அபியும் நானும்.

  • 217

பிரகாஷ் ராஜ் மற்றும் நடிகை த்ரிஷா நடிப்பில் 2008 இல் வெளிவந்த திரைப்படம் தான் இது. இப்படத்தில் புதுமையாகக் குறிப்பிட்டுக் கூறும் படி எதுவும் இல்லை.

நாம் நாளாந்தம் காணும் அப்பாக்களின் ஏக்கம், பிள்ளைகளின் எதிர்பார்ப்பு, அம்மாக்களின் பக்குவம் இவற்றை வைத்து நகைச்சுவையாகவும், இடையிடையில் கண்கலங்கும் படியாகவும் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

“வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா”

இது, அப்பாக்களுக்கு தன் பெண் பிள்ளைகள் தேவதைகள் என்பதை அருமையாக எத்தி வைக்கும் கதை.

திரைப்படத்தின் ஆரம்பத்தில் பிரகாஷ் ராஜ் தன் மனைவியின் கையில் சுடுநீர் சிந்தியதை, தன் பிள்ளையின் மீது சிந்தியதாக நினைத்து நிதானம் இழந்து மனைவியை அடித்து விடுகிறார்.

இது போன்று நிதானம் இன்றைய பாசம். பிள்ளையை பள்ளிக்கு அனுப்பிவிட்டு கண் கலங்கி நிற்கும் சிறுபிள்ளைத்தனமான தந்தையின் அன்பு; சைக்கிள் வாங்கிக் கொடுக்கப் பயப்படும் தந்தை; வாங்கிக்கொடுத்து சைக்கிளையும் பின் தொடர்ந்து அவதானிக்கும் அதிக அக்கறை கொண்ட தந்தை; மேற்படிப்பிற்காக டெல்லிக்கு அனுப்பி வைக்கப் பயந்து அடம்பிடிக்கும் தந்தை.

இதுவே படத்தில் தந்தையான பிரகாஷ் ராஜின் பாத்திரம். இறுதியில் தனது பிள்ளையின் ஆசைப்படியாக திருமணம் நடக்கும் வரை தந்தையின் நிதானம் தவறவிடப்படுகிறது.

இதனை இடையில் வரும் ஒரு பாடல் வரியில் பாடலாசிரியர் அருமையாக இணைத்திருப்பார் ;

“ஐயா இருக்காரே ஐயா!
பாசம் இல்லாம பலரும் பைத்தியமா ஆனதுண்டு
பாசத்தினாலே இவரு பைத்தியமாவதுண்டு”

கதையில் நிதானமின்றிய பாசத்திற்குள் பிள்ளைகளின் யதார்த்தமான எதிர்பார்புகளிற்கு மத்தியில் நடைபெறும் நிகழ்வுகளாக படம் தொகுக்கப்பட்டுள்ளது. தந்தை பிரகாஷ் ரா‌ஜ் நிதானம் இன்றிய தந்தையாக இருந்து இறுதியில் நிதானமடையும் படியாக கதையை வடிவமைத்து திரைக்கதைக்கு உயிர் அளித்துள்ளார் இயக்குனர் ராதா மோகன்.

இறுதியில் தன் பிள்ளையை அடுத்தகட்ட வாழ்வுக்கு அனுப்பிவிட்டு, சந்தோசமாக சிரித்தபடியே நிதானமான பாசத்துடன் ஏர்போர்ட்டை விட்டு வெளியேறுகிறார் தந்தை.

கடைசி டயலாக் படத்தின் மையக்கருத்தினைக் காட்டுவதாக அருமையாக அமைகிறது ;

“பாசம் காட்டுறது முதல் கட்டம் ; பக்குவமாக நடப்பது அடுத்த கட்டம். நான் இப்போ பக்குவமாக இருக்கிறேன்”

வாழ்வில் அப்பா பிள்ளை உறவாக இருக்கட்டும், கணவன்-மனைவி உறவாக இருக்கட்டும், எந்த உறவாக இருப்பினும் ‘பாசத்துடன் பக்குவமும்’ அவசியமானது.

பிரிவுகளை ஏற்கும் பக்குவம்; எமக்காக பிறரை எதிர்பார்க்காமல் எம்மை நாமே கையாளும் பக்குவம்; எமது பாசம் பிறர் எதிர்பார்ப்புக்களை சிதைக்காமல் கையாளும் பக்குவம், இவை அனைத்தும் பாசத்துடன் இணையும் போதே பாசம் போற்றப்படுகிறது. இல்லையேல் ‘பாசத்தால் பைத்தியம் ஆகிவிடுவோம்’ என்கிறது கதை.

ஆபாசம் அணுவளவும் கலக்கப்படாத அருமையான திரைப்படம். குடும்பத்துடன் பார்க்கலாம். நிச்சயமாக எமது கடந்த கால நினைவுகளை இக்கதை மனதில் காட்சிப்படுத்துவதாக இருக்கும்.

Fazlan a Cader

பிரகாஷ் ராஜ் மற்றும் நடிகை த்ரிஷா நடிப்பில் 2008 இல் வெளிவந்த திரைப்படம் தான் இது. இப்படத்தில் புதுமையாகக் குறிப்பிட்டுக் கூறும் படி எதுவும் இல்லை. நாம் நாளாந்தம் காணும் அப்பாக்களின் ஏக்கம், பிள்ளைகளின்…

பிரகாஷ் ராஜ் மற்றும் நடிகை த்ரிஷா நடிப்பில் 2008 இல் வெளிவந்த திரைப்படம் தான் இது. இப்படத்தில் புதுமையாகக் குறிப்பிட்டுக் கூறும் படி எதுவும் இல்லை. நாம் நாளாந்தம் காணும் அப்பாக்களின் ஏக்கம், பிள்ளைகளின்…

11 thoughts on “அபியும் நானும்.

  1. I do agree with all the ideas you have presented on your post. They are very convincing and will definitely work. Still, the posts are too quick for newbies. May just you please prolong them a bit from next time? Thank you for the post.

  2. Креативная игра Лаки Джет на деньги не оставит тебя равнодушным – жми на газ и уничтожай границы своей удачи! Лаки Джет – оригинальная игра, которая перенесет тебя в мир азарта и высоких ставок.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *