மதீனாவில் வாழும் கோன்.

  • 11

சித்திரை மாத முழுநிலவாக
பத்தரைமாற்றுச் சுடரொளியாக
இத்தரை மீதில் திருஉருவாக
முத்திரை பதித்தார் இறுதி நபியாக

குப்பைகளை தன்மீது போடும் மாது
ஒரு நாளில் அப்பக்கம் வராத போது
நலமில்லை அவளுக்கென்று அறிந்த போது
பார்பதற்கு சென்ற நபிக்கு நிகரேது

சுமைகளைச் சுமந்தபடி மூதாட்டி
நபி சென்றார் உதவுதற்கு வழிகாட்டி
பயணம் முழுதும் அவள் நபியைத் திட்டி
கேட்டிருந்தார் நபியோ கைகட்டி

பலி வாங்க சந்தர்ப்பம் கிடைத்த போதும்
இழிசெயல் முஃமின் நமக்கு வேண்டாம் என்றார்
குழி தோண்டிப் புதைத்திட்டார் அறியாமையை
வழிகாட்டியாய் வந்தார் அறிவுப்பாதையில்

கொலைவாளை ஒரு கொடியோன் ஏந்தி வந்தான்
தலையுனதே என் வாளால் வீழுமென்றான்
நிலைகுலையா நபியவரின் ஈமான் கண்டான்
தலைகுனிந்தான் காபிர் அவன் முஸ்லிம் ஆனான்

கற்களின் மீதுதான் அவர் பயணம்
முற்களின் மீதுதான் அவர் சயனம்
உள்ளத்தில் உயர்வான மௌனம்
மெல்லத்தான் வளர்த்தார் சமாதானம்

அன்பு நபி எங்களுக்குத் தலைவராவார்
அகிலத்திற்கோர் அருட்கொடையாவார்
மாண்பு நபி காட்டிய பாதை செல்வோம்
மறுமையில் ரசூல் நபியின் சபாஅத் பெறுவோம்

மக்கொனையூராள்

சித்திரை மாத முழுநிலவாக பத்தரைமாற்றுச் சுடரொளியாக இத்தரை மீதில் திருஉருவாக முத்திரை பதித்தார் இறுதி நபியாக குப்பைகளை தன்மீது போடும் மாது ஒரு நாளில் அப்பக்கம் வராத போது நலமில்லை அவளுக்கென்று அறிந்த போது…

சித்திரை மாத முழுநிலவாக பத்தரைமாற்றுச் சுடரொளியாக இத்தரை மீதில் திருஉருவாக முத்திரை பதித்தார் இறுதி நபியாக குப்பைகளை தன்மீது போடும் மாது ஒரு நாளில் அப்பக்கம் வராத போது நலமில்லை அவளுக்கென்று அறிந்த போது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *