தொழிலை மேற்கொள்ள போதிய காணி இன்மை, தூய குடிநீர் இன்மை, கடல் வள பயன்பாட்டில் இராணுவத்தின் கட்டுப்பாடு, இராணுவம் மக்களின் வாழ்வாதாரத்திற்குறிய காணிகளில் நிலை கொண்டுள்ளமை, நிரந்தர தொழில் மற்றும் வேலையின்மை, வீட்டுத்திட்டம் கிடைக்காமை (விசேடமாக முதியவர்கள்) பாடசாலை இடைவிலகல் (வறுமையால்), சேமிப்பு பழக்கமின்மை,  கடன்வசதிகள் குறைவு, போதியதொழில் பற்றிய அறின்மை, தொழிநுட்ப பயன்பாடின்மை, சந்தைப்படுத்தல் வசதி குறைவு, தொழிலின் போதான நட்டத்தினை தாங்கிக் கொள்ள முடியாமை, உட்கட்டமைப்பு வசதியின்மை, உதவித்திட்ட பாகுபாடு, குளங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி செய்யப்படாமை மற்றும் புனர்நிர்மாணிக்கப்படாமை போன்ற பிரச்சினைகள் தொடர்ந்தவண்ணமே உள்ளது.

இன்று வடக்கு மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு முப்பது வருடங்கள் கடந்துள்ள போதிலும் கூட இன்றும் தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் இதனால் அவர்களது அரசியல் பங்கேற்பு, வாக்களிப்பு உட்பட பல்வேறுபட்ட உரிமைகளை பெற்றுக் கொள்வதிலேயே சவால்களை எதிர்கொள்கின்றனர்.

மேலும் இலங்கையில் போர் வந்ததன் பிற்பாடு 10 ஆண்டுகள் கடந்த போதிலும் கூட வடக்கு முஸ்லிம்கள் தொடர்பான பிரச்சினைகளை தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு அதனை சர்வதேச ரீதியாக கொண்டு செல்லும் பொருட்டான நிறுவன மயப்படுத்தப்பட்ட எந்தவித முயற்சியையும் இதுவரைக்கும் மேற்கொள்ளப்படாமைக் கவலைக்குரியது. வெளியேற்றத்தின் போது 75, 000 பேரினைச் சனத்தொகையாகக் கொண்டிருந்தவர்கள் அந்த சமூகம் இன்று அதன் மூன்று மடங்கு சனத்தொகையாக மாறியுள்ளது. தமிழ் சகோதரர்கள் சார்ந்து வெவ்வேறுபட்ட தரப்பினாலும், குழுக்களினாலும் அம்மக்களது பிரச்சினைகள் சர்வதேச நிறுவனங்களுக்கும், நாடுகளுக்கும் கொண்டு செல்லப்பட்டதுடன் அம்முயற்சிகள் இலங்கை அரசாங்களின் மீது அழுத்தங்களையும் பிரயோகித்தமை குறிப்பித்தக்கது. இது தொடர்பில் முஸ்லிம்கள் தவறிழைத்துவிட்டனர்.

இலங்கையானது நிலைமாறுகால நீதிக்குப்பட்ட பொறுப்பு கூறலுக்குறிய நாடாக இருந்தது. ஆனாலும்கூட முஸ்லிம்களது வெளியேற்றத்தின் போதான பிரச்சினைகள் அதற்கான தீர்வுப் பொறிமுறைத் தொடர்பில் கவனத்தில் கொள்ளப்படவில்லை. குறிப்பாக 1990 ஆண்டு வந்த வெளியேற்றத்தின் போது செயல்பாடுகள் அதற்கான பொறுப்புக்கள் மற்றும் தண்டனைகள் தொடர்பாக முஸ்லிம்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள்.

அநியாயமாக சுட்டுக் கொள்ளப்பட்டவர்கள் தொடர்பில் எந்த உண்மைத்தன்மையும் வெளிக்கொணரப்படவில்லை. மேலும் வடக்கு முஸ்லிம்கள் தொடர்பாக நிலைமாறுகால நீதிப்பொறிமுறையின் கீழ் பலவந்த வெளியேற்றம், சொத்தழிவு அதற்கான இழப்பீடு, குற்றம் புரிந்தவர்களுக்கான தண்டனை தொடர்பாக எந்தவித விடயங்களும் இதுவரை வெளிக்கொணரப்படவில்லை.

இன்று வடக்கு முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள மிக முக்கியமான சவாலாக இடப்பெயர்வுக்கு முன்னரான காலப்பகுதியில் பிட்டும் தேங்காய் பூவூமாய் இருந்த தமிழ் சகோதர்களுடனான சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் ஏனைய உறவுகள் இன்று மலைக்கும் மடுக்குமான ஏற்ற இரக்கமாக மாறியுள்ளது. முஸ்லிம்களை இரண்டாம் தர பிரஜையாகப் பார்த்தல், புத்தளத்தினைச் சேர்ந்தவர்களாகப் பார்ப்பது, நிர்வாக தேவையின் பொருட்டு நாடுகின்றபோது வேண்டுமென்று மன்னாரிலா இருக்கின்றீர்கள் என வினவுவது எனப் நிர்வாக ரீதியாக உறவின் விரிசல் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

இன்னொரு பக்கம் மீள் குடியேற்றத்திற்கான அடிப்படை வசதிகள் இன்னும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத நிலையில் நிலையான வாழ்வாதாரத்தைப் முன்னெடுப்பதற்கான எந்தவிதமான இயற்கை, சமூக, மானுட, நிதி மூலதனங்கள் சார்ந்த வசதிகள் பூர்த்தி செய்யப்படாத நிலையிலேயே தொடர்ச்சியாக அகதி முகாம்களிலேயே வசித்து வருகின்றனர்.

இன்று எதிர்கொண்டுள்ள முக்கிய மற்றொரு சவாலாக அதிகமானவர்கள் தானும், தங்களுடைய குடும்பத்தவர்களும் அகதி முகாம்களில் வசித்து வருவதுடன், அவர்களது வாழ்வாதாரச் சொத்துக்கள், வாக்குரிமை, நிர்வாக செயற்பாடுகளின் காரணமாக தாயகத்துக்கு மீள வேண்டி உள்ளது.

ஜனநாயக அடிப்படையிலேயே மிக முக்கியமான உரிமையான வாக்குரிமை உள்ளதுடன் இன்று வடக்கு முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பாரிய சவாலாக வாக்களித்தல் சார்ந்த விடையம் உள்ளது 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது பலத்த சவால்களை வாக்களிப்பதில் எதிர்கொண்டார்கள். அவர்களது வாக்குரிமையை பயன்படுத்துவதற்காக வேண்டி போக்குவரத்து ஏற்பாடு செய்த முன்னாள் நீண்டகால உள்நாட்டில் இடம்பெயர்ந்த அமைச்சர் பொது சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தினார் என கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

வாக்குரிமையை பயன்படுத்துவதற்காக தாயகம் நோக்கி வருகின்ற போது கல்வீச்சு, பாதையில் மரங்களை கொண்டு தடை, சிங்கள காடையர்களால் தாக்குதலினை எதிர் கொண்டமை பஸ் சேதப்படுத்தப்பட்டமை உட்பட பல்வேறுபட்ட சவால்களை எதிர் கொண்டனர். மறுபுறம் தங்களது வாக்குரிமையை சார்ந்து வாக்குகளைப் பதிவு செய்வதற்காக வேண்டி தாயகம் திரும்புகின்ற போது குறிப்பிட்ட வாக்காளர் புத்தளத்துக்குத் திருப்பி வாக்குகளைப் பதியுமாறு அனுப்பப்படுகிறார்கள் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் மாவட்டத்தில் உள்ள நிர்வாக அதிகாரிகள், கிராம சேவகர்கள் ஆகியோர்கள் இம் மக்களது வாக்குப் பதிவை மேற்கொள்ளும் அசௌகியங்களையும், இடர்பாடுகளை மக்களுக்கு ஏற்படுத்துகின்றனர். இது வடக்கு முஸ்லிம்கள் மீது அழுத்தங்கள் உள ரீதியான துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர். புத்தளத்திலே வாக்குகளைப் பதியுமாறு அவர்கள் வேண்டப்படுகின்றனர். இதனால் அதிகமானவர்கள் தங்களது வாக்குகளைப் புத்தளத்திலேயே பதித்துள்ளனர். இன்னொரு பக்கம் புத்தளத்தில் இடம்பெயர்ந்த வடக்கு முஸ்லிம்களின் வாக்கினை பதிவு செய்ய அனுமதியோம் என்று சிங்கள அரசியல்வாதிகளின் செயற்பாடுகளுள்ளது. ஆகவே வடக்கு முஸ்லிம்கள் இரண்டுமற்ற திரிசங்கு நிலைக்குள்ளாகின்றனர்.

இன்று வரைக்கும் வடக்கு முஸ்லிம்கள் புத்தளத்தில் சேர்ந்தவர்கள் என மாவட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது வாக்குவங்கிக்காக அவ்வப்போது அடிக்கடி கூறி வருவது இங்கு நோக்கத்தக்கது. போர் ஓய்ந்ததன் பின்னரான சூழலில் கூட வடக்கில் தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே இதுவரைக்கும் ஒரு சுமூகமான நிலை பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்ததில்லை. மக்களுடன் தொடர்புடைய விவாதங்களின் போது மாறி மாறி கீரியும் பூனையூமாக விவாதங்களிலேயே ஈடுபட்ட வண்ணமே உள்ளனர். மக்களின் சகவாழ்வு , இன நல்லிணக்கத்தின் முகவர்களாக இருக்கவேண்டிய இவர்கள் ஒரு தசாப்தம் கடந்த நிலையிலும் கூட இவர்கள் ஒருமித்து கருத்துக்கு வந்தது இல்லை. இவர்கள் மூலமாக் தமிழ், முஸ்லிம் இன நல்லுறவு பாதிப்புகளை தொடர்கின்றது. ஆகவே வடக்கில் நிலையான சமாதானம் அபிவிருத்தி இவர்கள் இடையே புரிந்துணர்வு என்று சாத்தியமில்லை எனலாம். மேலும் அரசு அதிகாரிகள், உயர் மட்ட பிரதான பொறுப்புதாரிகளின் மிகக் குறுகிய மனப்பாங்கு, இனவாத நோக்குநிலை, தூரநோக்கு கழையப்பட்டு ஒரு கண் கொண்டு நோக்கும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

மறுபக்கம் வடக்கில் முஸ்லிம்கள் அதிகமாக உள்ள முசலி பிரதேச செயலகம் சார்ந்து மீள்குடியேறி பத்து வருடங்கள் கடந்துள்ள போதிலும் கூட அவர்களது அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படவில்லை. மேலும் வடக்கின் ஏனைய பிரதேச செயலகங்களுக்கு ஒதுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்ட செயல்பாடுகளை போன்று இங்கு ஒதுக்கப்படுவது குறைவு. முசலி பிரதேச செயலகம் சார்ந்த அபிவிருத்தித் திட்ட செயற்பாடுகளின் போது கூட அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் பொறுப்பற்ற தன்மை காணப்படுகின்றது. மிக முக்கியமான உதாரணமாக கடந்த மாகாண சபையின் கீழ் அதிகாரத்தின் போது வடக்கு மாகாண சபையின் ஊடாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சானது முசலி பிரதேசத்திலேயே ஒரு ஆடை தொழிற்சாலை அமைக்க அனுமதி கோரி இருந்த நிலையிலேயே அந்த அனுமதி சூழலினைக் காரணம் காட்டி மறுக்கப்பட்டது. இது அங்குள்ள தமிழ், முஸ்லிம் மக்களிடையே தொழில் வாய்ப்பினை இல்லாமல் செய்தததுடன் இற்றை வரைக்கும் வாழ்வாதாரம் சார்ந்த பல்வேறு பட்ட சவால்களை அவர்கள் எதிர்கொள்கின்றதற்கான காரணமாகும் என்பது நோக்கத்தக்கது. குறிப்பாக இன்று வாழ்வாதாரப் பிரச்சினை காரணமாக அவர்களது அகதிமுகாமை நோக்கி மீள்திரும்புகின்றனர்.

வடக்கு முஸ்லிம்கள் மீள் குடியேற்றப்பட்ட அதன் பின்னரான சூழலிலேயே அவர்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான மற்றுமொரு சவாலாக அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவித் திட்டங்களின் போதான பாகுபாடு பாரபட்சம் மற்றும் உதவிகள் கிடைக்கப் பெறாமையாகும். குறிப்பாக வடக்கில் போரின் பின்னரான சூழலில் ஒரு வேறுபட்ட உள்நாட்டு அரச சார் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் மூலம் வாழ்வாதாரம் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுக்கான உதவித்திட்டங்கள் வழங்கப்படுகின்றதோடு, அந்த திட்டங்களின் போது வடக்கு முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகள் பாரிய மன அழுத்தத்துக்கும், உளரீதியான பாதிப்புகளுக்கும் உள்ளாகின்றனர். வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றப்பட்ட பின்னரான சூழலில் வீட்டுத்திட்ட உதவி மாத்திரமே ஒரளவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளது. வீடுகள் மாத்திரம் நிலையான மீள்குடியேற்றத்துக்கு போதுமானதன்று. மீள்குடியேற்றத்தின் பின்னரான சூழலில் உட்கட்டமைப்பு, போக்குவரத்து, தொழில் இன்மை, பருவகால தொழிலாக உள்ளமை, பொருளாதார கஷ்ட நிலைகளில் காரணமாக அதிகமான மீள் குடியேறியவர்கள் அவர்களது சொந்த பூமியில் இருந்து மீளவும் அகதி முகாம்களை நோக்கி இடம்பெயர வேண்டிய நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

முடிவாக பல நூற்றாண்டு காலமாக வடக்கு பெருநிலப்பரப்பில் பல்வேறு மாவட்டங்களிலும் தமிழ் சகோதரர்களுடன் ஒன்றாக கலந்து சமூக, கலாச்சார, பொருளாதார மற்றும் வாழ்வாதார செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த வடக்கு முஸ்லிம் சமூகமானது மீண்டும் அதே நிலையை அடையும் பொருட்டான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதுடன், அவர்களது நிலையான மீள் குடியேற்றத்திற்கான வாழ்வாதார செயற்பாடுகள், செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதன் மூலமாக அவர்களது பிரச்சினைகளை ஓரளவுக்கேனும் தீர்க்க முடியும். அத்துடன் தமிழ் முஸ்லிம் சமூகளுக்கிடையிலான சகவாழ்வு, நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் பொருட்டான வெவ்வேறு வகையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பதன் மூலமாக ஒரு சிறந்த வடக்கு சமூகத்தை கட்டியொழுப்புதல் காலத்தின் தேவையாகும்.

பௌஸ்தீன் பமீஸ்
யாழ்பாண பல்கலைக்கழகம்
(சமூகவியல் துறை)

1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் சோக ஆற்றில் மூழ்கிய மாதமாகும். வடக்கு பெருநிலப்பரப்பில’ பல்லாண்டு காலம் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் தாய் மண்ணில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். குறிப்பிட்ட கால…

1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் சோக ஆற்றில் மூழ்கிய மாதமாகும். வடக்கு பெருநிலப்பரப்பில’ பல்லாண்டு காலம் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் தாய் மண்ணில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். குறிப்பிட்ட கால…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *