மென்மையே மேலானது

0 Comments

சில தவறுகள் சுட்டிக்
காட்டப்படாமலேயே இருக்கிறன
உறவுகள் பிரிந்து விடுமோ என்று

பிரிந்த உறவே
உணரும் போது மீண்டும் வரும்
அணைக்க நாடி வரும்
ஆனால் இழந்த நன்மைகள்
மீண்டு வருமா?

உன்னைப் போல் உறவுகளும்
வானில் ஜொலிக்க வேண்டும்
என்றால் தவறுகளை
மென்மையாக சுட்டிக் காட்டு

பிரிந்து விடாது உறவு
புரிந்து விடும் தவறு
நெருங்கி விடும் நட்பு
எதிலும் மென்மையே மேலானது!

Noor Shahidha
SEUSL
Badulla

Leave a Reply

%d bloggers like this: