ஆகாயம்

  • 190

தூரத்தே தெரியும்
தூண் இன்றி நிற்கும்
தூய்மையின்
அடையாளம்.

பரந்து விரிந்த
பாரினை
அடைகாக்கும்
பாதுகாவலன்.

நிலம் செழிக்க
நீர் பாெழியும்
கார்மேகக் கடலோன்.

பறந்து திரியும்
பட்சிகளின்
மைதானம்.

நீலக் கடலின்
நீண்ட நாள்
காதலன்.

அதிகாலை அவதரித்து
அந்திமாலை
மறையும்
ஆதவனின் அன்னை.

விண்மீன்கள்
வெளிச்சமிடும்
வெண்திரை.

வெண் நிலா
வலம் வரும்
நீண்ட விரிந்த
கம்பளம்.

அகிலத்தின் மேல்
ஆதாரமின்றிய
அழகிய
ஆச்சரியமான
போர்வை
ஆகாயம்.

Rushdha Faris
South Eastern University of Sri Lanka.

தூரத்தே தெரியும் தூண் இன்றி நிற்கும் தூய்மையின் அடையாளம். பரந்து விரிந்த பாரினை அடைகாக்கும் பாதுகாவலன். நிலம் செழிக்க நீர் பாெழியும் கார்மேகக் கடலோன். பறந்து திரியும் பட்சிகளின் மைதானம். நீலக் கடலின் நீண்ட…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *