கல்யாணம்

  • 12

திருமணம் சொர்க்கத்தில நிச்சயிக்கப்பட்டது என்பாங்க. ஆனா அது நிச்சயமா இறைவனால் எழுதப்பட்ட நேரத்தில நிகழ இருப்பது என்றது எல்லோருமே நம்புற விசயம். ஆனால் நாம் அதை பரிசோதிக்கும் விதமாய் தான் நடக்கிறோம் என்றால் அது தான் உண்மை. யாருக்கு? எப்ப? நடக்கனுமோ அப்போ தான் நடக்கும். அதை தவிர்த்து ஏன்? திருமணம் பேசாத மற்றும் நிச்சயிக்கப்பட்ட பெண்களிடம் “எப்போ உங்களுக்கு கலியாணம்?” என்ற கேள்வி! எதற்கு?

உங்களுக்கு அது கேள்வி மட்டும் தான்! புரிந்து கொள்ளுங்கள். மடியும் அளவுக்கு தலையணையை அணைத்தபடி நாச்சுவற்றுக்குள் அழுது புலம்பும் அப் பெண்ணின் மறு பக்கம் தெரியாது உமக்கு. பிடிக்கவில்லை என்ற வார்த்தையை படித்து படித்து பாழடைந்த வீடாய் இருண்டு கிடக்கும் அவள் உள்ளம் உமக்குத் தெரியாது! யார் கேட்டாலும் “கொஞ்சம் நாள் பெத்தவங்களோடு இருப்போமே” என மத்தவங்களை சமாளிக்கும் சமயோசிதம் அவளுக்கு பழக்கப்பட்ட பாஷைகளவை.

ஓஹோ. இன்னும் ஒன்னு இருக்குல்ல! கலியாணம் பன்னவங்கள மட்டும் விட்டு வைக்குறாங்களா என்ன? னு யோசிக்குறது புரியிது. திருத்தவே முடியாது. புள்ள இல்லையா இன்னம்னு கேட்குறவங்கள. மற்றவர் மனநிலையை தன்மனநிலையாய் மாற்றிப் பாருங்கள். மற்றவர் குறை அறிய பழகாதீர்கள். மற்றவர் மனமறிந்து பேசுங்கள். மலரும் புது மாற்றங்கள்!

கவிச்சாரல் சாரா
புத்தளம்

திருமணம் சொர்க்கத்தில நிச்சயிக்கப்பட்டது என்பாங்க. ஆனா அது நிச்சயமா இறைவனால் எழுதப்பட்ட நேரத்தில நிகழ இருப்பது என்றது எல்லோருமே நம்புற விசயம். ஆனால் நாம் அதை பரிசோதிக்கும் விதமாய் தான் நடக்கிறோம் என்றால் அது…

திருமணம் சொர்க்கத்தில நிச்சயிக்கப்பட்டது என்பாங்க. ஆனா அது நிச்சயமா இறைவனால் எழுதப்பட்ட நேரத்தில நிகழ இருப்பது என்றது எல்லோருமே நம்புற விசயம். ஆனால் நாம் அதை பரிசோதிக்கும் விதமாய் தான் நடக்கிறோம் என்றால் அது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *