ஒரு ஜனாஸாவின் அழுகுரல்

  • 12

ஆ! ஐயோ! எரிகிறதே!
உடலெங்கும் வலிக்கிறதே!
ஸக்ராத்தால் நொந்த உடம்பு
வெந்து போகிறதே!
என் சொல்லொணாத் துயர்
உமக்கெல்லாம் புரிகிறதா?

எனக்கான கபன் எங்கே?
கரமேந்திடும் தொழுகை எங்கே?
ஆறடிக் கப்ரு எங்கே?
என்னைத் தவிர எல்லாமே
புதைக்கப்பட்டு விட்டனவா?

ஓரடி தூரத்தில் பரவாத தொற்று
ஆறடி ஆழத்திலிருந்து
வேரோடி விருட்சமாய்
நிலத்தைக் கிழித்து வெளியேறிட
கொரோனா ஒன்றும் விதையல்லவே

சுகாதாரம் சொல்லும்
உலக சொந்தங்களே
சோகம் தெரிவிக்கையில்
திருநாட்டு உறவுகளோ
சகுனி வேடம் பூணுகின்றனரே

இன பேதத்தை
பிணத்திடம் காட்டி
பிழைத்துக் கொண்டிருக்கும்
தலைக்கனம் மிகுந்தோரே!
முறை தவறும் உமக்கான
இறை வேதனை
வெகு தொலைவிலில்லை

தீச்சுவாலையின் நாக்குகள்
தீண்டிய இடமெல்லாம்
வெந்த புண்ணில்
வேல் பாய்ந்தாற் போல்
நொந்து போயுள்ளனவே

ஆ! எரிக்கிறதே! எரிகிறதே!
என்னைப் போல் இனி யாரும்
எரிதழலில் வெந்து
சாம்பலாய் உருக்குலையாதிருக்க
உருக்கமுடன் பிரார்த்தியுங்கள்!

முஸ்லிம் தலைமைகளே!
முகம் சோர்ந்து
முடங்கிப் போயிடாமல்
முடிவினைத் தொடும் வரை
முயற்சியுடன் போராடுங்கள்!

முஸ்லிம்களின் உணர்வுகளை
உயிருடன் எரித்திடாது
என்றென்றும் காத்திடுங்கள்!

ILMA ANEES
3RD YEAR
SEUSL

ஆ! ஐயோ! எரிகிறதே! உடலெங்கும் வலிக்கிறதே! ஸக்ராத்தால் நொந்த உடம்பு வெந்து போகிறதே! என் சொல்லொணாத் துயர் உமக்கெல்லாம் புரிகிறதா? எனக்கான கபன் எங்கே? கரமேந்திடும் தொழுகை எங்கே? ஆறடிக் கப்ரு எங்கே? என்னைத்…

ஆ! ஐயோ! எரிகிறதே! உடலெங்கும் வலிக்கிறதே! ஸக்ராத்தால் நொந்த உடம்பு வெந்து போகிறதே! என் சொல்லொணாத் துயர் உமக்கெல்லாம் புரிகிறதா? எனக்கான கபன் எங்கே? கரமேந்திடும் தொழுகை எங்கே? ஆறடிக் கப்ரு எங்கே? என்னைத்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *