திசை மாறும் வாழ்க்கை

  • 33

எதிர்ப்பாராமல்
திசை மாறும்
வாழ்க்கைப் பயணம்

திடுமென நிகழும்
திருப்பங்கள்
சில சமயம் தித்திக்கும்
சில சமயம் திண்டாட்டம்

முடிவுகள் எடுக்க
வேண்டிய முக்கிய
நிமிடங்கள் –
முடிவு சரியா
தவறா
படைத்தவன் பக்கம்
பாரம் சாட்டும்
உள்ளம்

யாதார்தத்தைப்
புரிந்துகொள்ளும்
தருணங்களில்
தேடாமல் கிடைத்திடும்
சில சொந்தங்கள்
சொல்லாமலே விடைபெறும்
சில சொந்தங்கள்

இனம்புரியாத
உணர்வுகள்
இதயத்தை சூழ
மயக்கமா
மகிழ்ச்சியா
தெரியவில்லை

சில நேரம்
அலைப்பாயும்
சில நேரம்
அல்லாடும்
நெஞ்சம்

வறண்ட பாதைகள்
வசந்தமாகின்றன
வண்ணம் தூவுகின்றன
மீண்டும் வறண்டு
போகின்றன

இன்பம் பாதி
துன்பம் பாதி
இரண்டும் கலந்த
வண்ணக் கோலம்
வாழ்க்கை

சில பயணங்கள்
முடிந்தாலும்
பாதைகள் தொடரும்
சில பாதைகள்
முடிந்தாலும்
பயணங்கள் தொடரும்

புரியாத புதிரான
குழப்பம்
வாழ்க்கைப் பாதை
அதில்
திசை மாறும்
வாழ்க்கைப் பயணம்!

Rushdha Faris
South Eastern University of Sri Lanka.

எதிர்ப்பாராமல் திசை மாறும் வாழ்க்கைப் பயணம் திடுமென நிகழும் திருப்பங்கள் சில சமயம் தித்திக்கும் சில சமயம் திண்டாட்டம் முடிவுகள் எடுக்க வேண்டிய முக்கிய நிமிடங்கள் – முடிவு சரியா தவறா படைத்தவன் பக்கம்…

எதிர்ப்பாராமல் திசை மாறும் வாழ்க்கைப் பயணம் திடுமென நிகழும் திருப்பங்கள் சில சமயம் தித்திக்கும் சில சமயம் திண்டாட்டம் முடிவுகள் எடுக்க வேண்டிய முக்கிய நிமிடங்கள் – முடிவு சரியா தவறா படைத்தவன் பக்கம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *