மக்காவின் மைந்தர்

  • 41

மக்காவில்
மலர்ந்தார்
மாந்தர்கள்
போற்றும் மாநபி.

அறியாமை எனும்
இருள் அகற்றி
அறிவொளி
பரப்பினார்
அவனியிலே.

அன்னையின்
அரவணைப்பில்
ஆறு வயது வரை
அகிலத்தை அறிந்தார்
அண்ணல் நபி

உண்மையும் நம்பிக்கையும்
உயிராக கொண்டு
ஊரார் போற்றும்
உத்தமர் ஆனார் –
உம்மி நபி

தனிமையில் தவமிருந்து
சமூகத்தின் கறைபோக்க
கையேந்தினார் –
காத்தமுன் நபி

நாற்பதில்
நபி பட்டம் பெற்று
ஏகனை ஏற்க
அகிலத்திற்கு
ஏவினார்.

நற்பண்புகளை
நடத்தைகளாக்கி
இறைவனின்பால்
இதயங்களை
ஈர்த்தார் – இறைநேசர்.

பொறுமையை
புகழிடமாக்கி
இன்னல்களை
இளம் புன்னகையுடன்
ஏற்று – இருகரம்
ஏந்தினார் இறுதி நபி.

நண்பனாக
கணவனாக
தந்தையாக
தலைவனாக உருவெடுத்து
தரணி போற்றும்
தாரகையானார் –
தாஹா ரஸூல்.

பிறந்த மண்ணை
பிரிந்து மதீனா
எனும் மாநகரில்
மகத்தான ஆட்சி
புரிந்தார்.

சமர்களை சந்தித்து
சத்தியத்தை சமுதாயத்திற்கு
சான்று பகர்ந்தார்
சலிப்பின்றியே.

கஷ்டங்களை கடந்து
23 வருடங்கள் இறை
தூதை எத்திவைத்தார்
இவ்வையகத்திலே.

இரு ஒளிகளை
நேர் வழிகளாக்கி
முன்மாதிரியை முன்
மொழிந்து மண்ணை
விட்டு மறைந்தார்
மதீனா நகரிலே
மறை போற்றும் மாமனிதர்!

Rushdha Faris
South Eastern University of Sri Lanka.

மக்காவில் மலர்ந்தார் மாந்தர்கள் போற்றும் மாநபி. அறியாமை எனும் இருள் அகற்றி அறிவொளி பரப்பினார் அவனியிலே. அன்னையின் அரவணைப்பில் ஆறு வயது வரை அகிலத்தை அறிந்தார் அண்ணல் நபி உண்மையும் நம்பிக்கையும் உயிராக கொண்டு…

மக்காவில் மலர்ந்தார் மாந்தர்கள் போற்றும் மாநபி. அறியாமை எனும் இருள் அகற்றி அறிவொளி பரப்பினார் அவனியிலே. அன்னையின் அரவணைப்பில் ஆறு வயது வரை அகிலத்தை அறிந்தார் அண்ணல் நபி உண்மையும் நம்பிக்கையும் உயிராக கொண்டு…

2 thoughts on “மக்காவின் மைந்தர்

  1. Pingback: spin238
  2. Pingback: lsm99

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *