அஜினமொடோ சுவையூட்டியின் மறைந்துள்ள பக்கம்

  • 17

உணவு மனிதனால் தவிர்க்கப்பட முடியாத ஒரு அடிப்படைத் தேவையாகும். உணவு இன்றி உயிர் வாழ்வதும் சாத்தியம் அல்ல. நம் முன்னோர்கள் ஆரம்ப காலங்களில் ஆரோக்கிய உணவுகளை உண்டதன் காரணமாகவே நோய்கள் இன்றி சுகதேகியாகவே வாழ்ந்துள்ளனர். ஆனால் இன்று காலச் சுழற்சிக்கு ஏற்றாற் போல் உணவு முறையும் மாறிக்கொண்டு வருகிறது, என்பதே நிதர்சனம். நவீன காலத்து மக்கள் உடற் சத்துக்களை விட ருசிக்கே அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களின் நாக்குகளும் ருசிக்கே அடிமை ஆகி விட்டது எனலாம்.

அவ்வாறே இன்று சிறுவர் முதல் பெரியோர் வரை அறிந்த ஒரு சுவையூட்டி என்றால் அது அஜினமொடோ என்று தான் கூறலாம். இன்றைய கால உணவு முறையில் அஜினமொடோவின் செல்வாக்கு அதிகரித்தே காணப்படுகின்றது என்பதே மறுக்க முடியாத உண்மை. அஜினமொடோ நன்மைகளை சிறிதளவு கொண்டிருந்தாலும் பாரதூரங்களும் அதிகளவில் காணப் படுகின்றன என்பதே வேதனைக்குரிய விடயமாகும்.

ஹொட்டல்களின் வரப் பிரசாதமாக திகழ்கின்ற இந்த அஜினமொடோவின் வேதியல் பெயர் மொனோசோடியம் குளுட்டமிக் என்பதாகும். 1909 இல் ஜப்பானில் அஜினமொடோ காப் என்ற நிறுவனமே இதனை முதன் முதலாக உருவாக்கியது. அன்று முதல் நிறுவனத்தின் பெயராலேயே அழைக்கப்படுகின்றது. ஆரம்பத்தில் இது கடற் பாசியில் இருந்தே தயாரிக்கப்பட்டது. பின்னர் அதன் சுவைக்கு குளுட்டமிக் உப்பு தான் காரணம் என்பதைக் கண்டறிந்து அதனை ஜப்பானியர்கள் விளம்பரப்படுத்தி வியாபாரம் ஆக்கினர்.

இவ்வாறு இந்த சுவையூட்டியானது குறைந்த விலையில் அதிக சுவையை வழங்கியதால் உடனடி உணவு நிறுவனங்களுக்கு அது வரப் பிரசாதமாக அமைந்து விட்டது எனலாம்.

இந்த அஜினமொடோவானது மொனோ சோடியம் மற்றும் குளுட்டமிக் எனும் இரு வேதிப் பொருட்களால் ஆனது. இதில் சோடியம் 22% உம் குளுட்டமிக் 78% உம் காணப்படுகின்றது. சோடியம் எமக்கு இயற்கையாகவே நாம் உட்கொள்ளும் கடல் உப்பின் மூலம் எமது உடம்பில் சேர்கின்றது. குளுட்டமிக் உம் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், மீன், இறைச்சி போன்ற பொருட்களின் மூலம் தேவையான அளவு எமக்கு கிடைக்கின்றது. இவை தவிர அமினோ அமிலமான சோடியம் குளுட்டமிக் ஆனது எமது உடலில் உள்ள திசுக்களால் போதியளவு உற்பத்தி செய்யப்படுகின்றது. எனவே இவற்றை மேலதிகமாக பெற வேண்டிய தேவை எமக்கில்லை. இதில் கவனிக்கத்தக்க விடயம் என்னவெனில் அஜினமொடோவில் சோடியம் மற்றும் குளுட்டமிக் அதிகளவில் காணப்படுவதால் இவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளும் பட்சம் பாரதூரமான நோய்கள் ஏற்படலாம்.

இன்று திருமண வைபவங்கள் தொடக்கம் சிறு வீடுகள் வரை உபயோகிக்கப்படும் அஜினமொடோவின் மறு பக்கத்தை நாம் நோக்கும் போது இவற்றை நாளாந்தம் உபயோகிக்கும் போது பசியைக் கட்டுப்படுத்தும் நொதியப் பொருட்கள் தடைபடுகின்றன. அத்தோடு இதன் சுவைக்கு சிறுவர்கள் அடிமையாகும் பட்சம் அவர்கள் வேறு உணவுகளை உண்ணமாட்டார்கள். அத்தோடு சோம்பல், எடை அதிகரிப்பு, ஹோர்மோன் சமனிலையின்மை, ஒற்றைத் தலைவலி, இரத்த அழுத்தம், மலட்டுத்தன்மை, ஆண்மைக் குறைபாடு, நரம்புத் தளர்ச்சி, பிறப்புக் கோளாறு போன்ற நோய்கள் ஏற்படுவதுடன் குளுட்டமிக் வேதிப் பொருள் உடலில் அதிகரிக்கும்பட்சம் அது மூளையை கடுமையாக பாதிப்பதுடன் நினைவுத் திறனையும் மழுங்கச் செய்து மூளையின் முக்கிய பகுதிகளையும் செயலிழக்கச் செய்யும்.

மேலை நாட்டு உணவுப் பொதிகளில் அஜினமொடோ உணவில் கலந்திருந்தால் அதனை வெளிப்படையாய் குறிப்பிடுவார்கள். ஆனால் எம் நாட்டைப் பொருத்த வரையில் பெரும்பாலும் அதனைக் குறிப்பிடாது “Added flavours” என்பதோடு நிறுத்தி விடுகின்றனர்.

மோனோசோடியம் குளுட்டமிக் ஆனது E -620, E-621, E-622, E-623, E-624, E-625 போன்ற எண்களால் உணவுப் பொதிகளில் குறிக்கப்படுகின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 200 Mt அளவு அஜினமொடோ இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.

1968 இல் America chemical socity மேற்கொண்ட ஆய்வின் படி வேதியல் உப்பை சீராக எடுத்துக் கொண்டால் பாதிப்பு இல்லை என கூறியது. எனினும் தற் காலத்தை எடுத்து நோக்குகையில் இலங்கையிலும் ஸ்னக்ஸ், சிப்ஸ், பிஸ்கட் என அனைத்து வகையான உற்பத்திகளிலும் ஊடுருவி காணப்படுகின்றது. இது உடம்பில் அதிகரிக்கும்பட்சம் பாரதூரமான விளைவுகள் ஏற்படலாம்.

இன்றைய காலங்களில் மக்கள் பகுத்தறிவு ரீதியாக சிந்திப்பதை விட்டு விட்டு விளம்பரங்களுக்கு அடிமையாகி காணப்படுகின்றனர். பணம் கொடுத்து நோயை விலைக்கு வாங்கும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பணத்தையும், இலாபத்தையும் மட்டுமே விளம்பரங்கள் கருத்திட் கொண்டு செயற்படுகின்றதே தவிர மனித உடல் நலத்தை அல்ல .என்பதை கருத்திற் கொள்ள வேண்டும்.

எனவே நாம் சிந்தித்து எடுக்கும் சிறு முடிவானது எம்மை மட்டுமின்றி எம் குடும்பத்தைய்யும் பாதுகாக்கும் என்பதே உண்மை. அத்தோடு செயற்கை சுவையூட்டிகளை விட இயற்கை சுவையூட்டிகளே என்றைக்கும் சிறந்ததாகும். எது எவ்வாறாயினும் எந்தப் பொருளையும் அளவுக்கு மீறி உட்கொள்ளும்போது அது பாதகமான விளைவுகளையே தரும், அளவோடு உட் கொள்ளல் சிறந்தது என்பதே நிதர்சனமாகும்.

Mishfa Sadhikeen
SEUSL

உணவு மனிதனால் தவிர்க்கப்பட முடியாத ஒரு அடிப்படைத் தேவையாகும். உணவு இன்றி உயிர் வாழ்வதும் சாத்தியம் அல்ல. நம் முன்னோர்கள் ஆரம்ப காலங்களில் ஆரோக்கிய உணவுகளை உண்டதன் காரணமாகவே நோய்கள் இன்றி சுகதேகியாகவே வாழ்ந்துள்ளனர்.…

உணவு மனிதனால் தவிர்க்கப்பட முடியாத ஒரு அடிப்படைத் தேவையாகும். உணவு இன்றி உயிர் வாழ்வதும் சாத்தியம் அல்ல. நம் முன்னோர்கள் ஆரம்ப காலங்களில் ஆரோக்கிய உணவுகளை உண்டதன் காரணமாகவே நோய்கள் இன்றி சுகதேகியாகவே வாழ்ந்துள்ளனர்.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *