பிரார்த்திப்போம்

  • 12

உயிர்கள் கருகும் தேசமிது
சாம்பல் காடாய் மாறிடுமோ
உணர்வுகள் என்று விழிப்படையும்
உடையும் இங்கே இதயங்களும்

அத்துமீறும் ஆணைகளால்
உரிமை பேச வந்தோரோ
கடமை செய்யத் தவறியோரே
எங்கே பாதை செல்கிறது

யாரும் அறியோம்
யாது செய்ய வேண்டுமென்ற
வரைமுறையும் நாமறியோம்

பதாகை தாங்கிய கால்நடை போல்
எங்கள் பயணம் இருக்கிறது
ஏன்?எதற்கு?  வினாத்தொடுக்க
வாயின்றி வாடுகிறோம்.

காலச்சுவடுகள் பல சொல்லும்
காயங்கள் இதயத்தை கீறிச்செல்லும்

உடைமை இழந்தோம்
உயிர்களை இழந்தோம்
உரிமையும் இழந்தோம்

உண்மை இங்கே வாய்ப்பூட்டு
போலிக்கு இங்கே கை தட்டு

இனவாத மேகங்களின்
அமிலமழையில்
இத்துப் போனது
என் தாய் நாடு

சட்டங்கள் எல்லாம்
சட்டகங்களுக்குள்
சமாதியானது
ஆட்சி மோகத்தில்
சூழ்ச்சி நடைபெற
மீட்சி தேடி என் மனமோ
படைத்தவனிடமே
மீள்கின்றது….

மக்கொனையூராள்.

உயிர்கள் கருகும் தேசமிது சாம்பல் காடாய் மாறிடுமோ உணர்வுகள் என்று விழிப்படையும் உடையும் இங்கே இதயங்களும் அத்துமீறும் ஆணைகளால் உரிமை பேச வந்தோரோ கடமை செய்யத் தவறியோரே எங்கே பாதை செல்கிறது யாரும் அறியோம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *