அவள் என் தோழி
- by admin
- 12
அவளுக்காய் மீண்டுமொருமுறை
என் நயனமிரண்டும் துளிர்க்கின்றன
அந்தப்பாவை யவள் பாவம்
பாசத்தை யாசித்து யாசித்தே
நொந்து போன பூவை யவள்
புன்னகையைப் பொன்னகையாய்
ஏந்தியிருக்கும் பூமுகம் அவளுக்கு
நிம்மதிதான் இருக்கவில்லை
பூவான அவள் மனதிற்கு
சுட்டித்தனமும் குழந்தைப்பேச்சும்
அவள் சுபாவம்
தேசமிழந்த தேவதை அவள் பாவம்.
வேதனைகளைப் போட்டுப் பூட்டிப்பூட்டியே.
சாதனை செய்ய நாடினாள்
வாழ்க்கையெனும் சோதனையில்
தனியே வாடினாள்
அவள் சுமைகளையும்
சுகங்களாக்கிக் கொண்டவள்
இன்றோ அவளது சுகங்கள்
எல்லாம் சுமைகளாக
அவளது கிறுக்கல்கள் கூட
அழகாகத்தானிருந்தன
அழகிய அவளே இன்று
கிறுக்கலாகிப் போனாள்
விதியின் விளையாட்டா இல்லை
சிலரின் முரண்பாடா அவளை
தனிமைச்சிறையில் சிக்கவைத்தது
எல்லாம் இழந்தும் இன்னும்
அவள் காத்திருக்கின்றாள்
என்றாவது ஒருநாள் அவள் வானம்
விடியுமென்ற ஒற்றை நம்பிக்கையில்
அல்லாஹ்வின் மீதான
அசையா நம்பிக்கையில்
உனக்காகப் பிரார்த்திக்க
இவள் இருப்பாள் என்றும்
நட்போடு தோழி
எல்லாம் நன்மைக்கென்போம்
நடந்தவை பொருந்திக் கொள்வோம்
நடப்பவை நலமாய் அமையட்டும்
அமைதி கொள்வோம்.
மக்கொனையூராள்
அவளுக்காய் மீண்டுமொருமுறை என் நயனமிரண்டும் துளிர்க்கின்றன அந்தப்பாவை யவள் பாவம் பாசத்தை யாசித்து யாசித்தே நொந்து போன பூவை யவள் புன்னகையைப் பொன்னகையாய் ஏந்தியிருக்கும் பூமுகம் அவளுக்கு நிம்மதிதான் இருக்கவில்லை பூவான அவள் மனதிற்கு…