சுவாமி ஞானப்பிரகாசர்

  • 60

நான் விருப்பும் பெரியார் சுவாமி ஞானப்பிரகாசர். இவர் மானிப்பாயைச் சேர்ந்த சாமிநாதப் பிள்ளை-தங்கமுத்து தம்பதிகளின் மகனாக 1875 இல் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வைத்தியலிங்கம் என்பதாகும். வைத்தியலிங்கம் தனது தந்தையாரை 5வது வயதில் இழந்தார். தாயாரான தங்க முத்து அச்சு வேலியைச் சேர்ந்த தமிழறிஞரான தம்பி முத்து என்னும் கத்தோலிக்க மதத்தவரை மறுமணம் செய்து கொண்டார்.

தாயார் தங்க முத்து கத்தோலிக்க மதத்தை தழுவிய போது வைத்தியலிங்கமும் அம் மதத்துடன் சேர்ந்து கொண்டார். இதன் காரணமாக இவருக்கு “ஞானப்பிரகாசர்” எனும் பெயர் சூட்டப்பட்டது. ஞானப்பிரகாசர் இளமை முதல் தமிழில் மிக்க ஆர்வமுடையவராக விளங்கினார். வளர்ப்புத் தந்தையார் இவருக்கு அச்சுக்கலையில் பயிற்சி அளித்ததோடு தமிழிலக்கியங்களில் மிக்க ஆர்வமுடையவராக விளங்கினார்.

ஞானப்பிரகாசர் யாழ்-சம்பத்தரிசியார் கல்லூரியில் கல்வி பயின்ற பின் புகையிரத சேவை நிலையத்தில் எழுது வினைஞர் தேர்வில் சித்தி பெற்ற பின் கடிகமுவை புகை வண்டி நிலையத்தில் எழுது வினைஞராகப் பணி புரிந்தார். அரச சேவையில் அவரது நாட்டம் செல்லவில்லை.1901ஆம் ஆண்டு இவர் குருவானவராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

இவர் தமிழுக்கும் கத்தோலிக்க மதத்திற்கும் இறக்கும் வரை அளப்பரிய சேவையாற்றினார். சுவாமி ஞானப்பிரகாசர் பன் மொழிப் புலவர். இவர் எழுபத்திரண்டு மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருந்தார். இவரது மதிநுட்பமும், ஆராய்வுத் திறனும் உலகமே அறிந்து இருந்தது.

இவர் தமிழ்த் தொண்டுடன் மற்றும் இருக்கவில்லை. சமயத் தொண்டிலும் தீவிரமாக ஈடுபட்டார். சமயத்தில் பின் தங்கி இருந்த ஏழை மக்களை தமது மதத்திற்கு அழைத்து அவர்களுக்கு கல்வியறிவூட்டினார். இவரது வாழ்க்கையில் 37தேவாலயங்களை உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு.

யாழ்ப்பாண சரித்திரத்தை அறிவியலடிப்படையில் முதன் முதலாக எழுதியவரும் இவரே சைவ சமயத்தைப் பற்றி சைவ சித்தாந்தம் என்னும் நூலை எழுதியதோடு “செகராச சேகரன்” என்ற நாவலையும் வெளியிட்டு இருந்தார்.

சுவாமி ஞானப்பிரகாசரின் ஆராய்வுத் திறனை நண்குணர்ந்த ஜேர்மனிய அரசு 1939ஆம் ஆண்டில் அவர் வாழும் போதே அவருடைய உருவத்துடன் கூடிய முத்திரை ஒன்றை வெளியிட்டு கௌரவித்தது. இலங்கை அரசு 1981இல் முத்திரை ஒன்றை வெளியிட்டது.

இவருக்குப் பல இடங்களில் சிலை நிறுவி மக்கள் தம் மரியாதையை செலுத்தினர். தமிழ் நாட்டிலுள்ள திருப்பனந்தாள் ஆதீனம் இவரது தமிழ்ப் பணியைப் பாராட்டி கௌரவித்து சன்மானமும் வழங்கியிருந்தது. தமிழுக்கும் கத்தோலிக்க மதத்திற்கும் அளப்பரிய சேவையாற்றிய சுவாமி ஞானப்பிரகாசர் தமிழ் மொழி மீது தீவிரமாக ஈடுபட்டார்.

தமிழ் மொழி தொண்மையானது. தனித்துவமானது. பல மொழிகளுக்குத் தாயானது. என்பது இவரது அசைக்க முடியாத கொள்கையாகும். இவர் எவ்விடத்திலும் தயங்காது எடுத்துரைத்தார். இவரது அடிச்சுவட்டைப் பயன்படுத்தி தமிழ்ப் பணியாற்ற முன்வர வேண்டும். பல மொழிகளிலும் துறைகளிலும் வல்லவராக வர வேண்டும். இதுவே நாம் அவருக்குச் செய்யும் அஞ்சலியாகும்.

Akeel Ahamed samran
Grade 08
Kl/Al Fasyathul Nasriyan’s Muslim Boys School

நான் விருப்பும் பெரியார் சுவாமி ஞானப்பிரகாசர். இவர் மானிப்பாயைச் சேர்ந்த சாமிநாதப் பிள்ளை-தங்கமுத்து தம்பதிகளின் மகனாக 1875 இல் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வைத்தியலிங்கம் என்பதாகும். வைத்தியலிங்கம் தனது தந்தையாரை 5வது…

நான் விருப்பும் பெரியார் சுவாமி ஞானப்பிரகாசர். இவர் மானிப்பாயைச் சேர்ந்த சாமிநாதப் பிள்ளை-தங்கமுத்து தம்பதிகளின் மகனாக 1875 இல் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வைத்தியலிங்கம் என்பதாகும். வைத்தியலிங்கம் தனது தந்தையாரை 5வது…

2 thoughts on “சுவாமி ஞானப்பிரகாசர்

  1. 208609 395000I discovered your site internet site on google and check a couple of your early posts. Preserve in the top notch operate. I just extra up your Feed to my MSN News Reader. Seeking for toward reading far more of your stuff afterwards! 936002

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *