வாழ்க்கையில் நீ இன்னும் முன்னேற வேண்டுமா மகனே

0 Comments

அது ஒரு அழகிய கிராமம். அங்கு ஓர் விவசாயியின் குடும்பம். ஒரு பன்னோலயால் வேயப்பட்ட தடிகளை கொண்டு சுவர் எழுப்பிய குடிசை அது. வரவேற்பறையும் சமயலறையும் தூங்கும் இடமும் என எல்லாமே ஒரே இடமாக தான் இருந்தது அந்த குடிசையில். குடிசை அது என நான் மனம் சுளிக்கவும் இல்லை. வசதி இல்லாத வாழ்க்கை என கவலையும் இல்லை.

விவசாயம் தான் சீவனோபாயமக இருந்தது. மிகவும் எளிமையான முறையில் வாழ்க்கையை நடாத்தி வந்தனர்.

அழகான தம்பத்தினருக்கு ஒரு அழகிய ஆண் குழந்தை. அவன் தான் முஆத். சிறு வயது முதல் குறும்பும் சேட்டைகளும் அட்டகாசங்களும் என பல சுபவங்களையும் கொண்டவன். மிகவும் சந்தோசமாய் தன் மகனுடன் வாழ்ந்து வந்தனர். பிள்ளை தான் எங்களின் உலகம் என வாழ்ந்த அந்த பெற்றோர்கள்.

பிள்ளை பிறந்தது முதல் செய்த ஒவ்வொரு செயல்களையும் இனிமையான தென்றல் காற்றாய் ரசித்து வந்தனர்.

மழலையின் மொழி, பாதம் பதிக்கும் அழகு,
உண்ணும் எழில் என அனைத்தையும் ரசித்தனர்.

ஒழுக்கத்தை தான் உலகம் என்றே வளர்த்து வந்தனர். சிறு வயது தொடக்கம் நல்ல சுறு சுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பதை பொழுது போக்காக செய்து கொண்டிருப்பவன். மணல் வீடு கட்டி விளையாட கூடியவன். தனிமையில் கூட சிந்தித்து செயல் பட கூடியவன்.

பெற்றோர்கள் ஆர்வம் ஊட்ட கூடியவர்களாகவும் இருந்தார்கள். தன் பிள்ளையின் ஆசைகளுக்கு உடன் பட்டார்கள். தாயின் அரவணைப்பில் மகிழ்ச்சியின் உச்ச கட்டத்தில் இருப்பவன். தந்தையின் ஆதரிப்பில் பூரித்து போவான்.

பெற்றோரின் ஆசையோ மார்க்க அறிஞர் ஆக தன் பிள்ளையை வர வைக்க வேண்டும் என்று. இருப்பினும் பிள்ளையின் சந்தோசம் எதில் உள்ளதோ அதையே செய்யட்டும் என்று பேசி கொண்ட பெற்றோர்.

பாலர் வகுப்புக்கு சேர்ப்பதற்கு தயார் ஆவதை பற்றி பேசிக் கொண்டனர். பிள்ளையை படிக்க வைப்பது பற்றிய சிந்தனை பெற்றோரை ஆழ்ந்த யோசனையில் ஆழ்த்தியது.

யோசித்துக் கொண்டே அந்த குடிசையின் ஓரத்தில் இருவரும் ஒருவருக்கு ஒரு ஓரமாய் சிந்திக்க துவங்கினர்.

பல கஷ்டங்கள் பட்டு பிள்ளையை படிக்க வைத்து பாலர் வகுப்பை முடித்தனர். பாலர் வகுப்பிலிருந்து ஷரப் இவனின் நண்பன்.

மகன் பெரியவனாய் வளர்ந்து விட்டதாக எண்ணி இருவரும் மனதுக்குள் அழுது கொண்டனர். வெளிக்காட்டவில்லை.

இவனுக்கு பாலர் வகுப்பு பாராட்டுக்கள் எராளமானவை. இருப்பினும் ஷரஃப் கொஞ்சம் சுட்டித் தனம் பண்ண கூடியவன். இருந்தாலும் முஆத் தான் அனைத்து ஆசிரியர்களின் ஆசியை பெற்றவன்.

எதிர் காலத்தில் சிறந்த ஒழுக்கமுடைய பிள்ளையாக வர வேண்டும் என்ற ஆசான்களின் ஆசியுடன் பாடசாலையில் சேர்ந்தான். அங்கும் பலரின் பாராட்டுக்கள்.

பெற்றோர்களுக்கு தாங்குமா? அவ்வளவு சந்தோசம் பிள்ளையை நினைத்து. தன் பிள்ளை தான் வகுப்பில் அமைதியானவனகவும் ஒழுக்கமுள்ளவனாகவும் பரீட்சைகளில் முதலாமிடம் பெருபவனாகவும் ஆசிரியர்களை மதிக்க கூடியவனாகவும் இருப்பதாக பலவித பாராட்டுக்கள் பெற்றதை நினைத்து பெருமை பட்டனர்.

தன் மகன் முதலாமிடம் பெற்றதற்காக வாங்கிய பரிசில்களை முதன் முதலாக பெற்றோரிடம் காட்ட வேண்டும் என எண்ணுகிறான்.

இவனின் ஆசையை அறிந்த ஆசிரியர்கள் இவனின் பெற்றோரை மேடைக்கு அழைத்து அவர்களுடனே பரிசில்களை யும் கொடுத்து அனுப்பினார்.

தந்தையோ சீவி விடாத தலை அது. தங்க சொரூபம் கொண்ட முகம். தைரியமான பார்வை. கம்பீரமான தோற்றம். கிழிந்த சட்டை மற்றும் கந்தையான சாரம் ஒன்றுடன் தேய்ந்த செருப்புடனும் இருந்தார்.

தாயோ அப்பாவி போன்ற சொரூபம். எளிமையான நடை. கலப்படம் இல்லாத புன் சிரிப்பு. அமைதியான பேச்சு. கிழிந்த ஒரு ஆடையைக் கொண்டு தலையில் ஒரு முக்காட்டுடன் ஒழுக்கமான முறையில் உடம்பை மறைத்துக் கொண்டாள்.

வீட்டிற்கு வந்த உடனேயே மகனை கட்டி அணைத்து அந்த தாய்.அந்த சிறுவனிடம் கூறிய வார்த்தைகள்.

“வாழ்க்கையில் நீ இன்னும் முன்னேற வேண்டுமா மகனே,

  1. தனித்திருக்க பழகிக் கொள்.நீ சுயமாக சிந்திக்க கூடியவன். உன் ஆற்றல் இன்னும் அதிகமாகும்.
  2. இரவில் விழித்திருக்க கற்றுக் கொள். அந்த நேரம் உன்னை சிந்திக்க வைக்கும்.
  3. பசித்திருந்து பழகு. அது உன்னை சோம்பலில் இருந்து காப்பாற்றும்
  4. மதம் சம்பந்தபட்டது உட்பட அதிக நூல்களை வாசி அது உன் மூளைக்கு புத்துணர்ச்சியை தரும்.
  5. ஆடம்பரத்தை விரும்பதே அது அழிவை தரும்.
  6. பெருமை தனம் கொள்ளாதே. அதுவே உன்னை ஒரு நாள் மடையனாக மாற்றும்.
  7. அனைவரும் ஒரே சமமானவர்கள் என்று பார். அது உன்னை உயர்த்தி விடும்.
  8. உதவி கேட்டு வந்தால் இல்லாவிடினும் கடன் வாங்கி யாவது கொடுத்து விடு. அதுவே ஒரு நாள் உனக்கே திரும்ப கிடைக்கலாம்.
  9. தர்மம் செய் அது உன்னை ஆபத்துகளில் இருந்து பாது காத்துவிடும்.
  10. எப்போதும் பொறுமையோடு இரு மகனே. அது தான் உன்னை தலை நிமிர்ந்து வாழ வைக்கும்.

என்று கூறி தலையை தடவி விடுகிறாள். அந்த தாய்.

நாட்கள் கடக்கின்றன. தாயும் நோய் வாய்ப்பட்டு பாயினிலேயே படுத்த படுக்கையாக.

அந்த சிறுவனின் ஐந்தாம் தரத்துக்கான பரீட்சையும் நெருங்கியது. இருவரும் சிறந்த முறையில் படிக்கின்றனர். ஷாரப் உடன் இவனும் நன்றாக படிக்கிறான். இருந்தாலும்
தாயின் நிலையை நினைத்து கவலையில் மூல்கிப்போன இவனுக்கு படிக்க மனசு இல்லாமல் தாயின் அருகில் சென்று தூங்கிக் கொள்கிறான்.

தயோ பிள்ளை எழும்பியதும், “மகனே உன் தாயின் ஆசை கனவு இலட்சியம் எல்லாமே நீ தானடா. நாளை நடக்க இருக்கும் அந்த பரீட்சையில் நீ வெற்றி பெற்று வர வேண்டும் மகனே.” என வாழ்த்து கூறுகிறாள்.

“வாழ்க்கையில் உன் ஒவ்வொரு நோடிகளும் சிறந்த பயனுள்ள விடயங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என ஆசைப்படுகிறேன்.” என்றும் கூறுகிறாள்..

இவனும் பரீட்சைக்கு நல்ல முறையில் தயாராகி பரீட்சயியும் எழுதி விட்டு வீடு திரும்புகிறான்.

பரீட்சையில் சித்தியடைவதாவும் எல்லோரிடமும் கூறுகிறான்.

தாயுடனேயே கொஞ்சம் நாட்கள் இருக்க வேண்டும் என எண்ணுகிறான்.

தந்தையும் வயலில் காவலிற்கு சென்று விட்டார். இரவு நேரமும் வந்து விட்டது. மழையும் பேய ஆரம்பித்தது. வீடு எல்லாம் சிறு சிறு ஓட்டைகள். அந்த ஓட்டைகளின் ஊடாக மழை நீரும் வர ஆரம்பித்தது. அதிக காற்று வீசியதால் வீட்டின் மேல் இருந்த ஓலைகள் எல்லாம் பறந்தன.

தாயை ஒரு பொலித்தீனால் மூடி விடுகிறான். மழை நீரோ தாயின் சதிரம் தனிலே பட்டு தன் தாயின் துயில் களைந்து விடுமோ என எண்ணி என் துயில் துறந்தேணும் உன் துயில் களையாது காப்பேன் இதுவே உன் மகனின் கடமை என்று மனதுக்குள் நினைத்துக் கொள்கிறான். மழையும் நின்றது.

தாய்க்கும் நோய் அதிகமாகி கொண்டிருக்கிறது. விட்ட மழை திரும்பவும் பெய்ய ஆரம்பித்தது. இருந்தாலும் என் தாயின் நலனே எனக்கு முக்கியம் என ஓடுகிறான் கடை அதனை நோக்கி ஓடும் ஒட்டமோ சொல்ல முடியாது.

காலில் செருப்பில்லை. போகும் வழியில் காலில் முள் குத்தி காலை கிழித்து விட்டது.

‘என்னை என் தாய் பெற்றெடுக்கும் போது பட்ட வேதனையை விடவா இந்த வலி கொடுமையானது’ என ஓடுகிறான்.

அங்கு சென்று பார்த்தால் மருந்துகளும் முடிந்து விட்டதாம்.

அழுது அழுது ஒவ்வொரு கடையாய் சென்று இறுதியாக வாங்கி வந்து விட்டான் மருந்துகளை.

மழையும் நின்றது. தாயின் நிலமையை அறிந்து முதலில் மருந்தை கொடுத்து உறங்க வைக்க வேண்டும் என்று எண்ணினான்.

தாய் மனம் விடுமா? மகனின் காலைப் பார்த்து அழ துவங்கி விட்டாள். தாயை சமாதானபடுத்த முயன்ற போதிலும் முடியாத காரியமாய். உங்களுக்காக ஒரு கவிதை என சொல்ல துவங்குகிறான்.

அன்பின் வடிவம் அம்மா
ஆராட்ட வேண்டுமா உன்னை
இன்றைக்கு அவசரமாக தூங்கு
ஈக்களின் தொல்லை அதிகம்

உன்னை கடித்தால் அடிக்கவோ
ஊது பத்தி தான் பத்த வெய்க்கவோ
என்ன செய்ய சொல்லம்மா
ஏன் தானோ அமைதி

ஐயம் இன்றி சொல்லு
ஒனக்கு எதுவும் குறையோ
ஓட்டி விரட்டுவோம் குறைகளை
ஔடதம் ஏதும் இல்லாமலே அம்மா

என்று முடித்தான்.

மகனின் குறும்புக்கார கவிதையை நினைத்து ஆனந்க் கண்ணீர் வடித்தார்.

அடுத்த நாள் காலையில் மகன் தந்தையுடன் கடைத் தெருவுக்கு சென்றவன் திகைத்துப் போனான். அவன் ஆசைப்படி ஒரு சைக்கிளை வாங்கி கொடுத்து விட்டார். தந்தையும் மகனும் வீட்டிற்கு வந்த உடனேயே தாயிடம் காட்டி மகிழ்ச்சியாய் இருந்தனர். இதுவே இவர்களின் கடைசி சந்தோசமாக இருந்தது.

தாய் திடீர் என நோய் வாய்ப்பட்டு எந்த வைத்தியர்களின் ஆதரவு இன்றியும் சிகிச்சைகள் பலன் இன்றியும் இறந்து போனார். இருவரும் எவ்வளவோ போராடி பார்த்தும் முடியாமல் போய் விட்டது.

கத்தினான். கதறினான். அவனால் தாங்க முடியாத வலி. நாட்கள் போக போக தாயின் நினைவுகள் கூடியது. இவனுடைய நண்பன் ஆறுதல் கூறினான். தன்னுடைய வீட்டில் இருக்குமாறு வேண்டினான்.

ஷரஃபின் வீட்டிற்கு போய் படிக்கும் படி அனைவரும் கூறினர். இவன் போக வில்லை. தாயிடம் போய் விடுவோம் என்றும் எண்ணம் தோன்றியது. இருப்பினும் அவனின் அந்த தாயின் ஆசைகளை நிறை வேற்ற வேண்டும் என கடினமாக கஷ்ட பட்டு படித்தான்.

தந்தைக்கும் நல்ல தொழில் வந்தது. அவரின்  ஆசை போலவே மார்க்க அறிஞர் ஆக கற்று தேர்ச்சி பெற்றான். சாதாரண தர பரீட்சையை படித்து சிறந்த பெரு பேற்றை பெற்றான். என் இந்த சந்தோசத்தை பகிர்ந்து கொள்ள என் தாய் என்னுடன் இல்லை என மனதுக்குள் அழுது கொண்டான்.

தன் தாயின் அறிவுரைகள் என்றும் என் காதருகில் இடி முழக்கம் போல ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.

தாய் கூறியது போல அனைத்து நண்பர்களையும் துறந்தான். எவ்வித வீணான வேலைகளிலும் ஈடுபடவில்லை. தொலை தொடர்பு சாதனங்கள் பாவனைகள் இருக்க வில்லை.

தந்தையுடன் பேச வேண்டும் என்றால் ஹாஸ்டல் சேர் இடம் தொலை பேசியை வாங்கி பேசிக் கொள்வது. விடுமுறைகளுக்கு கூட வீட்டுக்கு வருவதில்லை.

தன் தாய் சிகிச்சை பலன் இன்றி இறந்து போனதை நினைத்து தான் ஒரு வைத்தியர் ஆக வேண்டும். என் ஊர் மக்களுக்கு உதவ வேண்டும் என கடினமாக படித்தான். இறைவனின் அருளால் அணைத்து பரீட்சைகளிலும் சித்தி பெற்று இன்று ஒரு வைத்தியராக உள்ளார்.

எந்த இடத்தில் மேடை ஏறி பேசினாலும் என் பெற்றோரின் அறிவுரை தான் என்னை இந்த இடத்துக்கு கொண்டுவந்தது என கூறி முடிப்பார்

இவரின் வாழ்க்கை எங்களுக்கு ஒரு முன் மாதிரியாக இருக்க வேண்டும். தன் தாயின் கனவுகளை நிறை வேற்றியவர். அவரின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து வந்தவர். எளிமையாக வாழ்ந்தவர். கஷ்டத்தில் கூட படிப்பை விடாது படித்தவர். இன்றும் கூட பெற்றோரின் மதிப்பை பல இடங்களில் புரிய வைப்பவர்.

கஷ்டங்கள் தான் ஊக்கத்தை ஏற்படுத்தும். தனிமை தான் சிந்திப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. ஒருவரின் அறிவுறை கூட இன்னொருவரை வாழ வைக்கும்.

அறிவுரை பண்ணுவதோடு நிறுத்தாமல் ஊக்க படுத்துவதும் கடமைஅதிகமான வெற்றியாளர்களின் வாழ்க்கை துன்பத்தில் இருந்து தான் ஆரம்பித்திருக்கிறது.

இவர் ஒரு சாதனையாக காட்டா விட்டாலும் அவரின் தாயின் அறிவுரையை பின் பற்றி வாழ்க்கையில் நடை முறைப்படுத்த நினைத்தினாலேயே இன்று இந்த உயர் நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

அறிவுரை கூறுபவன் எந்த நிலையில் இருக்கிறான் என்பதை பார்க்காதே! அவன் கூறுகின்ற அந்த விடயங்கள் உனக்கு பயன் அளிக்க கூடியதா என்று பார்த்து பற்றிக் கொள். பயன் அளிக்க முடியும் என்று நினைத்தால் எடுத்துக் கொள்.  இல்லையென்றால் அமைதி காத்திடு.

நன்றி

ஹலீமா சனிப்தீன்

Leave a Reply

%d bloggers like this: