முயற்சித்தால் முடியாதென்னவோ

  • 171
உண்மைக்கதை

ஓர் வறிய குடும்பத்திற்கு மகளொன்று மாத்திரமிருக்க  ஆண் மகவையொன்று கிடைக்க தந்தையார், பெரிய மார்க்க அறிஞரிடம்  தூஆ கேட்குமாறு பிரார்திக்கவே ஆண்மகனொன்று கிடைக்கப்பெறுகிறது.

அடுத்து அவர்கள் அக்காலத்தில் குழந்தையின்  நாற்பதாம் நாள் வைபவத்தை சிறப்பாய் கொண்டாடவே பஞ்சத்தில் அள்ளுண்ட இக் குடும்பமோ பிள்ளையின் நாற்பதாம் நாளுக்கு பிலாக்காய் சமைத்து  பகிர்கின்றதை பார்க்கும் போது அவர்களின் கஷ்டத்தின் உச்சக்கட்டத்தை உணர முடிகின்றது.

குழந்தை வளர வளர  தாயார் பாடசாலை கல்வியை எப்படியேனும் வழங்க இரவிரவாய் கயிறு திரிப்பதை வழக்கமாய் கொண்டு பணம் பெற்றுக் கொள்ளும் வழியில் ஈடுபடுவாள்.

காலையில் இடியப்பத்தை மகனிடம் அனுப்பியும் உழைப்பதுண்டு. சில நேரம் விற்பனை  நடக்காமல் அவை மிஞ்சினால் பகல் ஆகாரமாக அவையே மாறிவிடும்.

குடும்பக் கஷ்டம் காரணமாக தரம் ஐந்து வரை படித்துவிட்டு தானும் பொருளாதாரத்திற்கு உதவிட நினைக்கிறான் அச்சிறுவன். எதை கைவிட்டாலும் தந்தையின் உயரிய வழிகாட்டலில் மார்க்க கல்வியை தொடர்ந்து வருகிறான்.

பல தொழில்களில் முயற்சி செய்த சிறுவனுக்கு எந்நாளும் இயந்திர வாழ்க்கையா என தோன்ற தன் மாமா ஒருவர் செய்யும் மாணிக்கக்கல் பட்டை தீட்டும் தொழில் தனக்கு நல்லது என தென்பட எஹலியகொடைக்கு செல்ல முடிவெடுக்கிறான்.

கையில் இரத்தம் வடியுமளவு பட்டை தீட்டுவதில் ஈடுபட்ட இளைஞன் கடின முயற்சியால் மாணிக்க கற்களை சிறப்பாக பட்டை தீட்ட பழகியதுடன் மாணிக்க கற்களை பிரித்தரியவும் தெரிந்து கொள்கிறான். நாளடையில் இவர் தீட்டும் மாணிக்கல்க்கே இலங்கையில் மவுசு  என்கின்ற நிலை வந்திற்று.

பணம் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக கையில் வர இளைஞனோ தர்மங்களை வழங்குவதை அதிகரித்துக் கொண்டான்.

கொடுத்தால் குறையாமல் கூடும் என தன் உம்மாவிடம் சொல்லும் இளைஞன் செலவழிக்காதே என்று தர்மத்துக்கு முட்டுக்கட்டை போடும் கதைகளை தலையில் எடுத்துக் கொள்ளவதேயில்லை.

பின்னர் மாணிக்க கல் எங்கு கிடைத்தாலும் இவரைத் தேடி வரும் நிலை மாறியதுடன் எலிசபத் மகாராணி இலங்கை வருகை தந்த போது பரிசளிக்கவும் முடிந்தது.

இலங்கையில் மாணிக்கக் கல் கூட்டுத்தாபன உருவாக்கத்தின் முக்கிய கருத்தாவாக இருந்ததுடன், அக்காலத்தியே அரசாங்கம் பண நெருக்கடியை சந்தித்தபோது 15 இலட்சம் வழங்கிட இம் மாமனிதர் நளீம் ஹாஜியாருக்கு முடிந்ததென்றால் முயற்சியுடையவருக்கு முடியாதது என்னவோ?

நளீம் ஹாஜியாரின் வரலாற்றுப் புத்தகத்தின் உதவியுடம் எனதான சிறு தொகுப்பு

Binth Ameen

உண்மைக்கதை ஓர் வறிய குடும்பத்திற்கு மகளொன்று மாத்திரமிருக்க  ஆண் மகவையொன்று கிடைக்க தந்தையார், பெரிய மார்க்க அறிஞரிடம்  தூஆ கேட்குமாறு பிரார்திக்கவே ஆண்மகனொன்று கிடைக்கப்பெறுகிறது. அடுத்து அவர்கள் அக்காலத்தில் குழந்தையின்  நாற்பதாம் நாள் வைபவத்தை…

உண்மைக்கதை ஓர் வறிய குடும்பத்திற்கு மகளொன்று மாத்திரமிருக்க  ஆண் மகவையொன்று கிடைக்க தந்தையார், பெரிய மார்க்க அறிஞரிடம்  தூஆ கேட்குமாறு பிரார்திக்கவே ஆண்மகனொன்று கிடைக்கப்பெறுகிறது. அடுத்து அவர்கள் அக்காலத்தில் குழந்தையின்  நாற்பதாம் நாள் வைபவத்தை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *