வெட்கமற்ற வெங்காயங்கள்

  • 11

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கிறேன்.

இலங்கை திரு நாடு இயற்கை வளங்கள் நிறைந்த அழகிய நாடு. இங்குள்ள மக்களின் குணங்களும் அழகானவை. மனிதர்களும் அழகானவர்கள். கொரோனா தொற்று கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு இருக்கும் மாபெரும் தலையிடி மரணிக்கும் ஜனாஸாக்கள் தகனம் செய்யப்படுவது. பலர் முகநூல் போராட்டங்கள் என்று ஒரு வகை போராட்டம் நடத்தி செல்ல எதிர்வரும் வரும் 10ஆம் திகதி பாதையில் போராட்டம் நடத்தப்போவதாக கேள்விப்பட்டேன்.

அவர்களுக்கு இந்தியாவில் ஒரு போராட்டம் நடந்தால் உடனடியாக இலங்கையில் நடாத்த வேண்டும். அதன் யாதார்த்தம் தான் புரியவில்லை.

முஸ்லிம்களின் ஜனாஸா தகனம் செய்யப்படுவது நாம் அங்கீகரிக்கும் விடயமல்ல. அதற்கான பல வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்ஷாஅல்லாஹ் நல்ல முடிவுக்காக இறைவனை பிரார்த்திப்போம்.

முகநூல்களிலும் வாட்ஸ்அப்களிலும் செய்தி ஒன்று பரிமாறுவதாக அறிந்தேன். முஸ்லிம் ஜனாஸாக்கள் கொவிட்டினால் மரணித்தால் தகனம் செய்ய அனுமதி வழங்காது ஜனாஸாவிற்கு P.C.R பரீசிலனை செய்து அதன் பின் பெற்றுக்கொள்ளுமாறும் அவ்வாறு பரீசிலனை செய்ய பணம் இல்லாதவர்கள் தன்னை நாடும்படியும் கூறி தனது தொலைபேசி இலக்கத்தை கூட பதிவிட்டுள்ளாராம். முஸ்லிம் சமூகம் மீது கொண்ட பற்றுக்கு என் நன்றிகள்.

உங்களிடம் பணம் அதிகமாக இருந்தால் சற்று என்னை தொடர்புகொள்ளவும். நாட்டில் சிங்கள முஸ்லிம் தமிழ் மக்கள் அன்றாட தேவையை நிறைவேற்ற வழி இன்றி சிக்கித்தவிக்கும் சந்தர்ப்பத்தில் இவ்வாறு PCR பரீசீலனைக்கு செலவிடுவதை விட அந்த அப்பாவி மக்களுக்கு செலவழியுங்கள்.

இந்த நாட்டு மக்களுக்கு ஒரு விடயத்தை கூறிக்கொள்கிறேன். இஸ்லாம் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு செய்யவேண்டிய கடமைகளுள் ஜனாஸாவை நல்லடக்கம் செய்வதையும் கட்டாயப்படுத்தியுள்ளது. அதற்கான வாய்ப்பை கேட்கிறோம். நாங்கள் நாட்டு சட்டத்தை மதிப்பவர்கள். அதனால் கட்டுப்பட்டு நடந்துக்கொள்கிறோம். சில விஷமிகள் போல் மோட்டுத்தனமாக போராட்டம் செய்து கொரோனா பரவ இடமளிக்கமாட்டோம்.

இஸ்லாம் தம் நலனை விட பிறர் நலனை விரும்புவதை வலியுறுத்தும் மார்க்கம். நடக்க இருக்கும் போராட்டத்தில் சுயநல முஸ்லிம் யாராவது இருந்தால் பங்கெடுக்கும். மனிதாபிமான முஸ்லிம்கள் வீடுகளில் இருந்து இறைவனிடம் பிராத்தியுங்கள்.

ஜனாஸாவை வைத்து சிலர் அரசியல் செய்கிறார்கள். சிலர் இனவாதம் புரிகிறார்கள். இவர்கள் இயக்கத்திற்கு ஆள் சேர்க்கிறார்கள் போல நடுநிலையான சிந்தனை உடையவருக்கு என் கருத்து புரியும். ஜனாஸா நல்லடக்கம் பற்றி பல மூத்த ஆலிம்கள் தெளிவான ஒரு நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். அதை வலியிறுத்தி வருகிறார்கள். நாம் தொடர்ந்து போராடி வருகிறோம்.

ஆனால் எல்லாவற்றையும் விட வல்லமையாளன் அல்லாஹ். அவனின் அனுமதி இன்றி அனுவும் அசையாது என கூறும் சகோதரர்கள் சற்று நிதானம் இழக்காமல் இருப்பது சிறந்தது

.எனவே ஜனாஸா பற்றிய விவகாரத்தை இறைவன் கைகளில் ஒப்படைத்துவிட்டு பட்டினியால் வாடும் நம் நாட்டு சிங்கள முஸ்லிம் தமிழ் மக்களுக்கு உதவ முயற்சியுங்கள்.

பஸீம் இப்னு ரஸுல்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கிறேன். இலங்கை திரு நாடு இயற்கை வளங்கள் நிறைந்த அழகிய நாடு. இங்குள்ள மக்களின் குணங்களும் அழகானவை. மனிதர்களும் அழகானவர்கள். கொரோனா தொற்று கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும்…

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கிறேன். இலங்கை திரு நாடு இயற்கை வளங்கள் நிறைந்த அழகிய நாடு. இங்குள்ள மக்களின் குணங்களும் அழகானவை. மனிதர்களும் அழகானவர்கள். கொரோனா தொற்று கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *