என்னை வீழ்த்திய வேஷங்கள்

  • 15

நீ கூறியது ஒன்றும் கதையல்ல
என்னை ஊமையாக்க விதைத்த விதைகள்
நீ பழகியது ஒன்றும் பாசமல்ல
என்னை வீழ்த்திய வேஷங்கள்
நீ எடுத்தவை ஒன்றும் மாற்றமல்ல
என்னை கலங்கடித்த ஏமாற்றங்கள்

உன் மௌனம் ஒன்றும் விடையல்ல
என் வினாக்களின் மொத்த ரணங்கள்
உன் புன்னகை ஒன்றும் வெற்றியல்ல
என்னை கொல்ல வைக்கும் கத்திகள்
உன் வார்த்தைகள் ஒன்றும் விதியல்ல
என்னை கொன்று விட்ட சதிகள்

உன்னால் நான் மாற்றினேன்
என் விதிகளை
உன்னை வீழ்த்த அல்ல
உன் முன் வாழ்ந்து காட்ட

Shima Harees
puttalam

நீ கூறியது ஒன்றும் கதையல்ல என்னை ஊமையாக்க விதைத்த விதைகள் நீ பழகியது ஒன்றும் பாசமல்ல என்னை வீழ்த்திய வேஷங்கள் நீ எடுத்தவை ஒன்றும் மாற்றமல்ல என்னை கலங்கடித்த ஏமாற்றங்கள் உன் மௌனம் ஒன்றும்…

நீ கூறியது ஒன்றும் கதையல்ல என்னை ஊமையாக்க விதைத்த விதைகள் நீ பழகியது ஒன்றும் பாசமல்ல என்னை வீழ்த்திய வேஷங்கள் நீ எடுத்தவை ஒன்றும் மாற்றமல்ல என்னை கலங்கடித்த ஏமாற்றங்கள் உன் மௌனம் ஒன்றும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *