உணர்ந்து கொள்ளும் ஆணுக்கும் உணராத ஆணுக்கும் சமர்ப்பணம்

  • 14

சிறு குழந்தை 10 மாடி கட்டிடத்தில் இருந்து நான் சூப்பர் மென் மாறி பறக்க போறன் வாப்பா, இல்லை மகள் என்று கள்ளம் அற்ற சிரிப்போடு பேச்சு, இல்லை நான் பறந்து தான் ஆவன், கொஞ்சம் கனத்த குரலில் இல்லை மகள் அது சரி இல்லை, இல்லை வாப்பா என்று ஓடி போகிறாள் பறப்பதற்கு, தந்தைக்கு மூளை நரம்பு வெடிப்பதை போல ஆத்திரத்தில் ஒரு அடி போட்டார், வாப்பா இல்ல நான் இனி செய்ய மாட்டன். என்று தந்தையை இறுக அணைத்து அழுதது.

தந்தையின் கோபம் தவறா? ஏன் எனில் விழுந்தால் குழந்தை இறந்து விடும் என்று தந்தை அறிந்து அடித்தார் இது தான் பாசம் அன்பு, அதனால் தந்தை அன்பு இழுத்து பிடிப்பதாய் ஆகாது, அந்த நிலையில் தந்தையின் அன்பு அவருக்கு மட்டும் தான் தெரியும். இது தந்தைக்கு மட்டும் அல்ல, சில சமயம் மனைவியின் அன்பும் இவ்வாறு தான் அதன் அன்பை அவளால் மட்டும் தான் தெரிந்து கொள்ள முடியும்.

காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது தாய்க்கு மட்டும் அல்ல, தன் கணவனை இரண்டாவதாய் சுமக்கும் மனைவிக்கும் தான். தாய் தனது வயிற்றிலும் மனைவி அவனை மனதிலும் சுமக்கிறாள்.

உடலை விட உள்ளத்துக்கு தான் வலி அதிகம், உண்மையும் நம்பிக்கையும் சேர்ந்து தான் உறவு. இதில் ஒன்று இழந்து விட்டால் உயிரற்ற உடலாய் (பிணம்) மாறி விடும்.உயிர் மீண்டு விடாது.

வாழ வைப்பதும் வாழ்வதும் நம் கையில் தான், புரிந்து கொண்டால் பிரிந்து செல்ல முடியாது. புரிந்தது தவறானால் பிரிவது தன்னால் நடந்து விடும்.

நிந்தவூர் றிசாமா

சிறு குழந்தை 10 மாடி கட்டிடத்தில் இருந்து நான் சூப்பர் மென் மாறி பறக்க போறன் வாப்பா, இல்லை மகள் என்று கள்ளம் அற்ற சிரிப்போடு பேச்சு, இல்லை நான் பறந்து தான் ஆவன்,…

சிறு குழந்தை 10 மாடி கட்டிடத்தில் இருந்து நான் சூப்பர் மென் மாறி பறக்க போறன் வாப்பா, இல்லை மகள் என்று கள்ளம் அற்ற சிரிப்போடு பேச்சு, இல்லை நான் பறந்து தான் ஆவன்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *